பி.எம்.இந்தியா
பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டம், இந்தியாவுக்கும் செனகல் நாட்டுக்கும் இடையில் சுகாதாரம் மற்றும் மருந்துகள் துறையில் ஏற்பட்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு (MoU) ஒப்புதல் அளித்தது.
இரு தரப்பினருக்கும் இடையில் ஒத்துழைப்புக்கான பிரதான அம்சங்களில் பின்வருபவை அடங்கும் :
i. ஒருங்கிணைந்த நோய் கண்காணிப்பு
ii. மருத்துவ ஆராய்ச்சி
iii. அவசரக்கால நிவாரணம்
iv. மருத்துவமனை மேலாண்மை
v. மருந்துகள் மற்றும் மருந்துப் பொருள்கள் / மருத்துவமனை சாதனங்கள்
vi. பாரம்பரிய மருத்துவம்
vii. எய்ட்ஸ் கட்டுப்பாடு
viii. இரு தரப்பு நலனுக்கான வேறெந்த துறைகளும்
ஒத்துழைப்பின் விவரங்களை மேலும் விரிவாக்கம் செய்யவும், இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அமலாக்கத்தை மேற்பார்வை செய்யவும் பணிக் குழு ஒன்று அமைக்கப்படும்.