Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

சிங்கப்பூர் பிரதமருக்கு பிரதமர் நரேந்திர மோடியின் அன்பளிப்பு

சிங்கப்பூர் பிரதமருக்கு பிரதமர் நரேந்திர மோடியின் அன்பளிப்பு


சிங்கப்பூர் பிரதமர் திரு. லீ ஸீன் லூங்க்கு இந்தியப் பிரதமர் திரு. நரேந்திர மோடி 1845ம் ஆண்டுக்கு முன்பு வரையப்பட்ட சிங்கப்பூர் தீவின் வரைபடத்தை அன்பளிப்பாக வழங்கினார்.

இந்த வரைபடம் 52 அங்குலம் நீளமும் 52 அகலமும் உடையது. 1842 முதல் 45 வரை மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் அடிப்படையில் இந்த வரைபடம் தயாரிக்கப்பட்டது. இந்த வரைபடம் சிங்கப்பூரின் அமைப்பு, கண்ணுக்கு தெரியும் முக்கியமான இடங்களின் விவரங்கள் ஆகியவை இதில் உள்ளன. இந்த வரைபடம் கடல் நீர் மட்டத்திற்கு மேலே இருந்து வரையப்பட்டது.

புதுதில்லியில் உள்ள இந்திய தேசிய தொல்லியல் ஆராய்ச்சி நிறுவனத்தின் வசம் உள்ள வரைபடங்களில் இருந்து பிரதியெடுக்கப்பட்டது.

*****