பி.எம்.இந்தியா
பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் தலைமையில் கூடிய மத்திய அமைச்சரவை, சர்வதேச அறிவியில் ஆழ்துறை ஆராய்ச்சி அமைப்பில் உறுப்பினராவதற்காக, ஹெல்ம்ஹோல்ட்ஸ் போட்ஸ்டாம் ஜெர்மன் ஆராய்ச்சி மையத்தோடு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதற்கு, ஏற்பளித்தது. இந்த மையம், அரசு நிதி உதவி பெறும், பிரான்டென்பர்க் மாநிலத்தைச் சேர்ந்த ஜெர்மன் மையமாகும்.
ஜெர்மன் ஆராய்ச்சி மையத்தோடு ஐந்தாண்டுகளுக்கு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதன் மூலம், அறிவியல் அகழ்வாய்வில் நிபுணத்துவம் பெற்ற நிபுணர்களோடு கொய்னா பகுதியில் இந்திய விஞ்ஞானிகள் ஆழ்துளை ஆராய்ச்சியில் ஈடுபட முடியும். இந்த ஒப்பந்தத்தின் மூலமாக ஜெர்மன் ஆராய்ச்சி மையத்தில் இந்தியாவுக்கு இரண்டு இடங்களும், ஆளுநர்கள் சபையின் செயற்குழுவில் உறுப்பினராகும் தகுதியும் கிடைக்கப் பெறும். மேலும், ஜெர்மன் ஆராய்ச்சி மையம் மத்திய பூமி அறிவியல் விஞ்ஞானிகளுக்கு கொய்னா ஆழ்துளை ஆராய்ச்சிக்கு தேவையான தொழில்நுட்ப உதவி மற்றும் மனிதவள மேம்பாடு மற்றும் பயிற்சிக்கு உதவி புரியும்.
ஜெர்மன் ஆராய்ச்சி மையத்தின் உறுப்பினராகும் இந்தியாவைச் சேர்ந்த விஞ்ஞானிகள் மற்றும் பொறியாளர்கள், ஜெர்மன் ஆராய்ச்சி மைய நிதி உதவியோடு நடக்கும் பல்வேறு ஆழ்துளை ஆராய்ச்சித் திட்டங்களில் பங்கெடுக்க வாய்ப்பு கிடைக்கும். நில நடுக்கம் மற்றும் நில அதிர்வு தொடர்பான ஆராய்ச்சிகளின் மூலம் புதிய விஷயங்களை நமது விஞ்ஞானிகள் அறிந்து கொள்ள முடியும்.