கர்நாடக மாநிலம் மைசூருவில், இந்தியாவின் முதல் எல்இடி (LED) திரையிலான குவிமாடக் கோளரங்கமான ‘காஸ்மோஸ்’ (COSMOS-Mysuru Planetarium) கோளரங்கத்தைப் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (13.11.2026) திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில் பேசிய அவர், இந்தியாவில் ஆன்மிகமும் அறிவியலும் எப்போதும் இணைந்தே வளர்ந்து வந்துள்ளன என்றார். மைசூருவில் ஏற்கெனவே சில மாதங்களுக்கு முன் திறக்கப்பட்ட விவேகா நினைவிடம் ஆன்மிகச் சிந்தனையைத் தூண்டும் நிலையில், புதிய கோளரங்கம் இளைஞர்களுக்கு பிரபஞ்சத்தின் அதிசயங்களையும் விண்வெளி ரகசியங்களையும் அறிந்துகொள்ள உதவும் என்று குறிப்பிட்டார்.
ஆரியபட்டர், வராகமிகிரர், பாஸ்கராச்சாரியார், நீலகண்ட சோமயாஜி போன்ற இந்திய அறிஞர்கள், நவீன அறிவியல் கருவிகள் இல்லாத காலத்திலேயே கோள்களின் இயக்கம், சூரிய, சந்திர கிரகணங்கள் உள்ளிட்டவற்றைக் கணித்துப் பல அரிய செயல்களைச் செய்ததாகப் பிரதமர் தெரிவித்தார்.
மைசூரு பல்கலைக்கழகம், பெங்களூருவில் உள்ள இந்திய அறிவியல் கழகம் ஆகியவற்றின் வளர்ச்சிக்கு அரச குடும்பம் ஆற்றிய பங்களிப்பையும் அவர் சுட்டிக்காட்டினார். இந்தப் புதிய கோளரங்கம் மாணவர்களின் அறிவியல் ஆர்வத்தை வளர்க்கும் என்று அவர் கூறினார். பள்ளி, கல்லூரி மாணவர்கள் அதிக அளவில் இங்கு அழைத்து வரப்பட வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.
கடந்த ஆண்டு மும்பையில் நடைபெற்ற சர்வதேச வானியல், வானியற்பியல் ஒலிம்பியாட் போட்டியிலும், இந்த ஆண்டு வியட்நாமில் நடைபெற்ற போட்டியிலும் இந்திய மாணவர்கள் சிறப்பாகச் செயல்பட்டதாக அவர் குறிப்பிட்டார். வியட்நாம் போட்டியில் பங்கேற்ற ஐந்து இந்திய மாணவர்களில் நான்கு பேர் தங்கப் பதக்கமும், ஒருவர் வெள்ளிப் பதக்கமும் வென்றதை நினைவுகூர்ந்து அவர் பெருமிதம் தெரிவித்தார்.
கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சித் துறை குறிப்பிடத்தக்க வளர்ச்சியைக் கண்டுள்ளதாகப் பிரதமர் தெரிவித்தார். சந்திரயான்-3 திட்டத்தின் மூலம் நிலவின் தென்துருவப் பகுதியில் தரையிறங்கிய முதல் நாடாக இந்தியா உருவெடுத்ததை அவர் சுட்டிக் காட்டினார். ஆதித்யா-எல்1 என்ற சூரிய ஆய்வுத் திட்டத்தையும் இந்தியா செயல்படுத்தியது என்று அவர் கூறினார். விண்வெளியில் செயற்கைக்கோள்களை இணைக்கும், பிரிக்கும் தொழில்நுட்பத்தை வெற்றிகரமாகச் சோதித்த உலகின் நான்காவது நாடாகவும் இந்தியா மாறியுள்ளது என்று அவர் தெரிவித்தார்.
இந்திய விண்வெளி வீரர் ஒருவர் சர்வதேச விண்வெளி நிலையத்துக்குச் சென்று ஆய்வுகளை மேற்கொண்ட அனுபவம், இந்தியாவின் சொந்த மனித விண்வெளிப் பயணத் திட்டமான ககன்யான் திட்டத்துக்கு உதவியாக இருக்கும் என்று அவர் கூறினார்.
