Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

சுற்றுலாத்துறையில் இந்தியா கொலம்பியா இடையே ஒப்பந்தம் கையெழுத்து


பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கொலம்பியா வர்த்தக தொழிற்சாலை மற்றும் சுற்றுலா அமைச்சகத்திற்கு இடையேயான ஒப்பந்தத்தில் கையெழுத்திட இந்திய சுற்றுலா அமைச்சகத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது. இது சுற்றுலாத்துறையில் உள்ள ஒத்துழைப்பை வலுப்படுத்தும்.

ஒப்பந்தத்தின் முக்கிய குறிக்கோள்கள் :

அ) சுற்றுலாத்துறையில் இரு நாட்டிற்கும் இடையே உள்ள ஒத்துழைப்பை விரிவுப்படுத்துவது.

ஆ) சுற்றுலா சார்ந்த தகவல் மற்றும் தரவு பரிமாற்றம்

இ) சுற்றுலா பங்குதாரர்களான தங்கும் விடுதிகள் மற்றும் சுற்றுலா இயக்குநர்களுக்கு இடையேயான ஒத்துழைப்பை அதிகரிப்பது.

ஈ) மனிதவள மேம்பாட்டில் ஒத்துழைப்பை அதிகரிக்க பரிமாற்ற திட்டங்களை ஏற்படுத்துதல்.

உ) இரு வழி சுற்றுலாவை ஊக்குவிக்கும் வகையில் சுற்றுலா இயக்குநர்கள் / ஊடகங்கள் இடையே பரிமாற்ற பயணங்கள்.

ஊ) மேம்படுத்துதல், சந்தைப்படுத்துதல், இலக்கை அடைவதற்கான வளர்ச்சி மற்றும் மேலாண்மை ஆகிய துறைகளில் அனுபவங்களை பரிமாறிக் கொள்வது.

எ) இரு நாட்டின் சுற்றுலா சந்தைகள் / கண்காட்சிகளில் இருவரும் பங்கேற்பது.

இந்தியாவிற்கு கொலம்பியா வளர்ந்து வரும் சுற்றுலா தலமாகும். மத்திய சுற்றுலா அமைச்சகம் அக்டோபர் 2014இல் கொலம்பியாவின் பொகோடாவில் சாலை கண்காட்சி ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது. இதற்கு இரு நாடுகளின் சுற்றுலா வர்த்தகதாரர்களிடமிருந்து நல்ல வரவேற்பு கிடைத்தது.

அதேபோல கொலம்பியாவில் இந்தியா திறன்மிகு சந்தையாக உள்ளது. இந்தியாவிற்கு 2013ஆம் ஆண்டு 16.63 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் கொலம்பியாவிலிருந்து பயணம் மேற்கொண்டனர். இரு நாடுகளின் பலன்களை கருத்தில் கொண்டு, சுற்றுலாத்துறையில் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. இது இரு நாடுகளின் சுற்றுலா வளர்ச்சி மற்றும் மேம்படுத்துதலுக்கான கட்டமைப்பு பாதையை உருவாக்கி பொருளாதார வளர்ச்சிக்கு வழி வகுக்கும்.

இரு நாடுகளும் நல்ல உறவை கொண்டுள்ளது. உலக அளவிலான வெகுவான பிரச்சினைகளில் இரு நாடுகளும் ஒருமித்த கருத்தினை கொண்டுள்ளது மட்டுமின்றி, பல்வேறு பன்முக கூட்டமைப்புகளின் நெருங்கிய ஒத்துழைப்பை கொண்டுள்ளது. சுற்றுலா ஒத்துழைப்புத்துறையில் இந்த ஒப்பந்தத்தின் மூலம் இரு நாடுகளுக்கும் இடையேயான உறவை மேலும் வளரும்.

*****