பி.எம்.இந்தியா
சைப்ரஸ் குடியரசு அதிபர் திரு நிக்கோஸ் கிறிஸ்டோடுலைஸ் இந்தியாவில் மேற்கொண்ட அரசுமுறைப் பயணத்தின் போது இவ்விருநாடுகளுக்கு இடையே பல்வேறு துறைகளில் இணைந்து செயல்படுவது என்று முடிவெடுக்கப்பட்டது. இதன் ஒரு பகுதியாக பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
1) பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு எதிரான கூட்டுப் பணிக்குழு அமைப்பது குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தம்.
2) சுஷ்மா சுவராஜ் வெளியுறவு சேவை நிறுவனம் – சைப்ரஸ் தூதரக அகாடமி இடையேயான தூதரக பயிற்சிக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்.
3) புதுமை மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த துறைகளில் சைப்ரசின் ஆராய்ச்சி, புதுமை, டிஜிட்டல் கொள்கைக்கான துணை அமைச்சகம், இந்தியாவின் மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பம் அமைச்சகத்திற்கு இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தம்.
4) தேடுதல், மீட்பு நடவடிக்கைகளில் அதிகாரப்பூர்வ ஒத்துழைப்பில், சைப்ரசின் லார்னட்டா ஒருங்கிணைந்த மீட்பு மையம், மத்திய பாதுகாப்பு அமைச்சகம் இடையேயான தொழில்நுட்ப ஏற்பாடு.
5) உயர்கல்வி, ஆராய்ச்சித்துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கு ஏதுவாக மத்திய கல்வி அமைச்சகம் – சைப்ரஸ் கல்வி விளையாட்டு, இளையோர் நல அமைச்சகம் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தம்.
6) 2026 முதல் 2030-ம் ஆண்டுகளுக்கான கலாச்சார ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான மத்திய கலாச்சார அமைச்சகம் – சைப்ரஸ் கலாச்சார துணை அமைச்சகத்திற்கு இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஆகிய முக்கியத்துவம் வாய்ந்த ஒப்பந்தங்களில் இரு நாடுகளும் கையெழுத்திட்டுள்ளன.
இவை தவிர இருநாடுகளுக்கும் இடையே பல்வேறு துறைகளில் இணைந்து செயல்படுவது குறித்த அறிவிப்புகளும் வெளியாகியுள்ளன.
1) இந்தியா – சைப்ரஸ் இடையே உத்திசார் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது.
2) இரு நாடுகளுக்கு இடையேயான பாதுகாப்பு ஒத்துழைப்புக்கான 5 ஆண்டுகால செயல்திட்டம்.
3) இந்தியா – சைப்ரஸ் இடையே இணையப்பாதுகாப்புக் குறித்த பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து நடத்துவது.
4) இரு நாடுகளுக்கு இடையேயான துணை தூதரக அதிகாரிகள் நிலையிலான பேச்சுவார்த்தைகளைத் தொடங்குவது.
5) வர்த்தகம், போக்குவரத்து துறைகளில் இந்தோ – பசிபிக் பெருங்கடல் முன்முயற்சியில் இருநாடுகளும் இணைந்து செயல்படுவது.
6) பாரத் சுகாதார முன்முயற்சி – ஒத்துழைப்பு, நலவாழ்வு, நல்லுறவை மேம்படுத்துதல்.
7) 2026 மே 10 அன்று முதலாவது இந்திய சைப்ரஸ் விண்வெளி தினத்தைக் கொண்டாடுதல்.
8) மும்பையில் சைப்ரஸ் வர்த்தக மையத்தை தொடங்குவது குறித்த அறிவிப்பு
***
TV/SV/KPG/SE
We discussed ways to increase cooperation in infrastructure, energy, agriculture, technology and financial services. We also view defence and security as a key means of furthering bilateral friendship. Emphasis will remain on boosting cultural as well as people-to-people ties. pic.twitter.com/MJPriXcwMs
— Narendra Modi (@narendramodi) May 22, 2026
Happy to have met President Nikos Christodoulides in Delhi. We held extensive deliberations on further strengthening the India-Cyprus friendship. Considering the close ties between our nations, we have decided to elevate our friendship into a Strategic Partnership. Ours is indeed… pic.twitter.com/36unkio3YK
— Narendra Modi (@narendramodi) May 22, 2026
Outcomes that will add momentum to the India-Cyprus friendship! https://t.co/8w5GwjJ202
— Narendra Modi (@narendramodi) May 22, 2026