Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

கோவாவில் வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிய பிரதமர்

கோவாவில் வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிய பிரதமர்


மோபா விமானநிலையம், டூயாம் மின் நகரம் ஆகிய திட்டங்களுக்கு ஷியாமா பிரசாத் முகர்ஜீ அரங்கில் நடந்த விழாவில் அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி.

மேலும், சுரங்க எதிர்நடவடிக்கை கலன்கள் கட்டுவதற்கான உட்கட்டமைப்பு துவக்கம், மற்றும் ஐந்து கடற்கரை ரோந்துக் கலன்கள் கட்டுவதற்கான அடிக்கல்லையும் பிரதமர் மோடி நாட்டினார்.

PM India

நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் கோவா நகரில் BRICS மாநாட்டை வெற்றிகரமாக நடத்த உதவிய குழுவிற்கு வாழ்த்துகளை தெரிவித்ததோடு, கோவா அடைந்திருக்கும் முன்னேற்றத்திற்கு அதன் அரசை பாராட்டினார்.

விமானநிலைய திட்டத்தை பொறுத்தவரை முன்னால் பிரதமர் வாஜ்பேயியின் வாக்குறுதி நிறைவேறியதில் மகிழ்ச்சி என்று குறிப்பிட்ட பிரதமர் இந்த திட்டம் கோவா சுற்றுலாத்துறைக்கு மிகவும் உதவும் என்றார்.

மின் நகர திட்டத்தைப் பற்றி குறிப்பிட்டபோது டிஜிட்டல் துறையில் வல்லமையுள்ள நவீன இளைஞர்களால் இன்ற கோவா கட்டமைக்கப்படுகிறது என்றும், அதற்கு இந்தியாவையே மாற்றும் ஆற்றல் உள்ளது என்றும் குறிப்பிட்டார்.

 

PM India

500ரூ மற்றும் 1000ரூ நோட்டுகளை செல்லாது என அறிவித்த மத்திய அரசின் திட்டத்தைப் பற்றி பேசிய பிரதமர் நவம்பர் 8ஆம் தேதி நிறைய மக்கள் நிம்மதியாக தூங்கிய அதே சமயம் பலர் இன்னமும் தூக்கமின்றி தவிப்பதாக தெரிவித்தார். கறுப்பு பணத்தை ஒழித்து நேர்மையான குடிமக்களுக்கு உதவும் வகையில் மத்திய அரசு இந்த திட்டத்தை செயல்படுத்தியிருப்பதை தெரிவித்த பிரதமர், இந்த திட்டம் வெற்றிபெற உதவும் அனைவருக்கும் நன்றிகளை உரித்தாக்கினார்.  மக்களின் வலி தனக்கும் புரிகிறது என்றும், இந்த நடவடிக்கைகள் ஆணவத்தால் விளைந்தவைகள் அல்ல என்றும் தெரிவித்தார். மேலும் வறுமை என்றால் என்ன என்றும், மக்களின் பிரச்சினைகளும் தனக்கு புரியும் என்றார். 

2014ல் தேசத்தை ஊழலில் இருந்து விடுவிக்க மக்கள் தனக்கு வாக்களித்ததை நினைவுகூர்ந்த பிரதமர், கறுப்புப் பணத்தை ஒழிக்க மத்திய அரசு எடுத்துவரும் நடவடிக்கைகள் குறித்தும் தெரிவித்தார்.

இந்தியாவின் பணம் இங்கே கொள்ளையடிக்கப்பட்டு வெளிநாட்டுக்கு அனுப்பப்பட்டிருந்தால் அதை கண்டுபிடிக்க வேண்டிய கடமை நம்முடையது எனப் பேசிய பிரதமர், பதவி நாற்காலியில் அமர்ந்திருப்பதற்காக தான் பதவிக்கு வரவில்லை என்றும், தனது குடும்பம், வீடு ஆகியவற்றை துறந்தே தேசத்துக்கு சேவை செய்ய வந்திருப்பதாகவும் தெரிவித்தார்.