பி.எம்.இந்தியா
நெதர்லாந்து பிரதமராக பதவியேற்றுள்ள திரு ராப் ஜெட்டனுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தமது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
இந்தியா – நெதர்லாந்து இடையே பல்வேறு துறைகளில் பகிரப்பட்ட விரிவான உறவு குறித்து பிரதமர் எடுத்துரைத்துள்ளார். பிரதமர் ஜெட்டனுடன் நெருங்கி பணியாற்றுவதையும், இருநாடுகள் மற்றும் மக்களுக்கிடையேயான உறவுகள் மேலும் வளரும் தருணத்தையும் தாம் எதிர்நோக்கியுள்ளதாக திரு மோடி குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் எழுதியிருப்பதாவது;
“நெதர்லாந்து பிரதமராக பதவியேற்றுள்ள திரு ராப் ஜெட்டனுக்கு வாழ்த்துகள். இந்தியாவும் நெதர்லாந்தும் பல்வேறு துறைகளில் விரிவான உறவை பகிர்ந்து கொள்கின்றன. உங்களுடன் நெருங்கி பணியாற்றுவதையும், இருநாடுகள் மற்றும் மக்களுக்கிடையேயான உறவுகள் மேலும் வளரும் தருணத்தையும் நான் எதிர்நோக்கியுள்ளேன்.”
***
(Release ID: 2232060)
AD/IR/RK/KR
Congratulations Mr. Rob Jetten on assuming office of the Prime Minister of the Netherlands. India and the Netherlands share an extensive relationship across diverse sectors. I look forward to working closely with you to add further momentum to the growing ties between our two…
— Narendra Modi (@narendramodi) February 24, 2026