Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

சேவா உறுதி தீர்மானம்


இன்று, யுகப்தாம் 5,127
விக்ரம் சம்வத் 2082
சாக சம்வத் 1947
பல்குண மாதம், சுக்ல பக்ஷ்ம்,
அஷ்டமி தினத்தன்று
2026 பிப்ரவரி 24 அன்று

புதிய பிரதமர் அலுவலகமான சேவா தீர்த்தத்தில் மாண்புமிகு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் வரலாற்றுச் சிறப்புமிக்க மத்திய அமைச்சரவையின் முதலாவது கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டமும், இந்தக் கட்டடமும், புதிய இந்தியாவின் மறுகட்டுமானத்தின் நேரடியான வெளிப்பாடாகும். இந்தப் புனிதமான தொடக்கத்துடன் பல நூற்றாண்டுகால முயற்சியில் கட்டமைக்கப்பட உள்ள எதிர்காலத்தை நாம் வரவேற்போம். சுதந்திரத்திற்குப் பின், சவுத் பிளாக்கில் இருந்த பிரதமர் அலுவலகம் பல தசாப்தங்களின் மரபைக் கொண்டிருந்ததோடு எதிர்கால கனவுகள் பலவற்றையும் வளர்த்தது. இந்நிலையில் தற்சார்புள்ள, நவீனமான, எல்லையற்ற பலம் பொருந்திய இந்தியாவை நாம் கற்பனை செய்தோம். இன்று சேவா தீர்த்தம் அந்தத் தொலைநோக்குப் பார்வையை வெளிப்படுத்துகிறது. இது ஜனநாயகத்தின் தாயான இந்தியாவின் பெருமிதத்தை விரிவுபடுத்தும்.

இத்தருணத்தில் இந்த இடத்தின் வரலாற்றையும் நாம் நினைவு கூர்வோம். பிரிட்டிஷ் காலத்தில் தற்காலிக ராணுவக் குடியிருப்புகளாக இருந்த இடத்தில், சேவா தீர்த்தம் கட்டப்பட்டுள்ளது.   தேச நிர்வாகத்தின் செயலூக்கமுள்ள  நிறுவனத்தை அந்த இடத்தில் அமைத்திருப்பது புதிய இந்தியாவின் மாற்றத்திற்கான அடையாளமாகவும் விளங்குகிறது.

காலனித்துவ ஆட்சிக்கு முன், அதன் பிரமாண்டமான கட்டுமானத்திற்காகவும் மனித மாண்புகளுக்காகவும் இந்தியா நன்கு அங்கீகரிக்கப்பட்டிருந்தது. தற்போதைய சேவா தீர்த்தக் கோட்பாடு இந்த இரண்டு சிந்தனைகளின் சங்கமமாக அமைந்துள்ளது. கடமை, சேவா, அர்ப்பணிப்பு ஆகியவற்றின் புனித சங்கமமாக இந்தப் பணியிடம் புனித யாத்திரை தலம் போல் புனிதத்தைக் கொண்டுள்ளது. இது தான் இதன் அடிப்படை உணர்வாகும்.

சேவா தீர்த்தத்தில் முதல் முறையாக நடந்த மத்திய அமைச்சரவைக் கூட்டம் இங்கு எடுக்கப்படும் ஒவ்வொரு முடிவும், 140 கோடி குடிமக்களுக்கு சேவா செய்யும் உணர்வால் உந்தப்பட்டிருக்க வேண்டும், தேசக்கட்டுமானத்தின் மிகப் பெரிய இலக்குடன் இணைந்திருக்க வேண்டும் என்ற தீர்மானத்தை வலியுறுத்தியுள்ளது.

நம்மைப் பொறுத்தவரை அரசியல் சட்ட மாண்புகள் நீதி சார்ந்த உறுதிப்பாட்டின் வெளிப்பாடாகும். கண்ணியம், சமத்துவம், மக்களுக்கான நீதி ஆகியவற்றைக் கொண்ட நிர்வாகத்தை இணைப்பதாகும். இந்த உணர்வுடன் சேவா தீர்த்தத்தின் பணிக் கலாச்சாரம் வழிகாட்டப்படும். இங்கு ஒவ்வொரு கொள்கையும், அரசியல் சட்ட அடிப்படை நெறிமுறைகளுக்கு ஏற்றதாக இருக்கும். ஒவ்வொரு முடிவும், மக்களின் விருப்பங்களைப் பிரதிபலிப்பதாக இருக்கும்.

