பி.எம்.இந்தியா
இன்டர்போல் அமைப்பின் தலைமைச் செயலாளர் திரு யுர்ஜன் ஸ்டாக் அவர்களே
எனது அமைச்சரவை சகா டாக்டர் ஜிதேந்திர சிங் அவர்களே,
மேடையில் கூடியுள்ள மற்ற பிரமுகர்களே,
பெரியோர்களே, தாய்மார்களே,
சொத்துக்களை மீட்பதற்கு வழிமுறைகளை ஆராய்வதில் உலக அளவிலான ஆறாவது மாநாட்டிலும், மாநில ஊழல் தடுப்பு அமைப்புகள் மற்றும் மத்தியப் புலனாய்வுத்துறையின் வருடாந்திர மாநாட்டிலும் கலந்து கொண்டு பிரதிநிதிகளிடையே உரையாற்றுவதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த மாநாட்டில் கலந்துக்கொள்ள வந்திருக்கும் வெளிநாட்டு பிரதிநிதிகளையும் நான் வரவேற்கிறேன். இந்தியாவில் மேற்கொண்டுள்ள உங்களது பயணம் இனிமையானதாகவும் நினைவுகூறத்தக்க விதத்திலும் இருக்கும் என்று நான் நம்புகிறேன்.
இந்த மாநாட்டில் சிறந்த சேவைகளுக்காக பதக்கங்களை பெற உள்ள மத்தியப் புலனாய்வுத்துறை அதிகாரிகளுக்கு எனது வாழ்த்துக்கள்.
பெரியோர்களே, தாய்மார்களே,
உலகில் உள்ள அனைத்து அரசாங்கங்களும் ஏழைகள் மற்றும் ஒதுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை மாற்றுவதற்காக பணிகளை மேற்கொண்டுள்ளன. நமது குறிக்கோளை அடைய ஊழல் என்பது முக்கிய சவாலாக உள்ளது.
நாட்டை மேம்படுத்த இந்தியாவில் உள்ள நாம் முக்கிய கட்டத்தில் நாம் உள்ளோம். வளமுள்ள இந்தியாவை உருவாக்க வேண்டும் என்பதே நமது நோக்கமாகும்.
• இந்தியாவில் திறமையான விவசாயிகள்;
• நமது தொழிலாளர்களின் மனநிறைவு;
• நமது பெண்களுக்கு அதிகாரம்;
• இளைஞர்கள் தன்னிறைவுடன் இருப்பது;
இவை முடியாத ஒன்று அல்ல. ஆயினும் இந்த குறிக்கோளை அடைய ஊழலுக்கு எதிராக போராடுவதில் இந்தியா உறுதி பூண்டுள்ளது.
குறுகிய காலகட்டத்தில் ஊழலையும் கறுப்பு பணத்தையும் ஒழிக்க பல்வேறு நடவடிக்கைகளை எனது அரசு எடுத்து வருகிறது. எனது அரசு பதவி ஏற்ற உடனேயே உச்சநீதிமன்றத்தின் மேற்பார்வையில் சிறப்பு புலனாய்வுக் குழு ஒன்றை நாங்கள் அமைத்துள்ளோம். கருப்புப் பணம் பற்றிய தகவல்களை அறிய பல நாடுகளுடன் நாங்கள் ஒப்பந்தங்களை ஏற்படுத்தி உள்ளோம். அமெரிக்காவுடன் வெளிநாட்டு கணக்குகளின் மீது அளிக்கப்பட வேண்டிய வரிகள் குறித்த சட்டத்தை செயல்படுத்த அரசு ஒப்பந்தம் ஒன்றிலும் கையெழுத்து இட்டுள்ளது. வெளிநாடுகளில் தங்கியுள்ள இந்தியர்களின் கணக்குகள் குறித்த தகவல்களை இந்த ஒப்பந்தத்தின் மூலம் இந்திய வரிவிதிப்பு அதிகாரிகள் தெரிந்து கொள்ள முடியும்.
கருப்பு பணம், வெளியிடப்படாத வெளிநாட்டு வருமானம், சொத்துக்கள் மற்றும் வரிவிதிப்பு சட்டம் என்ற விரிவான மற்றும் தடுப்பு சட்டம், தற்போது இயற்றப்பட்டுள்ளது. இதன் மூலம் தண்டனை வழஙகப்படும்.
