Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

சர்க்கரை சம்பந்தப்பட்ட மத்திய அரசின் உத்தரவின் ஆயுள் காலத்தை 6 மாதங்களுக்கு நீட்டிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்


சர்க்கரை சம்பந்தப்பட்ட 27.10.2016 தேதியிட்ட தற்போது அமலில் உள்ள மத்திய அரசின் உத்தரவின் ஆயுள் காலத்தை மேலும் 6 மாதங்களுக்கு அதாவது 29.04.2017 முதல் 28.10.2017 வரை நீட்டிக்க பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்தது.

மாநில அரசுகள் சர்க்கரையின் இருப்பு வரம்பு / உரிமம் வழங்குவதற்கான நிபந்தனைகள் ஆகியவற்றை தேவைப்படும் போது மத்திய அரசின் முன் அனுமதியுடன் கட்டுபாட்டு உத்தரவுகளை பிறப்பிக்க உதவுவது மத்திய அமைச்சரவையின் இந்த முடிவுக்கான முக்கிய நோக்கமாகும். பொதுமக்களுக்கு நியாயமான விலையில் சர்க்கரை கிடைப்பதை மேம்படுத்துவதற்கான முயற்சிகளுக்கு இது உதவும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. மேலும் பதுக்குதல் மற்றும் கொள்ளை லாபம் சம்பாதித்தல் போன்ற போக்குகளை இது கட்டுப்படுத்தும்.

இந்த முடிவு பற்றிய மத்திய அரசின் அறிவிக்கை மாநிலங்களுக்கு யூனியன் பிரதேசங்களுக்கும் அவற்றின் மேல் நடவடிக்கைக்காக அனுப்பி வைக்கப்படும்.


பின்னணி

மத்திய அமைச்சரவை 27.10.2016 அன்று நடைபெற்ற கூட்டத்தில் மாநில அரசுகள் சர்க்கரையின் வழங்கல், விநியோகம், விற்பனை, உற்பத்தி, இருப்பு நிலைமை, சேமித்தல், கொள்முதல் செய்தல், கொண்டு செல்லுதல் போன்ற நடவடிக்கைகள் வரைமுறைப்படுத்த 6 மாதகாலத்துக்கு அனுமதி அளிக்க முடிவு செய்த்து. இதன் அடிப்படையில் 27.10.2016 தேதியிடப்பட்ட எண் எஸ்.ஓ. 3341(இ) ஆணையை பிறப்பித்தது இதன்படி தொடர்புடைய நிர்வாகத்துறை, மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் சர்க்கரை சம்பந்தப்பட்ட இருப்பு வரம்பு போன்றவற்றை முடிவு செய்துக் கொள்ள வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டது. இதற்கென 29.09.2016 தேதியிடப்பட்ட ஜி.எஸ்.ஆர். 929(இ) –ல் அறிவிக்கையாக வெளியிடப்பட்ட குறிப்பிட்ட உணவுப் பொருட்கள் ஆணை 2016 –ன் உரிம நிபந்தனைகள் நீக்குதல் பிரிவில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.

உணவு மற்றும் பொது விநியோகத் துறை சர்க்கரை விலைகளை முறையாக சர்க்கரை ஆலை வாயில்களிலும் உள்ளூர் சந்தைகளிலும் தொடர்ந்து கண்காணித்து வருகிறது. 2016 செப்டம்பரில் சில்லரை விலைகள் திடீரென உயர்ந்த்து கவனத்துக்கு வந்த்து இந்த விலை உயர்வு உண்மையான இருப்புக் குறைவு காரணமாக அன்றி மனப்பான்மை காரணமானது என காணப்பட்டது. சர்க்கரை சப்ளையை வரன்முறை படுத்துவதற்காகவும் எதிர்ப்பார்ப்பு அடிப்படையிலான விலை நிர்ணய பிரச்சினையை சமாளிக்கவும் தேவை அடிப்படையிலான உரிய இருப்பு வரம்பை நிர்ணயிப்பது அத்தியாவசியம் ஆகிறது. மேலும் நடப்பு பருவத்தில் உபயோகத்திற்கு போதுமான இருப்பு இருந்தபோதிலும் கடந்த ஆண்டில் உற்பத்தி குறைவு காரணமாக எதிர்ப்பார்க்கப்பட்ட பதுக்குதல் மற்றும் கொள்ளை லாப நடவடிக்கைகளை கருத்தில் கொண்டு இருப்பு வரம்பு உத்தரவை மேலும் நீட்டிப்பது தேவைப்படுகிறது.

சர்க்கரை துறைக்கு ஆதரவு அளிக்க சர்க்கரை தொழிலுக்கு மத்திய அரசு சமீபத்தில் ரூ.4305 கோடி ரூபாய் சலுகை கடன் உதவியை அறிவித்தது. இந்த கடன் தொகை சர்க்கரை ஆலைகள் தொடர்பில் கரும்பு விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக செலுத்தப்பட்டதால் சுமார் 32 லட்சம் கரும்பு விவசாயிகள் பயன் அடைந்தனர். மேலும் செயல் திறன் அடிப்படையிலான உற்பத்தி மானியம் அளிக்கப்பட்ட கரும்பின் விலை குவின்டால் ஒன்றுக்கு ரூ.4.50 வீதம் கணக்கிடப்பட்டு சர்க்கரை ஆலைகள் சார்பில் கரும்பு விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக செலுத்தப்பட்டது.

உள்ளூர் விலைகளில் நியாயமான அளவில் பராமரிக்க மத்திய அரசு ஆலைகள் / சர்க்கரை சுத்திகரிப்பவர்கள் ஆகியோருக்கு கச்சா சர்க்கரையை இறக்குமதி தீர்வை ஏதுமின்றி குறிப்பிட்ட அளவான 5 லட்சம் மெட்ரிக் டன் அளவிற்கு இறக்குமதி செய்து கொள்ள அனுமதி அளித்தது. இந்த குறிப்பிட்ட அளவு இறக்குமதி சர்க்கரை, இந்த தொழிலில் ஈடுபட்டிருப்போரின் பணப்புழக்க தன்மையை மேம்படுத்துவதுடன் கரும்பு விவசாயிகளுக்கான பாக்கிகளை செலுத்துவதற்கும் உதவும்.