Search

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

அசாமின் கோலாகாட் மாவட்டத்தில் நிகழ்ந்த விபத்தில் நேரிட்ட உயிரிழப்பிற்குப் பிரதமர் இரங்கல்


அசாமின் கோலாகாட் மாவட்டத்தில் நிகழ்ந்த விபத்தில் நேரிட்ட உயிரிழப்பிற்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி ஆழ்ந்த வேதனை தெரிவித்துள்ளார். துயரமான இந்த வேளையில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்குத் தனது இரங்கலைத் தெரிவித்துக் கொண்ட அவர், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையப் பிரார்த்திப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்குப் பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து ரூ. 2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ. 50,000-மும் கருணைத் தொகையாக வழங்கப்படும் என்று பிரதமர் அறிவித்துள்ளார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் பதிவிட்டதாவது:

“அசாமின் கோலாகாட் மாவட்டத்தில் நிகழ்ந்த விபத்தில் நேரிட்ட உயிரிழப்பு குறித்து அறிந்து மிகவும் வேதனை அடைந்தேன். இந்தத் துயரமான வேளையில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையப் பிரார்த்திக்கிறேன்.

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு, பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து தலா ரூ. 2 லட்சம் நிதியுதவி வழங்கப்படும். காயமடைந்தவர்களுக்குத் தலா ரூ. 50,000 வழங்கப்படும்: பிரதமர் @narendramodi.”

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2336031&reg=3&lang=1

****

TV/BR/SH