Search

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

தர்மம், செல்வம், உணவு, குருவின் போதனைகள், மருத்துவம் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் சமஸ்கிருத நீதிமொழியைப் பிரதமர் பகிர்ந்துள்ளார்


ஒழுக்கம், நேர்மையான வழியில் ஈட்டிய செல்வம், உணவு, குருவின் போதனைகள், உடல்நலம் சார்ந்த மருத்துவ அறிவு ஆகியவற்றை சரியாகப் புரிந்து கொண்டு வாழ்வில் கடைபிடித்தால் மட்டுமே அவற்றின் முழு பலனைப் பெற முடியும் என்பதை வலியுறுத்தும் சமஸ்கிருத நீதிமொழியைப் பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார்.

இது குறித்து பிரதமர் சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது:

“தர்மம் அதாவது ஒழுக்கம், ஆன்மீக நற்பலன்கள்; செல்வம் அதாவது நேர்மையாக ஈட்டிய பணம்; தானியங்கள் அதாவது உணவுப் பொருட்கள்; குருவின் சொற்கள் அதாவது குருவின் போதனைகள், வழிகாட்டுதல்கள்; மருத்துவம் அதாவது மருந்துகள், உடல்நலம் சார்ந்த அறிவு ஆகியவை குறித்த அறிவை முறையாகப் பெற்று, புரிந்து கொண்டு, வாழ்வில் கடைபிடிக்க வேண்டும். இவை உரிய முறையில் பயன்படுத்தப்படாவிட்டால் வாழ்வின் நோக்கம் நிறைவேறாமல், அவற்றின் மூலம் கிடைக்க வேண்டிய பலன்கள் கிடைக்காமல் போய்விடும்” என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

 

(Release ID: 2335672)

***

SS/PD/SU