Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

சர்வதேச எண்ணெய் மற்றும் எரிவாயு நிபுணர்களுடன் பிரதமரின் கலந்துரையாடல்


சர்வதேச எண்ணெய் மற்றும் எரிவாயு நிபுணர்களுடன் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று கலந்துரையாடினார். இந்த கலந்துரையாடல் இரண்டு மணி நேரம் நீடித்தது. இதில் மத்திய அமைச்சர்கள் திரு அருண் ஜெட்லி, திரு பியுஷ் கொயல், திரு தர்மேந்திரா பிரதான், நிதி ஆயோக்கின் துணை தலைவர் திரு அரவிந்த் பானகாரியா, நிதி ஆயோக்கின் உயர் அலுவலர்களும் அரசின் அலுவலர்களும் கலந்துக் கொண்டனர்.

அதிகரித்து வரும் இந்தியாவின் எரிசக்தி கலவையின் பங்கு, இந்தியாவின் எண்ணெய் மற்றும் எரிவாயு முற்றாய்வில் புதிய முதலீடு, ஒழுங்குமுறை திட்டம், எண்ணெய் மற்றும் எரிவாயு சொத்துக்களை சர்வதேச கையகப்படுத்துதல், வளர்ந்து வரும் எரிவாயு மற்றும் நீலகரி படுக்கை மீத்தேன் வாயு, இந்தியாவில் உற்பத்தி செய்வோம் திட்டத்திற்கு சம்பந்தமான எண்ணெய் மற்றும் எரிவாயு துறை சார்ந்த வாய்ப்புகள் ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டது.

இத்துறையில் புதிய மாற்றங்கள், முதலீடுகளை ஈர்ப்பது, தொழில்நுட்ப மேம்பாடு, மனித வள வளர்ச்சி ஆகிய தனது கனவுகளை பிரதமர் எடுத்து உரைத்தார்.