பி.எம்.இந்தியா
திரு கேஷுபாய் பட்டேல் அவர்கள் தலைமையில் புதுதில்லியில் சோம்நாத் அறக்கட்டளையின் கூட்டம் நடைபெற்றது. பிரதமர் திரு நரேந்திர மோடி, திரு எல்.கே.அத்வானி, திரு ஹர்ஷவர்தன் நியோட்டியா, திரு பி.கே லஹேரி ஆகிய அறக்கட்டளை உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
2016ம் ஆண்டுக்கான அறக்கட்டளை தலைவராக திரு கேஷுபாய் பட்டேல் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். காலஞ்சென்ற திரு பிரசன்வதன் மேத்தாவின் இடத்தில், திரு அமித் ஷா உறுப்பினராக நியமிக்கப்பட்டார். மற்றொரு அறக்கட்டளை உறுப்பினரான திரு ராஜன் கிலாச்சந்த், ராஜினாமா செய்தார்.
சோம்நாத் கோவிலை, முக்கிய சுற்றுலாத் தலமாக மாற்ற வேண்டியதன் அவசியத்தை பிரதமர் வலியுறுத்தினார். மெய்நிகர் அருங்காட்சியகம் மற்றும் அரங்கம் அமைக்க வேண்டும் என்றும் பிரதமர் வலியுறுத்தினார். சோம்நாத் கோவில், டையூ மற்றும் கிர் சிங்கக் காட்சி சுற்றுலா ஆகியவற்றை இணைக்க பாதை அமைக்க வேண்டும் என்றும் பிரதமர் ஆலோசனை கூறினார். சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் மேலும் பல அம்சங்களை உருவாக்க வேண்டும் என்று அறக்கட்டளை முடிவெடுத்தது.