Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

சுற்றுச்சூழல் பாதுகாப்பில் சிறப்பான சாதனை படைத்துள்ள அசாம் மாநில மக்களுக்குப் பிரதமர் வாழ்த்து


சுற்றுச்சூழல் பாதுகாப்பில் சிறப்பான சாதனை படைத்துள்ளதற்காக, அசாம் மாநில மக்களுக்கு, குறிப்பாக, அம்மாநிலத்தின் ‘பெண் சக்தி’க்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (05-06-2026) தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார். நிலைத்தன்மை கொண்ட  பூமியை உருவாக்கும் நோக்கில், இது போன்ற முக்கிய முயற்சியில், அம்மாநிலத்தின் ‘பெண் சக்தி’ முன்னிலை வகித்து வருவதாகப் பிரதமர் குறிப்பிட்டார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில், பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

“பாராட்டுதலுக்குரிய சாதனை. நிலைத்தன்மை கொண்ட பூமியை உருவாக்கும் நோக்கில், இதுபோன்ற முயற்சியில், முன்னிலை வகித்து வரும் அசாம் மாநில மக்களுக்கும், குறிப்பாக, அம்மாநிலத்தின் ‘பெண் சக்தி’க்கும் வாழ்த்துகள்.”

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2269664&reg=3&lang=1

(Release ID: 2269664)

***

TV/SV/SH