சொத்துக்களை மீட்பதற்கும், கருப்பு பணத்தின் மூலம் வரி ஏய்ப்பை தடுப்பதற்கான சட்டமும் கொண்டு வரப்பட்டுள்ளது. இதன் மூலம் லட்சக்கணக்கான ஏழை முதலீட்டாளர்கள் தாங்கள் இழந்த பணத்தை பெற முடியும்.
சொத்துக்கள் திருடப்படுவதை தடுப்பதற்காக இன்டர்போல் அமைப்பின் உதவியுடன் அவற்றை கண்டு பிடிக்க உதவிகள் கோரப்பட்டுள்ளன. இந்த மாநாட்டின் மூலம் ஊழல் தடுக்கப்பட்டு குற்றங்களின் மூலம் பெறப்பட்ட சொத்துக்கள் மீண்டும் பெறப்படும் என்பதை நான் உறுதியாக நம்புகிறேன்.
நிலக்கரிச் சுரங்கங்களை ஏலமிடுதல் மற்றும் எப்.எம். வானொலி ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஆகியவற்றை ஏலமிடுவதன் மூலம் ஏற்படும் ஊழலை தடுப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனால் தேசிய வளங்கள் ஒதுக்கப்படுவதில் ஊழல் தவிர்க்கப்பட்டுள்ளது. இதனால் இந்த முறையில் வெளிப்படையான தன்மையும், மக்களுக்கு அரசின் மேல் உள்ள நம்பிக்கையும் கொண்டு வரப்பட்டுள்ளது. அரசுக்கும் குறிப்பிடத்தகுந்த வருமானம் கிடைத்துள்ளது. இதனால் மக்கள் பயன் பெறுவார்கள்.
பெரியோர்களே, தாய்மார்களே,
கொள்கையின் அடிப்படையில் ஆட்சிமுறையை நாங்கள் அளிக்க உள்ளோம். இந்த ஆட்சி வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புணர்வோடு செயல்படும் விதத்தில் இருக்கும். இந்த கொள்கையின் மூலமாகவும் தொழில்நுட்ப அடிப்படையில் எவ்வாறு ஊழலை ஒழிக்க முடியும் என்பதற்கு சிறிய ஒரு உதாரணத்தை நான் கூற உள்ளேன்.
நாங்கள் பதவி ஏற்றபிறகு சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு ஒரு சிலிண்டருக்கு 400 ரூபாய் வரை மானியம் அளிக்கப்பட்டுள்ளது. ஏழை மற்றும் பணக்காரர்கள் ஆகிய இரு பிரிவினருக்கும் இதுபோன்ற மானியம் அளிக்கப்பட்டது. ஆகவே, ஆதார் அட்டையின் மூலமாக நுகர்வோருக்கு இந்த மானியம் நேரடியாக அளிக்கப்பட நாங்கள் முடிவு செய்தோம். இந்த முடிவினால் இணைப்பு வழங்கப்பட்ட மானியம் பெறும் நுகர்வோர்களின் எண்ணிக்கை ஐம்பது மில்லியனாக குறைந்தது. பின்னர், பணக்காரர்கள் தாங்களாகவே முன்வந்து சமையல் எரிவாயு மானியத்தை விட்டுக்கொடுக்கும் இயக்கம் ஒன்றை துவக்கினர். இதன் மூலம் மேலும் 4.5 மில்லியன் பேர் எரிவாயு மானியத்தை தாங்களாகவே முன்வந்து ரத்து செய்துள்ளனர்.
நண்பர்கனே,
தற்போது அரசின் நிதிப் பற்றாக்குறையை சமாளிப்பதற்கான சவால் ஒன்று உள்ளது. அவை பின்வருமாறு:
• பொதுமக்களுக்கு அளிக்கப்படும் சேவைகள் திறமையற்றவைகளாக உள்ளன.
• தேவையான சூழ்நிலைகளில் கொள்கைகளை வகுக்கப்படுவதில் குறைபாடு
• திட்டங்களை செயல்படுத்துவதில் தாமதம்
அரசு அதிகாரிகள் திறமையான முறையில் செயலாற்றவும் பொறுப்புணர்வோடு செயல்படவும் தேவையான நடவடிக்கைகளை எனது அரசு எடுத்து வருகிறது. அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் மீது தேவையற்ற குற்றச்சாட்டுகளிலிருந்து பாதுகாக்க எனது அரசு உறுதிபூண்டுள்ளது. அதேபோல் ஊழல் புரியும் அரசு அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் அரசு நடவடிக்கை எடுக்கும். இதுவரை பல்வேறு பிரிவுகளில் பணிபுரிந்த திறமையற்ற 45 மூத்த அதிகாரிகள் பதவியிலிருந்து நீக்கப்பட்டு அவர்களுக்கு ஓய்வூதியம் நிறுத்தப்பட்டது.
