Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

சுவாமி ஆத்மாஸ்தானந்தா ஜி மறைவிற்கு பிரதமர் இரங்கல்


சுவாமி ஆத்மாஸ்தானந்தா ஜி மறைவிற்கு பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளார்.

“சுவாமி ஆத்மாஸ்தானந்தா ஜியின் மறைவு எனக்கு தனிப்பட்ட இழப்பாகும். என் வாழ்வின் முக்கியமான காலகட்டத்தில் நான் அவருடன் தங்கினேன்.

சுவாமி ஆத்மாஸ்தானந்தா ஜி அளவற்ற அறிவும் ஞானமும் கிடைக்கப்பெற்றவர். அவரது முன்மாதிரியான ஆளுமையை பல தலைமுறையினரும் நினைவில் வைத்திருப்பார்கள்.

நான் கொல்கத்தாவிற்கு செல்லும் போதெல்லாம், நான் சுவாமி ஆத்மாஸ்தானந்தா ஜியை சந்தித்து அவரது ஆசியைப் பெறுவதை உறுதியாகக் கொண்டிருந்தேன்.” என்று பிரதமர் தனது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

***