பி.எம்.இந்தியா
தற்போதுள்ள சர்க்கரைப் பதுக்கல் தொடர்பான உத்தரவின் செல்லுபடியாகும் காலத்தை 29.10.2016 முதல் 28.04.2017 வரையான ஆறுமாத காலத்துக்கு நீடிக்க பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான முக்கிய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது.
இந்த முடிவின் முக்கிய நோக்கம் மத்திய அரசின் ஒப்புதலுடன் மாநில அரசுகள் கட்டுப்பாடு உத்தரவுகளை சர்க்கரை இருப்பு வைக்கும் அளவைக் கட்டுப்படுத்தும் வகையில் அவை விரும்பும் போது பிறப்பிக்க வகை செய்வது ஆகும். பொது மக்களுக்கு சர்க்கரையை நியாயமான விலையில் கிடைக்கச் செய்வதை மேம்படுத்தவும் இதனை பதுக்கி வைத்து கொள்ளை லாபம் சம்பாதிப்பதைக் கட்டுப்படுத்தவும் எடுக்கப்படும் முயற்சிகளுக்கு இந்த நடவடிக்கை உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பின்னணி:
மாநிலங்கள் சர்க்கரையைப் பொறுத்தவரை அதன் வழங்குதல், விநியோகம், விற்பனை, உற்பத்தி, இருப்பு வைத்தல், சேமித்தல், கொள்முதல் செய்தல் மற்றும் எடுத்துச் செல்லுதல் ஆகியவை தொடர்பான கட்டுப்பாடுகளைக் 28.10.2016 வரையிலான 6 மாத காலத்திற்கு கொண்டுவர உதவுவது என 27.04.2016 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. அதன்படி 29.04.2016 தேதியிட்ட எண் ஜி.எஸ்.ஆர். 1984 (ஈ) அறிவிக்கையின்படி நுகர்வோர் நலத்துறை குறிப்பிட்ட உணவுப் பொருள் திருத்த சட்டம் 2016 –னை நீக்க உத்தரவிட்டது. இதன் மூலம் மாநில அரசுகள் சர்க்கரை மீது 28.10.2016 வரை இருப்பு வரம்பை விதிக்க வகை செய்யப்பட்டது. இதனை அடுத்து இந்த உத்தரவு தற்போதுள்ள அனைத்து உத்தரவுகளுடன் இணைக்கப்பட்டது. இந்த நடவடிக்கை அத்தியாவசியப் பொருட்கள் தொடர்பான உத்தரவுகள் மற்றும் ஒன்றிணைக்கப்பட்ட 29.09.2016 தேதியிட்ட ஆணை ஜி.எஸ்.ஆர் 929 (ஈ) –ன் படி எடுக்கப்பட்டது. சமீப காலமாக சர்க்கரையின் சராசரி சில்லறை விலை உயர்ந்து வருகிறது என அறியப்பட்டது. ஆலைகளில் போதுமான சர்க்கரை இருப்பில் உள்ள நிலையிலும் இந்த விலைவாசி உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வு செயற்கையாக வர்த்தகர்கள் மற்றும் மொத்த விற்பனையாளர்கள் சர்க்கரையைப் பதுக்கி வைத்ததன் காரணமாக ஏற்பட்டது. முந்தைய காலங்களில் இத்தகைய நிலவரங்கள் சர்க்கரையின் இருப்பு வைக்கும் வரம்பைக் கட்டுப்படுத்தும் அதிகாரத்தைப் பயன்படுத்துவதன் மூலம் கையாளப்பட்டது. தற்போதைய உத்தரவின் செல்லுபடி காலம் 28.10.2016 வுடன் முடிவடைகிறது. இதன் காரணமாக 29.09.2016 தேதியிட்ட மத்திய ஆணை ஜி.எஸ்.ஆர் எண் 929 (ஈ) ஐ 28.04.2017 வரை நீட்டிக்க வேண்டியது அவசியமாகிறது.
இப்போதைய முடிவினை மத்திய அரசு அறிவிக்கையாக வெளியிடும். இதனை மாநில அரசுகளுக்கும் யூனியன் பிரதேசங்களுக்கும் தகவலுக்காக அனுப்பி வைக்கும். மாநில அரசுகளும் யூனியன் பிரதேசங்களும் தங்கள் அதிகாரங்களைப் பயனப்படுத்தி மத்திய அரசின் முன் அனுமதியுடன் கட்டுப்பாட்டு உத்தரவுகளைப் பிறப்பிக்கலாம்.