பெரியோர்களே, தாய்மார்களே,
உலகம் முழுவதும் பல்வேறு குற்றங்கள் ஒருங்கிணைந்த வகையில் நடத்தப்படுவதால் அவை உலகப் பொருளாதாரத்திற்கு அச்சுறுத்தலாக இருக்கின்றன. நல்ல செல்வத்தை கருப்புப் பணம் விலக்கும் என்பது அறிந்த உண்மைதான். பொருளாதாரத்தில் பல பிரிவுகளை கட்டுப்படுத்த இந்த பணம் ஊடுருவும். இந்தப் பணம் மேலும் போதை மருந்துகள் மற்றும் ஆயுதங்கள் கடத்துதல் மற்றும் தீவிரவாதம் ஆகிய குற்றங்களுக்கும் நிதி அளிக்கும் வகையில் இருக்கும்.
பாரீசில் சில நாட்களுக்கு முன் நடந்த மனிதாபிமானமற்ற குற்றத்தின் தீவிரவாதிகள் நிதியை எவ்வாறு பெற்றார்கள் என்பது விளங்குகிறது. போதைப் பொருட்களை கடத்துவது, வங்கிகளை கொள்ளையடிப்பது, வண்டிகளை திருடுவது, கள்ள நோட்டுகளை வெளியிடுவது போன்ற குற்ற நடவடிக்கைகள் மூலம் இவர்கள் நிதியைப் பெற்றுள்ளார்கள் என்பது இதன் மூலம் தெரிய வருகிறது.
இதுபோன்ற நிதி அவர்களுக்கு கிடைப்பது தடுக்கப்பட்டால் தீவிரவாதிகளின் செயல்பாடுகளும் குறைந்து எவ்விதமான தாக்குதல்களையும் அவர்கள் நடத்த முடியாது. தீவிரவாதத்திற்கு எதிராக பாதுகாப்புகளை நாம் மேற்கொள்ளுதல் மற்றும் பொருளாதார தடைகளை விதித்தல், ஆகியவை மிக முக்கியமானதாகும்.
குற்றங்களுக்கு எதிராக நாம் செயல்பட வேண்டும் எனில் அக்குற்றங்களை கண்டுபிடிப்பது என்பது இன்றியமையாததாகும். குற்றங்கள், ஊழல் மற்றும் தீவிரவாதம் ஆகியவற்றிற்கு எதிராக போராட வேண்டும் எனில் சொத்துக்களை மீட்கவும், அதற்காக சர்வதேச அளவில் தேவையான முயற்சிகளை மேற்கொள்ளவும் அவசியமாகும்.
குற்றங்களில் ஈடுபடுபவர்களின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும்போது அது அவர்களுக்கு தண்டனையை அளிப்பதோடு மட்டுமல்லாமல், குற்றங்களை மீண்டும் அவர்கள் புரிவதற்கும் அனுமதி மறுக்கப்படுகிறது. கவுடில்யர் எழுதிய அர்த்தசாஸ்திரத்தில் ஊழல் புரியும் அரசு அலுவலர்களின் சட்டத்திற்கு புறம்பான வருமானத்தை பறிமுதல் செய்வது என்பது முக்கியமான தண்டனை என்று அவர் கூறியுள்ளார்.
ஊழலைக் கண்டுபிடிப்பதில் மாநில ஊழல் தடுப்பு அமைப்புகள், மத்திய புலனாய்வு அமைப்பு ஆகியவற்றின் தலைவர்கள் ஒன்றிணைந்து ஆராய உள்ளார்கள். 20 ஆண்டுகளுக்கு மேலாக உள்ள இந்த அமைப்பு ஊழல் புரிபவர்களுக்கு தண்டனை அளிப்பதோடு மட்டுமல்லாமல் அதைத் தடுப்பதில் தேவையான வழிமுறைகளையும் ஆராய்ந்து தேவையான திருத்தங்களை கொண்டு வர வேண்டும்.
