பி.எம்.இந்தியா
சுற்றுலா துறையில் இந்தியா – ருமேனியா இடையே ஏற்கனவே கையெழுத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. செப்டம்பர் 2018-ல் ருமேனியா நாட்டின் துணை அதிபர் இந்தியாவிற்கு வருகை தந்தபோது இந்த ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.
இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் முக்கிய நோக்கங்கள்:
இந்தியாவின் சுற்றுலாவிற்கு ருமேனியா நாடு முக்கியமான சந்தையாகும். 2017 ஆம் ஆண்டு 11844 சுற்றுலா பயணிகள் ருமேனியாவில் இருந்து இந்தியாவிற்கு வருகை தந்துள்ளனர். இந்த சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க இந்த புரிந்துணவு ஒப்பந்தம் வழிவகுக்கும்.
*****