Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

சீனா, கொரியா, வியட்நாம், மங்கோலியா புத்தாண்டு – பிரதமர் வாழ்த்து


சீனா, கொரியா, வியட்நாம், மங்கோலியா நாடுகளின் புத்தாண்டை ஓட்டி பிரதமர் திரு. நரேந்திர மோடி அந்த நாடுகளின் மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

“சீன புத்தாண்டு தொடந்குவதால் அனைவருக்கும் வாழ்த்துக்கள். வரும் ஆண்டு உங்கள் வாழ்க்கையில் அமைதியையும் மகிழ்ச்சியையும் வளமையும் கொண்டுவரட்டும்.

உலகம் முழுவதும் உள்ள எனதருமை கொரிய நண்பர்களுக்கு எனது சியோல்லால் வாழ்த்துகள். வரும் ஆண்டு பெரும் மகிழ்ச்சியையும் வளர்ச்சியையும் அளிக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்கிறேன்.

டெட் விழா கொண்டாடும் தருணத்திலும் வசந்த காலம் வருவதாலும் வியட்நாம் மக்களுக்கு எனது புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துகொள்கிறேன்.

மங்கோலியாவில் உள்ள என் சகோதர சகோதரிகளுக்கு சாகான்சார் வாழ்த்துகள். வரவிருக்கும் இந்த அற்புதமான ஆண்டு வெற்றி, மகிழ்ச்சி மற்றும் நல்ல சுகாதாரத்தை வழங்கட்டும்” என்று பிரதமர் தெரிவித்துள்ளார்.