பெரியோர்களே, தாய்மார்களே,
தளர்த்தப்பட்ட மற்றும் உலகளாவிய பொருளாதாரத்தின் வாயிலாக கிடைக்கும் லாபத்தை உலகில் குற்றங்கள் புரிவதற்காக பயன்படுத்துவதற்கு அதிகரித்துள்ளது. சில நொடிகளில் பல நாடுகளின் மூலமாக இதுபோன்ற குற்றங்களை களைய முடியும். எங்கெங்கு இதற்காக பணம் பயன்படுத்தப்படுகிறது என்பதை அறிய முடியும். ஆனால் குற்றங்களை கண்டுபிடிக்க உதவும் அமைப்புகள் அந்தந்த நாட்டின் தேசிய அளவில் நின்று விடுகின்றன. தகவல்களை உலகளவில் பரிமாறிக்கொள்ளவும் எங்களுக்கு அதுபோன்ற தகவல்கள் கிடைக்கவும் எங்களது அரசு உறுதி பூண்டுள்ளது. வரிகளை ஏய்ப்பதற்காக சில நிதி மையங்களில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள பணம் குறித்த தகவல்களை இதுபோன்ற முறையினால் நாம் அறிந்து கொள்ள முடியும்.
சொத்துக்களை மீட்பதற்காக இன்டர்போல் அமைப்பு மிக சிறந்த அளவு செயல்பட்டு வருகிறது. 2009ஆம் ஆண்டு முதல் உலகளாவிய போக்கல் பாயிண்ட் அமைப்பு ஊழல் தடுப்பு மற்றும் குற்றங்களை கண்டறிவதற்கான அமைப்பு ஆகியவற்றுடன் இணைந்து தகவல்களை பரிமாறிக்கொள்கின்றன. ஊழல் தடுப்பிற்காக செயல்படும் அமைப்புகள் பயன்படுத்துவதற்காக தேவையான தகவல்களை கணிணி மூலம் ஐ-சீகாம் போன்ற பல கணிணி தளங்கள் மூலம் தகவல்களை இன்டர்போல் அமைப்பு அளித்து வரும் முயற்சிகள் குறிப்பிடத்தகுந்தது. இன்டர்போல் அமைப்பின் புதிய அறிக்கையின் மூலம் மிகக் கடுமையான சந்தர்ப்பங்கள் உள்ள நிலைகளிலும் புலனாய்வை மேற்கொண்டு சொத்துக்களை கண்டுபிடிக்க இயலும். உலக வங்கி மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் அமைப்பு போன்றவற்றுடன் இணைந்து செயல்படும் இன்டர்போல் அமைப்பை நான் பாராட்டுகிறேன். ஊழலைத் தடுப்பதற்காக இன்டர்போல் அமைப்பு தலைமை ஏற்று இருப்பது பாராட்டுக்குரியதாகும்.
இன்டர்போல் அமைப்பு இந்திய புலனாய்வு அமைப்புகளுடன் இணைந்து பல செயல்களை மேற்கொண்டுள்ளதால் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு அவர்கள் இந்தியாவிற்கு திரும்ப அனுப்பப்பட்டுள்ளார்கள் என்னு என்னிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற கூட்டுறவு மேலும் அதிகரிக்கப்பட வேண்டும். மத்திய புலனாய்வுத்துறை இந்திய சட்ட அமலாக்க அமைப்புகள் மற்றும் வெளிநாட்டு அமைப்புகளுடன் இணைந்து புலனாய்வுக்குத் தேவையான தகவல்களை திரட்டுவதில் உதவி செய்து வருகின்றன. மேலும் மத்திய புலனாய்வுத்துறை இன்டர்போல் அமைப்பின் உதவியுடன் அதன் கருவிகள் மற்றும் தகவல்கள் ஆகியவற்றை திரட்டி உலகில் உள்ள மற்ற சட்ட அமலாக்க அமைப்புகளுடன் இணைந்து செயல்படுகின்றன என்று எனக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இன்டர்போல் அமைப்பின் பல்வேறு திட்டங்களிலும் மத்திய புலனாய்வுத்துறை பங்கு கொள்கிறது.
