Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

சுகோய் போர் விமானம் மூலம் வானிலிருந்து பிரம்மோஸ் ஏ.எல்.சி.எம் ஏவுகணை வெற்றிகரமாக முதல் முறை பரிசோதிக்கப்பட்டதற்கு பிரதமர் மகிழ்ச்சி


‘எஸ்.யு.–30‘ ரக போர் விமானம் மூலம் பிரம்மோஸ் ஏ.எல்.சி.எம் (வானில் இருந்து செலுத்தப்படும் சீர் வேக ஏவுகணை) ஏவுகணையை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியதை முன்னிட்டு பிரதமர் திரு. நரேந்திர மோடி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இந்த சாதனையை நிகழ்த்திய குழுவினருக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

“சுகோய் (எஸ்.யு.–30) ரக போர் விமானம் மூலம் பிரம்மோஸ் ஏ.எல்.சி.எம் ஏவுகணையை வெற்றிகரமாக விண்ணில் செலுத்திய செய்தி மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த சாதனையை நிகழ்த்திய குழுவினருக்கு எனது வாழ்த்துகள்” என்று பிரதமர் தனது வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்.

******