விண்வெளித் துறையில் தனியார் நிறுவனங்களுக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால், இந்தியத் தொழில்முனைவோர், புத்தாக்க நிறுவனங்கள் ஆகியோர் ராக்கெட்டுகளை செலுத்தவும், செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தவும் புதிய வாய்ப்புகள் உருவாகியுள்ளன என்று அவர் தெரிவித்தார்.
விண்வெளித் தொழில்நுட்பம் மக்களின் அன்றாட வாழ்க்கைக்கும் பயன்படுவதாகக் குறிப்பிட்ட அவர், மீனவர்களுக்கு புயல் எச்சரிக்கை வழங்கவும், அவர்களின் படகுகளைக் கண்காணிக்கவும் செயற்கைக்கோள் தகவல் தொடர்பு அமைப்பு உதவுவதாகக் கூறினார். ரயில்களின் இருப்பிடத்தைக் கண்டறியும் தொழில்நுட்பம், வேளாண் துறையில் செயற்கைக்கோள் தகவல்களைப் பயன்படுத்துதல் போன்றவற்றை அவர் எடுத்துரைத்தார்.
நாடு முழுவதும் 10,000-க்கும் மேற்பட்ட அடல் சிந்தனை ஆய்வகங்கள் மூலம் ஒரு கோடிக்கும் அதிகமான மாணவர்கள் பயனடைந்துள்ளனர் என்று அவர் கூறினார். மேலும், ‘ஒரே நாடு, ஒரே சந்தா’ திட்டத்தின் மூலம் உலகத் தரம் வாய்ந்த அறிவியல் ஆய்விதழ்களை இந்தியக் கல்வி நிறுவனங்கள் எளிதில் அணுக வழிவகை செய்யப்பட்டுள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.
ஆராய்ச்சி, புத்தாக்கத்திற்காக ஒரு லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டம் தொடங்கப்பட்டுள்ளது எனவும், அறிவியல் ஆராய்ச்சிகளை ஊக்குவித்து, புதிய கண்டுபிடிப்புகளை மக்களின் பயன்பாட்டுக்குக் கொண்டுவருவதே அரசின் நோக்கம் என்றும் பிரதமர் தெரிவித்தார்.
கோளரங்கத்துக்கு வரும் மாணவர்களில் சிலர் எதிர்காலத்தில் புதிய விண்வெளி கண்டுபிடிப்புகளை நிகழ்த்தி, அவற்றை உலகுக்கு அறிவிக்கும் நிலையை உருவாக்குவதே இந்தத் திட்டத்தின் மிகப்பெரிய வெற்றியாக இருக்கும் என்று கூறி பிரதமர் திரு நரேந்திர மோடி தமது உரையை நிறைவு செய்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2335999®=3&lang=1
(Release ID : 2335999)
****
TV/PLM/SH
The new COSMOS Planetarium in Mysuru brings the wonders of the universe closer to young minds. https://t.co/AhdAkpkSGF
— Narendra Modi (@narendramodi) November 13, 2026
भारत में आर्यभट्ट, वराहमिहिर, भास्कराचार्य और नीलकंठ सोमयाजी जैसे अनेक महान astronomers हुए। आज जैसे advanced instruments और technology उस समय नहीं थे। इसके बावजूद उन्होंने बड़ी-बड़ी खोजें कीं, मुश्किल calculations किए: PM @narendramodi
— PMO India (@PMOIndia) November 13, 2026
आज जब भारत science के क्षेत्र में एक के बाद एक नई उपलब्धियां हासिल कर रहा है, तब इस अत्याधुनिक COSMOS Planetarium के रूप में मैसूरु भी भारत की scientific journey में एक नया chapter जोड़ रहा है: PM @narendramodi
— PMO India (@PMOIndia) November 13, 2026
हमारी सरकार ने space sector को open किया। इससे private sector के लिए नई संभावनाएं बनी हैं। भारत के startups को भी अपनी क्षमता दिखाने का अवसर मिला है: PM @narendramodi
— PMO India (@PMOIndia) November 13, 2026