Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

சர்வதேச தொழிலாளர் அமைப்பின் குறைந்தபட்ச வயதிற்கான சாசனம், 1973 (எண் 138) மற்றும் மோசமான குழந்தை தொழிலாளர் வடிவங்கள் சாசனத்தின் பகுதிகள், 1999 (எண்.182) ஆகியவற்றுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.


பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை சர்வதேச தொழிலாளர் அமைப்பின் அடிப்படையான இரண்டு சாசனங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. அவை, முறையே வேலைக்கு ஆள் சேர்க்கும்போது கடைபிடிக்க வேண்டிய குறைந்தபட்ச வயது குறித்த குறைந்தபட்ச வயதிற்கான சாசனம், 1973 (எண் 138) மற்றும் குழந்தைகள் மோசமாக நடத்தப்படுவதையும், அதை உடனே தடுத்து நிறுத்துவதையும் குறித்த மோசமான குழந்தை தொழிலாளர் வடிவங்கள் சாசனத்தின் பகுதிகள், 1999 (எண்.182) ஆகும். 1919ல் உருவான சர்வதேச தொழிலாளர் அமைப்பின் துவக்க உறுப்பினர்களின் இந்தியாவும் அடக்கம். தற்போது இந்த அமைப்பில் 187 உறுப்பு நாடுகள் உள்ளன. சாசனங்களையும், பரிந்துரைகளையும், நடைமுறைகளையும் சர்வதேச தரத்தில் மாற்றியமைப்பதே இந்த அமைப்பின் மைய நோக்கம். இந்தியா இதுவரை 45 சாசனங்களை உறுதியேற்றுள்ளது. அதில் 42 தற்போது நடைமுறையில் உள்ளது. அவற்றில் 4 அடிப்படை சாசனங்களாகும்.

பின்னணி

குழந்தை தொழிலாளர் பிரச்சினையை பொறுத்தவரை அரசு கடுமையான சட்டங்களை இயற்றுவது, திட்டங்களை உருவாக்குவது என பல்முனை திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. எனினும் தற்போது 14 வயதுக்கு குறைவான குழந்தைகளை பணியிலோ, வேறு ஏதேனும் நடைமுறைகளிலோ ஈடுபடுத்துவதை முற்றிலும் தடை செய்திருக்கும் குழந்தைகள் மற்றும் வயதுவந்த குழந்தை தொழிலாளர் (தடுப்பு மற்றும் ஒழுங்குமுறை) சட்டம் 1986ஐ முழுமையாக அமல்படுத்துவதில்தான் நம் நாட்டின் குழந்தைகளின் பாதுகாப்பான எதிர்காலம் அடங்கியிருக்கிறது என்பதால் , அரசு அதை உறுதி செய்யும் நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது. குழந்தைகள் தொழிலில் ஈடுபடுத்தப்படுவதை முற்றிலும் ஒழிக்கும் வண்ணம் அரசு சமீபத்தில் எடுத்துவரும் நடவடிக்கைகள், 2030ன் தக்கவைத்துக் கொள்ளக் கூடிய கொள்கைகளில் முக்கியப் பங்கு வகிக்கிறது. சாசனம் 138 மற்றும் சாசனம் 182 ஆகியவற்றை ஏற்றுள்ளது நாட்டில் குழந்தை தொழிலாளர்களை ஒழிப்பது குறித்த பயணத்தில் முக்கியமான நடவடிக்கையாகும். தற்போது சாசனம் எண் 138 169 நாடுகளிலும், சாசனம் 182, 180 நாடுகளிலும் ஏற்கப்பட்டுள்ளது. எனவே இந்த இரண்டு அடிப்படையான சாசனங்களை ஏற்பதன் மூலம் குழந்தைகளை பணியில் அமர்த்துவதற்கு எதிரான சட்டங்களை தத்தெடுத்து செயல்படுத்தும் நாடுகளின் வரிசையில் இந்தியாவும் சேர்ந்துள்ளது.

***