பி.எம்.இந்தியா
பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் தலைமையில் கூடிய மத்திய அமைச்சரவை, ஜனவரி 2014ல், சுகாதாரம் தொடர்பாக இந்தியா மற்றும் மாலத்தீவுகள் இடையே கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தத்துக்கு ஏற்பளித்தது.
இப்புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம், கீழ்கண்ட துறைகளில் ஒத்துழைப்பு ஏற்படும் :
1) பயிற்சி பெற்ற மருத்துவர்கள், அதிகாரிகள் மற்றும் இதர சுகாதார பணியாளர்கள் ஆகியோர் பரிமாறிக் கொள்ளுதல்
2) மனிதவள மேம்பாட்டில் உதவி மற்றும், மருத்துவமனை கட்டுமானத்தில் உதவி
3) மருத்துவ மற்றும் இதர சுகாதாரத் துறைகளில் ஆராய்ச்சி
4) பொது சுகாதாரம் மற்றும் சுகாதாரத் துறைகளில் ஒத்துழைப்பு
5) பொதுவான மருந்துகள் மற்றும் அவசியமான மருந்துகள் வழங்குவதில் ஒத்துழைப்பு
6) நோய் தடுப்பு மற்றும் சுகாதார மேம்பாடு
7) பாரம்பரிய மற்றும் இதர மருத்துவம்
8) தொலை மருத்துவம் மற்றும்
9) இரு தரப்பும் முடிவு செய்யும் இதர துறைகள்.
இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம், இரு நாடுகளிடையே ஒத்துழைப்பை மேம்படுத்தும். குறிப்பாக மாலத்தீவுகளில் மனிதவள மேம்பாட்டுக்கும், சுகாதாரத்துக்கும் உதவி புரியும். சுகாதாரத் துறையில் ஏற்படும் இந்த ஒத்துழைப்பு, இரு நாடுகளிடையே நட்புணர்வை வளர்க்கும்.