இந்த வளாகத்தில் எடுக்கப்படும் ஒவ்வொரு முடிவும் மக்களே தெய்வம் என்ற உணர்வால் உந்தப்பட்டதாக இருக்கும் என்பதை மத்திய அமைச்சரவை உறுதி செய்துள்ளது. இந்த இடம் அதிகார மையத்தை காட்சிப்படுத்துவதாக இருக்காது, ஒவ்வொரு இந்தியருக்கும்  அதிகாரமளிக்கும் மையமாக இருக்கும். சேவா தீர்த்தத்திலிருந்து மேற்கொள்ளப்படும் நிர்வாகத்தின் ஒவ்வொரு முயற்சியும் சமூகத்தில் கடைக்கோடி மனிதரின் வாழ்க்கையை  எளிமையாக்கும் இயக்கத்தோடு தொடர்புடையதாக இருக்கும். நமது தொலைநோக்குப் பார்வைக்கு ஏற்ப வெளிப்படையான, விழிப்புணர்வுள்ள குடிமக்களின் உணர்வுகளை உணர்ந்த நிர்வாக மாதிரியை வலுப்படுத்தும் எங்களின் உறுதிப்பாட்டை நாங்கள் வலியுறுத்துகிறோம்.

செயலற்ற தன்மையை செயலூக்கமாகவும், கருத்து வேறுபாட்டை அர்ப்பணிப்பாகவும் சந்தேகத்தை தீர்வுகளாகவும் மாற்றுவது நிர்வாக  உள்கட்டமைப்புக்கான தேவை என்பதற்கு சேவா தீர்த்தம் பதிலாக அமையும்.

இந்த சிந்தனையுடன் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் அண்மை ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட முடிவுகள், நிர்வாக நோக்கத்திற்கு புதிய தெளிவை வழங்குகின்றன. கோடிக்கணக்கான மக்களின் வாழ்க்கையில் காணப்படும் மாற்றங்கள், நிர்வாகத்தின் மீது மக்களின் நம்பிக்கையைப் பலப்படுத்தியுள்ளது.

கடந்த தசாப்தத்தில் 25 கோடிக்கும் அதிகமான மக்களை வறுமையிலிருந்து மீட்டிருப்பதன் மூலம் ஒரு காலத்தில் சாத்தியமில்லை என்று கருதப்பட்டதை நாடு சாத்தியமாக்கியுள்ளது. இத்தகைய சாதனைகளுக்குப் பின்னால் அரசின் தொலைநோக்குப் பார்வை, விரிவான கண்ணோட்டம், அயராத முயற்சி ஆகியவை உள்ளன. ஆயுஷ்மான் பாரத் மூலம் லட்சக்கணக்கான மக்கள் சுகாதாரப் பாதுகாப்புடன் இணைக்கப்பட்டுள்ளனர். பிரதமரின், ஏழைகள் நல உணவுத்திட்டத்தின் மூலம், சுமார் 80 கோடி மக்களுக்கு உணவுப் பாதுகாப்பு கிடைத்ததுடன் பசிக்கொடுமை முடிவுக்கு வந்தது. தூய்மை இந்தியா இயக்கத்தின் கீழ், 12 கோடிக்கும் அதிகமான கழிப்பறைகள் கட்டப்பட்டதன் மூலம், லட்சக்கணக்கான குடும்பத்தினரும், பெண்களும் கண்ணியமான வாழ்க்கையைப் பெற்றுள்ளனர். இந்த எண்ணிக்கைகள் நிர்வாகத்தின் திசை வழியை பிரதிபலிப்பதோடு குடிமக்களின் வாழ்க்கையை எளிதாக்குவதற்கான கொள்கையே இறுதி இலக்கு என்பதையும் காட்டுகிறது.

அதே போல், நான்கு கோடிக்கும் அதிகமான வீடுகள் கட்டப்பட்டு கோடிக்கணக்கான குடும்பங்களுக்கு உறைவிடமும், பாதுகாப்பும் வழங்கப்பட்டுள்ளது. ஜல்ஜீவன் இயக்கத்தின் மூலம் ஊரகப் பகுதிகளில் சுமார் 16 கோடி மக்கள் குடிநீர் வசதியைப் பெற்றுள்ளனர்.