காசியாபாத்தில் புலனாய்வுக்கான சர்வதேச மையம் ஒன்று அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த மையத்தின் மூலம் மிகச்சிறந்த புலனாய்வு மற்றும் கணிணி மூலம் செயல்படுத்தப்படும் குற்றங்களை அறிவதற்காக இந்தியா மற்றும் வெளிநாடுகளில் உள்ள சட்ட அமலாக்கப் பிரிவினருக்கு கல்வி அளிக்கப்பட உள்ளது. கணிணி மூலம் செயல்படுத்தப்படும் குற்றங்கள் போன்றவற்றிற்கு தொழில்நுட்ப ரீதியான கல்வியும் அளிக்கப்பட உள்ளது.
இந்திய நீதித்துறை வரலாற்றில் தண்டனை அளிப்பது என்பதற்கு பழைய தடயவியல் நிபுணர் முறைகள் பின்பற்றப்பட்டன. ஆகவே, அதற்குத் தேவையான வசதிகளும் உருவாக்கப்பட வேண்டும்.
குற்றங்கள் மற்றும் ஊழல் கிடைத்த சொத்துக்களை திருடப்பட்டவையாக கருதப்பட வேண்டும். அந்த சொத்துக்கள் அந்தந்த நாட்டுக்கு சொந்தமில்லாதவைகளாக இருக்கின்றன. அதுபோன்ற சொத்துக்கள் அந்தந்த நாட்டில் உள்ள குடிமக்களுக்கு போய் சேர வேண்டும். சட்டரீதியாகவும் மற்றும் பல்வேறு வகையிலான தடைகளாலும் அதுபோன்ற சொத்துக்களை மீட்பதில் சிரமம் உள்ளது என்பதை நான் அறிவேன். இதுபோன்ற சவால்களுக்கு காவல்துறையும் மற்றும் சட்ட அமலாக்க அமைப்புகளும் இணைந்து செயல்பட வேண்டும். இந்த மாநாடு இதற்குத் தேவையான வாய்ப்புகளை அளிக்கும் என்று நான் நம்புகிறேன். குற்றம் புரிய பயன்பட்ட சொத்துக்களை தேடுவது மற்றும் அவற்றை பறிமுதல் செய்வது மற்றும் அந்த சொத்துக்களை திரும்ப அந்தந்த நாடுகளுக்கு திருப்பி அனுப்புவது ஆகியவற்றுக்கு தேவையான வழிமுறைகளை இந்த மாநாடு ஆராயும் என்று நான் நம்புகிறேன்.
நன்றி.
ஜெய் ஹிந்த்.
I also congratulate the officers of CBI who are receiving medals for distinguished service today: PM @narendramodi https://t.co/Iy8hu3Nre5
— PMO India (@PMOIndia) November 18, 2015
Governments across the world work to transform the lives of the poor and the marginalised: PM @narendramodi https://t.co/7kRRp49R3a
— PMO India (@PMOIndia) November 18, 2015
Our mission is to build a prosperous India. To achieve this objective, it is essential to fight relentlessly against corruption: PM
— PMO India (@PMOIndia) November 18, 2015
Government has taken significant steps to check corruption and the menace of black money in a short span of time: PM @narendramodi
— PMO India (@PMOIndia) November 18, 2015
Auction of Coal Blocks & FM Radio Licences have eliminated the element of discretion in allocation of resources: PM @narendramodi
— PMO India (@PMOIndia) November 18, 2015
Government has taken several steps to make the bureaucracy more efficient, performance oriented and accountable: PM @narendramodi
— PMO India (@PMOIndia) November 18, 2015
The Government is unsparing when it comes to punishing the corrupt: PM @narendramodi https://t.co/7kRRp49R3a
— PMO India (@PMOIndia) November 18, 2015
Government is committed to implementation of a uniform global standard on Automatic Exchange of Information on a fully reciprocal basis: PM
— PMO India (@PMOIndia) November 18, 2015
My speech at the Sixth Global Focal Point Conference on Asset Recovery. https://t.co/SSHBYMGgmz
— Narendra Modi (@narendramodi) November 18, 2015
In a short span, our Government has taken significant steps to check corruption & black money.
https://t.co/QAoYOnzrEJ
— Narendra Modi (@narendramodi) November 18, 2015
Policy driven approach empowered by technology is the best way to eliminate corruption. Here is an example.
https://t.co/VM07JeIwsT
— Narendra Modi (@narendramodi) November 18, 2015