Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

சுற்றுலா ஒத்துழைப்பு – இந்தியா கம்போடியா இடையேயான ஒப்பந்தங்கள்


இந்தியா கம்போடியா இடையேயான சுற்றுலாவை உக்குவிக்கும் வகையில் ஏற்கனவே வழங்கப்பட்ட சுற்றுலாத் துறைக்கான ஒத்துழைப்பிற்கான பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை குழு ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் வழங்கி உள்ளது.

கம்போடியாவின் துணை அதிபர் செப்டம்பர் 16 2015 இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது இந்த ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.

இந்த ஒப்பந்தத்தின் முக்கிய குறிக்கோள்கள்:

i. சுற்றுலாத் துறையில் இரு நாடுகளுக்கு இடையேயான ஒத்துழைப்பை விரிவுபடுத்துதல்.

ii. சுற்றுலா சார்ந்த தரவு மற்றும் தகவல் பரிமாற்றம்.

iii. சுற்றுலா பங்குதாரர்களுக்கு இடையே ஒத்துழைப்பை ஊக்குவிப்பது (தங்கும் விடுதி மற்றும் சுற்றுலாப்பயண ஏற்பாடு செய்பவர்கள்).

iv. மனிதவள மேம்பாட்டு துறையில் ஒத்துழைப்புக்கான பரிமாற்ற நிகழ்ச்சிகளை அமைப்பது.

v. சுற்றுலா மற்றும் அதன் சார்ந்த துறைகளில் முதலீடு செய்வது.

vi. இரு வழி சுற்றுலாவையும் ஊக்குவிக்கும் வகையில் சுற்றுலா ஏற்பாடு செய்பவர்கள் / ஊடகம் / கருத்து கணிப்பவர் ஆகியோரின் பரிமாற்றத்தை ஏற்பாடு செய்வது.

vii. மேலாண்மை, இலக்கு வளர்ச்சி, சந்தைப்படுத்துதல், விளம்பரப்படுத்துதல் ஆகிய துறைகளில் உள்ள அனுபவங்களை பரிமாரிக்கொள்வது.

viii. இரு நாடுகளிலும் நடைபெறும் சுற்றுலா கண்காட்சிகளில் பங்கேற்பது.
ix. பாதுகாப்பான, கவுரவமான மற்றும் திடமான சுற்றுலாவை ஊக்குவிப்பது.

பின்னணி

கம்போடியாவின் வளர்ந்துவரும் சுற்றுலாத்துறை, இந்தியாவின் சுற்றுலா சந்தைக்கு மூலதனமாக உள்ளது. கம்போடிய குடிமக்களுக்கு, இந்திய அரசு மின்னணு சுற்றுலா விசா வசதியை வழங்கியுள்ளது. இது இரு நாடுகளுக்கும் இடையேயான சுற்றுலா வர்த்தகத்திற்கு நல்ல வரவேற்பை தந்துள்ளது. கம்போடியாவுடன் கையெழுத்திடப்பட்டுள்ள ஒப்பந்தத்தின் மூலம் சுற்றுலாப் பயணிகளின் வருகை மேலும் அதிகரிக்கும் என்று மத்திய சுற்றுலா அமைச்சகம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

இந்தியாவும் கம்போடியாவும் நட்புக்குரிய உறவை பகிர்ந்து வருகிறது. இரு நாடுகளும் ஏற்கனவே உள்ள உறவை மேலும் மேம்படுத்தவும் வலுவாக்கவும் சுற்றுலா ஒப்பந்தத்தை கையெழுத்திட்டுள்ளது.

••••••