சீர்திருத்தத்தின் தொடர்ச்சியான பயணத்தில் இந்தியாவின் பொருளாதார மாற்றம் பற்றியும் மத்திய அமைச்சரவை ஆய்வு செய்தது. குறைவான அரசு, அதிகப்படியான நிர்வாகம் என்ற மந்திரத்துடன் ஜிஎஸ்டி, நேரடி பயன் பரிமாற்றம், டிஜிட்டல் இந்தியா போன்ற சீர்த்திருத்தங்களால் இந்தியாவின் நிர்வாகம் அதிக வெளிப்படைத் தன்மையுடனும் அதிக திறமையுடனும் அதிக அளவில் மக்களை மையப்படுத்தியதாகவும் உள்ளது. முகம் தெரியாத வரி மதிப்பீடு நடைமுறை என்பது மக்களின் நம்பிக்கையை வலுப்படுத்தி, நேர்மையை ஊக்கப்படுத்தியுள்ளது. இந்த முயற்சிகளின் பயனாக உலகின் முன்னணி பொருளாதாரங்களிடையே இந்தியா இன்று வலுவான இடத்தைப் பெற்றுள்ளது.

சேவா தீர்த்தத்தின் புதிய சக்தியுடனும் சீர்திருத்த எக்ஸ்பிரஸின் வேகத்துடனும் வெகு விரைவில், உலகின் 3 முன்னணி பொருளாதாரங்களில் ஒன்றாக இந்தியா தனது இடத்தைப் பெறும் என்று அமைச்சரவை உறுதியாக நம்புகிறது.

வளர்ச்சியடைந்த இந்தியா 2047 என்ற நாட்டின் தீர்மானத்திற்கு மத்திய அமைச்சரவை இன்று தன்னை மீண்டும் அர்ப்பணித்துக் கொண்டது. இது நீண்டகால தேசிய பயணமாகும். இன்று மேற்கொண்ட முடிவுகள் வரவிருக்கும் தலைமுறைகளின் எதிர்காலத்தை வடிவமைக்கும்.  வளர்ச்சியின் மகத்தான இலக்கு பொறுப்புணர்வின் ஆழம் ஆகியவற்றை சேவா தீர்த்தத்தின் முதலாவது கூட்டம் நமக்கு நினைவுபடுத்தியுள்ளது.

இந்த வளாகம் வெறுமனே நவீன பணியிடம் அல்ல. ஒரு புதிய பணிக்கலாச்சாரத்தின் அடையாளமாகவும் இது உள்ளது. நவீன தொழில்நுட்பம் மற்றும் திறமையான நடைமுறைகள் மூலம் அரசின் செயல்பாடுகள் புதிய உச்சங்களை எட்டும். இங்கு பரிசீலிக்கப்படும் ஒவ்வொரு கோப்பும், இங்கு பணிபுரியும் ஒவ்வொரு ஊழியரும் கடைக்கோடி மக்களின் வாழ்க்கையை எளிமையாக்கும் இயக்கத்தால் உந்துதல் பெற்றிருப்பார்கள். அண்மை ஆண்டுகளில் நாடு அனுபவம் கொண்டுள்ள தொடர்ச்சியான சீர்திருத்த பயணத்தை வேகப்படுத்தவும் ஆதார வளங்களின் பயன்பாட்டை ஊக்கப்படுத்தவும் மத்திய அமைச்சரவை உறுதி பூண்டுள்ளது.

சரியான கொள்கை, நேர்மையான நோக்கம், சரியான  தலைமைத்துவம் ஆகியவற்றுடன் வளர்ச்சியடைந்த இந்தியாவை நோக்கி முன்னேறும் பாதை தொடர்ந்து ஒளிரும் என்ற நம்பிக்கையை இந்த முதலாவது கூட்டம் மேலும் வலுப்படுத்தியுள்ளது. சேவா தீர்த்தத்தால் இயக்கப்படும் புதிய பணிக் கலாச்சாரம், திறமையான, அதிகாரம் பெற்ற, தற்சார்புள்ள நாடு என்ற இந்தியாவின் வளர்ச்சிக்கான அடித்தளமாக மாறும்.

தொலைநோக்குப் பார்வைகொண்ட பிரதமர் நரேந்திர மோடியின் தலைமைத்துவத்தின் கீழ், உணர்திறன், பதில் சொல்லும் கடமைப்பொறுப்பு, மக்களை மையப்படுத்திய நிர்வாகம் ஆகியவற்றில் உலகிற்கு ஓர் எடுத்துக்காட்டாக சேவா தீர்த்தத்தை மாற்றும் உறுதிப்பாட்டை மத்திய அமைச்சரவை மீண்டும் வலியுறுத்தியுள்ளது. 2047-க்குள்  இந்தியாவை வளமான, திறன்மிக்க, தற்சார்புள்ள நாடாக மாற்றும் பயணத்தில் இந்த வளாகத்தை வலுவான மையமாக மாற்ற மத்திய அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

***

 

(Release ID: 2232058)

AD/SMB/KPG/KR