கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள பிரசாந்தி குதிரத்தின் 50-வது ஆண்டு கொண்டாட்டங்களில் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (13.11.2026) பங்கேற்றார். அப்போது, யோகாவையும் இந்தியாவின் பாரம்பரிய மருத்துவ முறைகளையும் உலக அளவில் கொண்டு செல்வதில் இந்நிறுவனம் ஆற்றிவரும் பணிகளைப் பாராட்டினார். விழாவையொட்டி வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்ட பல்வேறு வசதிகளையும் பிரதமர் தொடங்கி வைத்தார்.
கர்நாடக மாநிலம் பல நூற்றாண்டுகளாக யோகாவின் முக்கிய மையமாக விளங்கி வருவதாகக் குறிப்பிட்ட பிரதமர், கன்னடத் திரையுலகின் புகழ்பெற்ற நடிகர் டாக்டர் ராஜ்குமாரின் யோகா சேவைகளையும் நினைவுகூர்ந்தார்.
பிரசாந்தி குதிரம் சாதாரண யோகா மையமாகத் தொடங்கி, இப்போது மிகப்பெரிய இயக்கமாக வளர்ந்திருப்பது பாராட்டுக்குரியது என்று அவர் கூறினார். அதன் பொன்விழாவில், இந்நிறுவனத்துடன் தொடர்புடைய லட்சக்கணக்கான யோகா பயிற்சியாளர்களுக்கும், எஸ்-வியாசா குடும்பத்தினருக்கும் வாழ்த்துகளைத் தெரிவிப்பதாக அவர் குறிப்பிட்டார்.
இந்த ஆண்டு பிரசாந்தி குதிரத்தின் பொன்விழாவுடன், எச்.வி. சேஷாத்ரியின் நூற்றாண்டு பிறந்தநாளும் கொண்டாடப்படுவதாக அவர் கூறினார். நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு நல்லொழுக்கமும், திறமையும் கொண்ட மக்களை உருவாக்க வேண்டும் என்ற நோக்கில் அவர் தனது வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்ததாகப் பிரதமர் புகழாரம் சூட்டினார்.
தன்னலமற்ற அன்பையும் சேவையையும் முன்மாதிரியாகக் கொண்டு, சமூகத்திற்கு சேவையாற்ற வேண்டும் என்பது சேஷாத்ரியின் நோக்கமாக இருந்தது என்று பிரதமர் தெரிவித்தார். சமூகத்திற்கு இரு கைகளால் உதவி செய்தால், சமூகம் லட்சக்கணக்கான கைகளால் நமக்குத் திருப்பி உதவும் என்ற அவரது அறிவுரையையும் பிரதமர் நினைவுகூர்ந்தார். அவரது பணியைத் தொடர்ந்து மேற்கொண்டு வரும் டாக்டர் எச் ஆர் நாகேந்திரா, டாக்டர் ஆர் நாகரத்னா ஆகியோரையும் பிரதமர் பாராட்டினார்.
சுதந்திரப் போராட்டக் காலத்தில் சுவாமி விவேகானந்தர் போன்ற ஆன்மிகத் தலைவர்கள் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி, இளைஞர்களுக்கு யோகாவின் முக்கியத்துவத்தை உணர்த்தியதாகக் குறிப்பிட்டார். அவர்களின் ஊக்கத்தால் உருவான பிரசாந்தி குதிரம், எஸ்-வியாசா போன்ற நிறுவனங்கள் யோகாவுடன் நவீன அறிவியல் ஆராய்ச்சியையும் இணைத்து வருகின்றன என்று அவர் தெரிவித்தார்.
யோகா, ஆயுர்வேதம், இயற்கை மருத்துவம், நவீன மருத்துவம் ஆகியவற்றை ஒருங்கிணைத்து முழுமையான நலவாழ்வு முறையை இந்நிறுவனங்கள் உருவாக்கியுள்ளன என்று அவர் கூறினார்.
