மக்களை அச்சத்திலிருந்தும், அடிமைத்தனத்திலிருந்தும் விடுவித்து, அவர்கள் தன்னம்பிக்கையுடனும், கண்ணியத்துடனும் வாழ்வதற்கு வழிவகுப்பதே உண்மையான சுதந்திரம் என்பதை எடுத்துரைக்கும் சமஸ்கிருத நீதிமொழியைப் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று பகிர்ந்துள்ளார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில், ஒரு மனிதன் தன்னை சுதந்திரமானவனாக உணராத வரை, தன்னை விட ஆற்றல் மிக்க ஒரு சக்திக்கு அஞ்சி வாழ்கிறான். இந்த எண்ணத்தைக் கொண்டிருப்பவர்கள் பயம், சோகம், மாயை ஆகியவற்றில் சிக்கித் தவிக்கிறார்கள். மக்களை அச்சம், அடிமைத்தனத்திலிருந்து விடுவித்து, அவர்கள் தன்னம்பிக்கையுடனும், கண்ணியத்துடனும் வாழ்வதை உறுதி செய்வதே உண்மையான சுதந்திரமாகும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
***
(Release ID: 2327068)
SS/PD/RJ
यावदस्यास्वतन्त्रत्वं तावदीश्वरतो भयम्। य एतत्समुपासीरंस्ते मुह्यन्ति शुचार्पिताः॥ https://t.co/R3XXBeM2Cc
— Narendra Modi (@narendramodi) October 23, 2026