Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

சர்வதேச விண்வெளி உச்சி மாநாட்டில் பிரதமர் திரு நரேந்திர மோடி காணொலி காட்சி வாயிலாக உரையாற்றினார்

சர்வதேச விண்வெளி உச்சி மாநாட்டில் பிரதமர் திரு நரேந்திர மோடி காணொலி காட்சி வாயிலாக உரையாற்றினார்


பிரான்ஸ் நாட்டின் பாரிஸில் இன்று நடைபெற்ற சர்வதேச விண்வெளி உச்சி மாநாட்டில் பிரதமர் திரு நரேந்திர மோடி காணொலி காட்சி வாயிலாக உரையாற்றினார். உரிய நேரத்தில் முன்முயற்சி மேற்கொண்டு அன்புடன் அழைப்பு விடுத்ததற்காக அதிபர் திரு இமானுவேல் மேக்ரானுக்கு பிரதமர் நன்றி தெரிவித்தார். வரலாற்றுச் சிறப்புமிக்க இக்கூட்டத்தில் பங்கேற்பது தமக்கு மகிழ்ச்சி அளிப்பதாகக் கூறினார். முதலாவது சர்வதேச விண்வெளி உச்சிமாநாட்டில் ஒரு அங்கமாக இருப்பது தமக்கு மகிழ்ச்சி அளிப்பதாக திரு மோடி தெரிவித்தார்.

விண்வெளி மீதான மனித சமூகத்தில் நீடித்த ஈர்ப்பு குறித்து குறிப்பிட்ட பிரதமர்  பல நூற்றாண்டுகளாக மனித கற்பனைக்கு விண்வெளி உத்வேகம் அளிப்பதாகக் கூறினார். பருவநிலை, பயிர்கள் முதல் சமூகங்கள் வரை இதற்கான எல்லை தற்போது பூமியில் அன்றாட வாழ்க்கையை வடிவமைப்பதாக சுட்டிக்காட்டினார்.

விண்வெளி சூழலில் அதிகரித்து வரும் சிக்கலான தன்மை குறித்து எடுத்துரைத்த பிரதமர், சுற்றுப்பாதைகள் பெரும் நெரிசல் ஆவதாகவும், தொழில்நுட்பங்கள் அதிக சக்திமிக்கதாகவும், பங்கேற்பாளர்கள் அதிகரித்து வருவதாகவும் குறிப்பிட்டார். உலகளாவிய ஒத்துழைப்புகள் குறுகிய கால நன்மைகளைவிட நீண்டகால நிலைத்தன்மைக்கு முன்னுரிமை அளிக்க வேண்டுமென்று வலியுறுத்தினார். நம்முடைய தேர்வுகள் தெளிவாக இருக்க வேண்டுமென்றும், மோதலுக்குப் பதிலாக ஒத்துழைப்பு, குறுகியகால நன்மைக்குப் பதிலாக நீடித்த தன்மை, விலக்குதலுக்கு மாற்றாக அனைவரையும் உள்ளடக்குதல் என்பதை பின்பற்ற வேண்டுமென்று திரு மோடி குறிப்பிட்டார்.

சர்வதேச சட்டம், உரையாடல், பலதரப்பு ஒத்துழைப்பின் பாதுகாப்பான, அமைதியான, நீடித்த விண்வெளி களத்தை தாங்கள் ஆதரிப்பதாகவும் திரு மோடி தெரிவித்தார். வெளிப்படையான ஆராய்ச்சியின் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்த பிரதமர், இந்தியாவின் விண்வெளிப் பயணம் உலகளாவிய நலனை சரியாக பிரதிபலிக்கிறது என்று கூறினார். உலகளாவிய முன்னேற்றத்திற்கு தகவல்களை அறநெறிப்படி பகிர்ந்துகொள்வது மிக முக்கியம் என்று அவர் தெரிவித்தார். அறிவியல் தரவுகள் வெளிப்படைத் தன்மையுடனும், நேர்மையுடனும், பொது நன்மைக்கு பயன்படவேண்டுமென்று திரு மோடி கூறினார்.

நாட்டின் விண்வெளித்துறையின் சிறப்பான வளர்ச்சி குறித்து எடுத்துரைத்த பிரதமர், வானிலை முன்னறிவிப்பு, பேரிடர் மேலாண்மை, வழிசெலுத்துதல் ஆகியவற்றில் செயற்கைகோள் தொழில்நுட்பம் அளிக்கும் நடைமுறைப் பயன்கள் குறித்து எடுத்துரைத்தார். இதுபோன்ற மேம்பட்ட திறன்கள் விவசாயிகள், மீனவர்கள் உள்ளிட்ட அடிப்படை சமூகத்தினருக்கு நேரடியாக பயனளிக்கின்றனர் என்று அவர் கூறினார். இந்த செயல்பாட்டின் மையமாக உள்ள இஸ்ரோ தனது  சிறப்பான செயல்பாடுகள், சிக்கனமான விண்வெளித் திட்டங்களுக்காக உலகளாவிய பாராட்டைப் பெற்றுள்ளது என்று  திரு மோடி தெரிவித்தார்.

விண்கல செலுத்துதல் சேவைகளில் இந்தியாவின் சர்வதேச அளவிலான கூட்டு முயற்சிகள் குறித்து குறிப்பிட்ட பிரதமர், உள்நாட்டு ராக்கெட்டுகள் மூலம் 34 நாடுகளின் 430-க்கும் அதிகமான செயற்கைகோள்கள் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டதை  குறிப்பிட்டார். இஸ்ரோவின் தொழில்நுட்பங்களும் ஒத்துழைப்புகளும் இந்தியாவுக்கு மட்டுமின்றி பல்வேறு நாடுகளுக்கு பயனளிப்பதாக திரு மோடி கூறினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2308703&reg=3&lang=1

 ***

TV/IR/PS/RJ