கடந்த 12 ஆண்டுகளில் இந்தியா தனது கலாச்சாரம், பாரம்பரியம், அறிவியல் திறன் ஆகியவற்றை உலகிற்கு தன்னம்பிக்கையுடன் எடுத்துச் சென்றுள்ளது என அவர் கூறினார். இதன் விளைவாக, ஆஸ்திரேலியா, ஆப்பிரிக்கா, அமெரிக்கா உள்ளிட்ட உலகின் பல பகுதிகளில் கோடிக்கணக்கான மக்கள் பங்கேற்கும் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படுகிறது எனவும், பள்ளிகள், கல்வி நிறுவனங்களிலும் யோகா பயிற்சி பரவியுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.
சவுதி அரேபியா யோகாவை விளையாட்டு நடவடிக்கையாக அங்கீகரித்துள்ளது எனவும் அந்நாட்டின் விளையாட்டு அமைச்சகம், இந்திய ஆயுஷ் அமைச்சகத்துடன் ஒப்பந்தமும் செய்துள்ளது எனவும் அவர் கூறினார்.
உலகின் பல்வேறு நாடுகளில் 150-க்கும் மேற்பட்ட ஆயுர்வேதப் பயிற்சிப் படிப்புகளுக்கு அங்கீகாரம் கிடைத்துள்ளது எனவும் ஆயுர்வேதத்தைப் பரப்புவதற்காக 28 நாடுகளுடன் இந்தியா புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்துள்ளது எனவும் அவர் கூறினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2335774®=3&lang=1
***
SS/PLM/SU
Delighted to join the Golden Jubilee celebrations of Prashanti Kutiram in Bengaluru. Its efforts to integrate modern science with India's spiritual wisdom are commendable. https://t.co/CRe0lrSZZl
— Narendra Modi (@narendramodi) November 13, 2026
प्रशांति कुटीरम की Golden Jubilee के साथ ही... इस वर्ष हम श्रद्धेय एच. वी. शेषाद्रि जी की जन्मशताब्दी भी मना रहे हैं। मैं उन्हें श्रद्धापूर्वक नमन करता हूं। शेषाद्रि जी ने अपना पूरा जीवन ‘व्यक्ति निर्माण से राष्ट्र निर्माण’ के मिशन को आगे बढ़ाने में लगाया: PM @narendramodi
— PMO India (@PMOIndia) November 13, 2026
जब देश गुलामी की बेड़ियों में जकड़ा हुआ था तब एक ओर लाखों स्वतंत्रता सेनानी, आज़ादी की लड़ाई लड़ रहे थे... तो दूसरी ओर, स्वामी विवेकानंद जैसे राष्ट्र ऋषि भी थे जिन्होंने भारत की आध्यात्मिक चेतना को जागृत किया। भारत के युवाओं को योग का मार्ग दिखाया: PM @narendramodi
— PMO India (@PMOIndia) November 13, 2026
पिछले 12 वर्षों में भारत, अपनी संस्कृति, अपनी पहचान और अपने ज्ञान-विज्ञान को पूरे आत्मविश्वास के साथ दुनिया के सामने रख रहा है। इसी का परिणाम है भारत की पहल पर अब पूरा विश्व अंतर्राष्ट्रीय योग दिवस मनाता है: PM @narendramodi
— PMO India (@PMOIndia) November 13, 2026
भारत में योगासन को प्रतिस्पर्धी खेल के रूप में भी मान्यता दी गई है। खेलो इंडिया और नेशनल गेम्स जैसे आयोजनों में भी योगासन के लिए नई जगह बनी है। ये बदलाव भारत के लिए बहुत महत्वपूर्ण है। इससे योग से जुड़े लोगों के लिए प्रतिस्पर्धी प्रतियोगिताओं में हिस्सा लेने के भी रास्ते खुल गए हैं: PM @narendramodi
— PMO India (@PMOIndia) November 13, 2026
हमने आयुर्वेद से जुड़ी research और आयुर्वेद आधारित patents को प्रोत्साहन दिया और आज इसका भी परिणाम हमारे सामने है। भारत से आयुष और herbal उत्पादों का निर्यात लगातार बढ़ रहा है: PM @narendramodi
— PMO India (@PMOIndia) November 13, 2026