Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

சண்டிகரில் வளர்ச்சித் திட்டங்கள் தொடக்க விழாவின் முக்கிய அம்சங்களைப் பிரதமர் பகிர்ந்துள்ளார்

சண்டிகரில் வளர்ச்சித் திட்டங்கள் தொடக்க விழாவின் முக்கிய அம்சங்களைப் பிரதமர் பகிர்ந்துள்ளார்


பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (17.07.2026) சண்டிகரில் நடைபெற்ற வளர்ச்சித் திட்டங்களின் தொடக்க விழாவின் சில முக்கிய அம்சங்களைப் பகிர்ந்துள்ளார். முறையான தேசிய முன்னேற்றத்திற்கான ஒரு முன்மாதிரி நகரமாக சண்டிகர் விளங்குவதை எடுத்துரைத்துள்ள திரு நரேந்திர மோடி, சிறந்த வாழ்க்கை முறையை உறுதி செய்வதில் அந்நகரத்திற்கு உள்ள நற்பெயரை சுட்டிக்காட்டியுள்ளார்.

 

இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி வெளியிட்டுள்ள பதிவுகளில் கூறியிருப்பதாவது:

 

“மருத்துவ வசதிகளையும் உள்கட்டமைப்பையும் மேம்படுத்துவதில் சண்டிகர் மக்களின் ஆர்வம், அவர்களுக்குள் ஒரு புதிய உற்சாகத்தை நிரப்பப் போகிறது.”

 

“சண்டிகர் மக்கள் தூய்மை குறித்த ஒரு புதிய விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளனர். இங்குள்ள எனது குடும்ப உறுப்பினர்களுக்கு எனது சிறப்பு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இதுபோன்ற தூய்மை இயக்கங்கள் இன்று நாட்டிற்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்து வருகின்றன.”

 

“கடந்த 12 ஆண்டுகளில், நமது அரசு நாட்டின் சுகாதாரத் திறன்களை மேம்படுத்தி, மக்களுக்கு மேம்பட்ட மருத்துவ சேவைகளை வழங்கியுள்ளது. நமது முயற்சிகளின் ஒரு முக்கிய விளைவாக, இந்தியா மருத்துவச் சுற்றுலாவிற்கான ஒரு முக்கிய இடமாக உருவெடுத்து வருகிறது.”

 

“எங்கள் கவனம் நோய்களுக்குச் சிகிச்சை அளிப்பதில் மட்டுமல்லாமல், நோய்த்தடுப்பு சுகாதாரப் பராமரிப்பிலும் இருந்து வருகிறது. இது நமது தாய்மார்களுக்கும், சகோதரிகளுக்கும், ஏழை சகோதர சகோதரிகளுக்கும், நடுத்தர வர்க்கத்தினருக்கும் பெரிதும் பயனளிக்கிறது.”

 

(Release ID : 2285873)

****

TV/PLM/SH