Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

சுற்றுலாத்துறையில் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா மற்றும் கிர்கிஸ்தான் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்


 

சுற்றுலாத்துறையில் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியக் குடியரசின் மத்திய சுற்றுலா அமைச்சகத்துக்கும் கிர்கிஸ்தான் குடியரசின் பண்பாட்டு அமைச்சகத்தின் தகவல் மற்றும் சுற்றுலாத்துறைக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாவதற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான  மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்த்து.

 

பரஸ்பர நன்மைகளை கருத்தில் கொண்டால் சுற்றுலாத்துறையில் இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாவதால் சம்மந்தப்பட்ட 2 தரப்பும் ஒன்று மற்றதன் நாட்டின் சுற்றுலாவை மேம்படுத்துவதற்கான ஆக்கப்பூர்வ பேச்சுவார்த்தைகளில் ஈடுபட முடியும். இதனால் இரு நாடுகளிலும் பொருளாதார மேம்பாடு ஏற்படும். கிர்கிஸ்தான் குடியரசுடன் இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாவதை அடுத்து இந்த முக்கியமான ஆதார சந்தையிலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும்.

இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் முக்கிய நோக்கங்களில் சில:

 

  1. சுற்றுலாத்துறையின் இருதரப்பு ஒத்துழைப்பை விரிவாக்குதல்
  2. சுற்றுலாத் தொடர்பான தகவல்களை பரிவர்த்தனை செய்து கொள்ளுதல்
  3. சுற்றுலா ஆர்வம் கொண்டுள்ள ஓட்டல்கள், சுற்றுலா நடத்துபவர்கள் முதலியோரிடையே ஒத்துழைப்பை ஊக்குவித்தல்
  4. மனிதவள மேம்பாட்டில் ஒத்துழைப்புக்கான பரிவர்த்தனை திட்டங்களை உருவாக்குதல்
  5. சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் துறைகளில் முதலீடு செய்ய
  6. இருவழிச் சுற்றுலாவை மேம்படுத்த சுற்றுலா நடத்துபவர்கள் / ஊடகத்துறையினர்/கருத்து ஏற்படுத்துவோர் ஆகியோரின் பரிவர்த்தனைப் பயணம்
  7. சுற்றுலா மேம்பாடு, சந்தைப்படுத்துதல், இலக்குகள் மேம்பாடு மற்றும் நிர்வாகம் ஆகியதுறைகளில் அனுபவங்களை பகிர்ந்து கொள்ளுதல்
  8. ஒருநாடு மற்ற நாட்டில் நடைபெறும் சுற்றுலாக் கண்காட்சி / சந்தை ஆகியவற்றில் பங்கேற்றல்
  9. பாதுகாப்பான, கவுரவம் மிக்க நிலைத்த சுற்றுலாவை மேம்படுத்துதல்.

 

கிர்கிஸ்தான் சுதந்திர நாடுகளின் காமன்வெல்த் அமைப்பின் ஒரு பகுதியாகும். இந்நாட்டைச் சுற்றி கசகிஸ்தான், உஸ்பெக்கிஸ்தான் ஆகியன உள்ளன. இந்தியாவும் கிர்கிஸ்தானும் வலுவான ராஜீய உறவுகளையும் நீண்டகால பொருளாதார உறவுகளையும் பெற்றுள்ள நாடுகள் கடந்த 5 ஆண்டுகளில் கிர்கிஸ்தானிலிருந்து இந்தியாவுக்கு வந்த பயணிகளின் எண்ணிக்கை விவரம்.

 

2012                2013                2014                2015                2016

1348                2103                2479                2729                2883*

 

*ஜனவரி – நவம்பர் 2016