Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

சுங்க விவகாரங்கள் தொடர்பாக ஒத்துழைப்பு மற்றும் பரஸ்பர உதவி குறித்து இந்தியாவுக்கும் ஆர்மீனியாவுக்கும் இடையில் ஒப்பந்தம் கையெழுத்திட அமைச்சரவை ஒப்புதல்


பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் சுங்க விவகாரங்கள் தொடர்பாக ஒத்துழைப்பு மற்றும் பரஸ்பர உதவி குறித்து இந்தியாவுக்கும் ஆர்மீனியாவுக்கும் இடையில் ஒப்பந்தம் கையெழுத்திடவும் ஏற்பளிப்பு அளிக்கவும் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

அந்தந்த அரசுகளின் ஒப்புதலுக்குப் பிறகு, இரு நாடுகளின் சார்பில் இந்த ஒப்பந்தம் கையெழுத்திடப்படும். இந்த ஒப்பந்தத்தின் அமலாக்கம் தொடர்பாக தேசிய சட்டபூர்வ தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டதாக தூதரக வழிமுறைகளின்படி ஒப்பந்த தரப்பினர் அறிவிக்கை செய்த இரண்டாவது மாதத்தின் முதலாவது நாளில் இந்த ஒப்பந்தம் செயல்பாட்டுக்கு வரும்.

சுங்கத் துறை குற்றச் செயல்பாடுகள் குறித்த புலனாய்வு மற்றும் தடுப்பு குறித்து பொருத்தமான தகவல்களை அளிப்பதற்கு இந்த ஒப்பந்தம் உதவிகரமாக இருக்கும். இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகத்தை மேம்படுத்தவும், சரக்குகளுக்கு அனுமதி அளிப்பதை சிறப்பாக ஆக்கிடவும் வழிவகுக்கும் என்றும் எதிர்பார்க்கப் படுகிறது.

பின்னணி :

இரு நாடுகளின் சுங்கத் துறை அதிகாரிகளுக்கு இடையில் தகவல் மற்றும் புலனாய்வை பகிர்ந்து கொள்வதற்கான சட்டபூர்வ வரையறைகளை அளிப்பதாக இந்த ஒப்பந்தம் இருக்கும். சுங்கத் துறை சட்டங்களை சரியாக பயன்படுத்துதல், சுங்கத் துறை குற்றங்களைத் தடுத்தல் மற்றும் புலனாய்வு செய்தல், சட்டபூர்வ வர்த்தகத்தை மேம்படுத்துதல் ஆகியவற்றில் உதவியாகவும்  இருக்கும். இரு சுங்கத் துறை நிர்வாகங்களின் ஒப்புதலுடன், ஒப்பந்தத்திற்கான வரைவு அறிக்கை இறுதி செய்யப்பட்டது. இந்தியாவின் சுங்கத் துறை பிரச்சினைகள் மற்றும் தேவைகளை,  குறிப்பாக அறிவிக்கை செய்யப்படும் சுங்க மதிப்பின் துல்லியத்தன்மை குறித்த தகவல்களை பரிமாறிக் கொள்வதை, கருத்தில் கொண்டதாக வரைவு ஒப்பந்தம் உள்ளது. இரு நாடுகளுக்கும் இடையில் வர்த்தகம் செய்யப்படும் சரக்குகளின் தொடக்க இடம் குறித்த சான்றிதழ்களின் நம்பகத்தன்மை குறித்த தகவல்களும் இதில் அடங்கும்.

 

******