Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

செமிகான் இந்தியா 2025 நிகழ்வின்போது முன்னணி தலைமை நிர்வாக அதிகாரிகளுடன் பிரதமர் உரையாடினார்

செமிகான் இந்தியா 2025 நிகழ்வின்போது முன்னணி தலைமை நிர்வாக அதிகாரிகளுடன் பிரதமர் உரையாடினார்


செமிகான் இந்தியா 2025 நிகழ்வின்போது முன்னணி தலைமை நிர்வாக அதிகாரிகளுடன் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று கலந்துரையாடினார். “வலிமையான உள்கட்டமைப்பை உருவாக்குதல், புத்தாக்கம் மற்றும் திறன் வளர்ப்பில் கவனம் செலுத்துவதை உள்ளடக்கி, இந்தத் துறையில் இந்தியாவின் தொடர் சீர்திருத்த பயணம் பற்றி நான் பேசினேன்”, என்று திரு மோடி குறிப்பிட்டார்.

 

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் அவர் பதிவிட்டதாவது:

 

“முன்னதாக இன்று, செமிகான் இந்தியா 2025 நிகழ்வின்போது முன்னணி தலைமை நிர்வாக அதிகாரிகளுடன் கலந்துரையாடினேன். இந்தியாவின் திறன் மீது அவர்கள் கொண்டுள்ள நம்பிக்கை புலப்படுவதுடன், குறைக்கடத்தித் துறையில் புத்தாக்கம் மற்றும் உற்பத்திக்கான உலகளாவிய மையமாக இந்தியா மாறும் என்று அவர்கள் நம்புகின்றனர். வலிமையான உள்கட்டமைப்பை உருவாக்குதல், புத்தாக்கம் மற்றும் திறன் வளர்ப்பில் கவனம் செலுத்துவதை உள்ளடக்கி, இந்தத் துறையில் இந்தியாவின் தொடர் சீர்திருத்த பயணம் பற்றி நான் பேசினேன்.”

***

SS/RB/DL