பி.எம்.இந்தியா
புதிதாக 3 எய்ம்ஸ்-களை அமைக்க மத்திய அமைச்சரவை
ஒப்புதல்
புதிய எய்ம்ஸ்கள் 1. விஜய்நகர், சம்பா, ஜம்மு, 2. அவந்திபுரா, புல்வாமா, காஷ்மீர், 3. ராஜ்கோட், குஜராத் ஆகிய பகுதிகளில் அமைய உள்ளன
பிரதமர் திரு.நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், கீழ்க்காணும் முடிவுகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
அ. புதிதாக 3 எய்ம்ஸ்-களை
1. ரூ.1,661 கோடி செலவில் ஜம்மு-வின் சம்பா பகுதியில் உள்ள விஜய்நகர்.
2. ரூ.1,828 கோடியில் காஷ்மீரின் புல்வாமா பகுதியில் உள்ள அவந்திபுரா மற்றும்
3. ரூ.1,195 கோடியில் குஜராத் மாநிலத்தின் ராஜ்கோட் பகுதி ஆகிய இடங்களில் அமைத்தல்.
இந்த எய்ம்ஸ் மருத்துவமனைகள், பிரதமரின் சுகாதார பாதுகாப்பு திட்டத்தின் கீழ் அமைக்கப்படும்.
ஆ. மேற்குறிப்பிட்ட எய்ம்ஸ்-கள் ஒவ்வொன்றுக்கும் தலா ஒரு இயக்குநர் பதவியை உருவாக்குதல். அவர்களுக்கு அடிப்படை ஊதியம் ரூ.2,25,000 (நிலையானது) மற்றும் சிறப்பு படி (NPA) (ஊதியம் மற்றும் சிறப்பு படியுடன் சேர்த்து ரூ.2,37,500-க்கும் மேல் இருக்கக் கூடாது) வழங்கப்படும்.
கால வரம்பு:
|
|
விஜய்நகர், சம்பா, ஜம்மு |
48 மாதங்கள்
|
|
|
அவந்திபுரா, புல்வாமா, காஷ்மீர். |
72 மாதங்கள் கட்டுமானத்துக்கு முந்தைய காலகட்டம் – 12 மாதங்கள், கட்டுமானத்துக்கான காலகட்டம் – 54 மாதங்கள் மற்றும் நிலைப்படுத்துதல்/ செயல்பாட்டுக்கு கொண்டுவர 6 மாதங்கள். |
|
|
ராஜ்கோட், குஜராத் |
45 மாதங்கள் கட்டுமானத்துக்கு முந்தைய காலகட்டம் – 10 மாதங்கள், கட்டுமானத்துக்கான காலகட்டம் – 32 மாதங்கள் மற்றும் நிலைப்படுத்துதல்/ செயல்பாட்டுக்கு கொண்டுவர 3 மாதங்கள். |
வரிசை எண் | புதிய எய்ம்ஸ் | கட்டுமானத்துக்கான காலஅளவு மற்றும் விவரங்கள் |
|---|
விவரங்கள்:
அ. பிரதம மந்திரியின் சுகாதார பாதுகாப்பு திட்டத்தின்கீழ், முதல் கட்டத்தில் கட்டப்பட்ட புதுதில்லியில் உள்ள எய்ம்ஸ் மற்றும் மற்ற 6 புதிய எய்ம்ஸ்களைப் போன்று, இந்த புதிய எய்ம்ஸ்-களில் மருத்துவமனை, மருத்துவம் மற்றும் செவிலியர் படிப்புக்கான பயிற்றுவிப்பு பிரிவு, குடியிருப்பு வளாகம் மற்றும் அதுசார்ந்த வசதிகள்/சேவைகள் உருவாக்கப்படும். தேசிய முக்கியத்துவம் வாய்ந்த கல்வி நிறுவனமான எய்ம்ஸ்களை அமைப்பதன் நோக்கம், அந்தப் பிராந்தியத்தில் தரமான முதல்நிலை சுகாதார வசதி, மருத்துவக் கல்வி, செவிலியர் கல்வி மற்றும் ஆராய்ச்சியை வழங்குவதே ஆகும்.
ஆ. 1. ஒவ்வொரு புதிய எய்ம்ஸ்-களிலும் 100 இளநிலைப் பட்டம் (எம்பிபிஎஸ்) மற்றும் 60 பி.எஸ்சி., (நர்சிங்) இடங்கள் இருக்கும்.
2. ஒவ்வொரு புதிய எய்ம்ஸ்-களிலும் அதிநவீன 15 – 20 துறைகள் இருக்கும்.
3. ஒவ்வொரு புதிய எய்ம்ஸிலும் அவசரகால சேவை/விபத்து சேவை படுக்கைகள், ஆயுஷ் மருத்துவப் படுக்கைகள், தனியார் படுக்கைகள் மற்றும் ஐசியூ சிறப்பு மற்றும் அதிசிறப்பு படுக்கைகள் என 750 படுக்கை வசதிகள் இருக்கும்.
4. ஒவ்வொரு புதிய எய்ம்ஸும் நாள்தோறும் சுமார் 1,500 வெளிநோயாளிகளுக்கும், ஒவ்வொரு மாதமும் 1,000 உள்நோயாளிகளுக்கும் சிகிச்சை அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
5. மருத்துவக் கல்லூரி, ஆயுஷ் வளாகம், கலையரங்கம், இரவு நேர தங்குமிடம், விருந்தினர் இல்லம், விடுதிகள் மற்றும் குடியிருப்பு வசதிகள் ஆகியவை இடம்பெற்றிருக்கும்.
செலவு:
புதிய எய்ம்ஸ் கட்டுமானத்துக்கான செலவை மத்திய அரசு முழுமையாக வழங்கும். புதிய எய்ம்ஸ்-களின் செயல்பாடு மற்றும் பராமரிப்புக்கான செலவுகளை முழுமையாக மத்திய அரசு ஏற்றுக் கொள்ளும்.
புதிய எய்ம்ஸ்-களை அமைப்பதன் மூலம், மூலதன சொத்து ஏற்படுத்தப்படும். இதன் பராமரிப்புக்காக புதிய 6 எய்ம்ஸ்-களின் அமைப்பு அடிப்படையில் பணியாளர்கள் உருவாக்கப்படுவார்கள்.
தாக்கம்:
வேலைவாய்ப்பு உருவாக்கம்:
****