Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

சண்டிகரில் உள்ள இந்திய மண் மற்றும் நீர் பாதுகாப்பு ஆராய்ச்சி மையத்திற்கு சொந்தமான 13111.55 சதுர மீட்டர் நிலத்தை அரியானா ஊரக வளர்ச்சித் துறைக்கு வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.


பிரதமர் மோடி தலைமையில் கூடிய மத்திய அமைச்சரவை சண்டிகரில் உள்ள இந்திய மண் மற்றும் நீர் பாதுகாப்பு ஆராய்ச்சி மையத்திற்கு (IISWC) சொந்தமான நிலத்தை, அரியானா ஊரக வளர்ச்சித் துறைக்கு (HUDA) பஞ்சகுலாவில் உள்ள மானசா தேவி காம்பிளக்ஸில் 60அடி அகல புறவழிச் சாலை அமைக்கும் விதத்தில், கீழுள்ள முறையில் கொடுக்க ஒப்புதல் அளித்துள்ளது.

அ) IISWC ஆராய்ச்சி மையத்திற்கு சொந்தமான 13,290.30 சதுர மீட்டர் நிலம் இன்றைய தேதியில் விற்கப்படும் விலைக்கே HUDAவிற்கு வழங்கப்படும்.

ஆ) HUDAவிற்கு சொந்தமான 178.75 சதுர மீட்டர் நிலம் சண்டிகர் IISWC ஆராய்ச்சி மையத்திற்கு வழங்கப்படும்.

இ) HUDA மற்றும் IISWCயிடம் உள்ள தலா 410 சதுர மீட்டர் நிலம் இருதரப்புகளிடையே பரிமாறிக்கொள்ளப்படும்.

பஞ்சகுலா மானசா தேவி காம்பிளக்ஸில் (MDC) சாலை அமைப்பதற்காக பரிமாறிக்கொள்ளப்படும் அரசு நிலம், அந்தப்பகுதியின் வளர்ச்சிக்கும், மேம்பாட்டுக்கும் துணை செய்வதோடு, வேலைவாய்ப்பையும் பெருக்கும். ஒட்டுமொத்த பொருளாதாரத்தை முன்னேற்றும் வகையில், முக்கிய துறைகளில் உட்கட்டமைப்பை மேம்படுத்தும் அரசு கொள்கையின் ஒரு பகுதியாக இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது