Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

சுரங்கம் மற்றும் கனிம (வளர்ச்சி மற்றும் ஒழுங்குமுறை) சட்டம், 1957ல் திருத்தம்.


பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் கூடிய மத்திய அமைச்சரவை, சுரங்கம் மற்றும் கனிம (வளர்ச்சி மற்றும் ஒழுங்குமுறை) சட்டம், 1957ல் திருத்தம் மேற்கொள்ள ஒப்புதல் அளித்தது. இத்திருத்தத்தின் மூலம் இது வரை ஏலத்தில் விடப்படாமல் இருந்த சுரங்கங்களை ஏலத்தில் விட முடியும். ஏலத்தின் மூலம் விடப்படாமல் வேறு வழிகளின் மூலம் அளிக்கப்பட்ட சுரங்கங்களை அளிப்பதன் மூலம், நிறுவனங்கள் ஒன்றிணையவும், சுரங்கத் தொழிலை மேம்படுத்தவும், லாபத்தை அதிகரிக்கவும், கனிமங்களுக்காக இன்னொரு நிறுவனத்தை சார்ந்திருப்பதை தவிர்க்கவும் முடியும். இதன் மூலம், நிறுவனங்களுக்கு ஏற்படும் செலவையும் குறைக்க முடியும். சுரங்க உரிமையை மாற்றிக் கொள்ளும் உரிமையின் மூலம், வங்கிகளும் நிதி நிறுவனங்களும் சொத்துக்களை விற்பனை செய்ய வழி வகுக்கும்.

இத்திருத்தம், சுரங்க உரிமம் பெற்றவர்கள், உரிமத்தை மாற்ற வகை செய்யும். வங்கிகளுக்கும் நிதி நிறுவனங்களுக்கும் இது மிகவும் பயன் தரும். இதனால் அரசுக்கு எவ்விதமான நிதிச் செலவும் கிடையாது.

பின்னணி :

சுரங்கம் மற்றும் கனிமச் சட்டம் 1957, மற்றும் சுரங்கம் மற்றும் கனிமங்கள் திருத்தச் சட்டம் 2015 ஏலத்தின் மூலம் எடுத்த சுரங்கங்களை மாற்றுவதை தடை செய்தது. இது, நிறுவனங்கள் இணைவதையும், புதிய நிறுவனங்களாக உருவாகுவதையும் தடை செய்தது. கனிமங்களுக்காக மற்றொரு நிறுவனங்களை சார்ந்திருக்க வேண்டிய நிலையையும் ஏற்படுத்தியது. வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் சுரங்கங்கள் அடமானம் வைக்கப்பட்டிருந்தால் அவற்றை விற்க முடியாத நிலை இருந்தது.