Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்டு இந்தியாவின் பிரதமராக நீண்ட காலமாக பணியாற்றி வரும் பிரதமர் திரு நரேந்திர மோடிக்கு உலகத்தலைவர்கள் வாழ்த்து


ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்டு இந்தியாவின் பிரதமராக நீண்ட காலமாக பணியாற்றி வரும் பிரதமர் திரு நரேந்திர மோடிக்கு உலகத்தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

பூடான் பிரதமர் திரு ஷெரிங் டோப்கே வெளியிட்டுள்ள செய்தியில், திரு நரேந்திர மோடி தமக்கு, நண்பராகவும், சகோதரராகவும், வழிகாட்டியாகவும் உள்ளதாகவும் கூறியுள்ளார்.

இலங்கை அதிபர் திரு அனுர குமார திசநாயக்க வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், இரு நாடுகளுக்கு இடையேயான உறவை மேலும் வலுப்படுத்துவதற்கு இலங்கை உறுதிபூண்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இந்தியாவில் உள்ள இலங்கைத் தூதரகமும் அதிபர் திசநாயக்கவின் செய்தியை வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளதுஇந்திய வரலாற்று தேர்ந்தெடுக்கப்பட்ட நீண்டகாலமாக பணியாற்றும் பிரதமர் திரு நரேந்திர மோடிக்கு தமது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதாக அச்செய்தியில் கூறப்பட்டுள்ளது.

மலேசியப் பிரதமர் திரு அன்வர் இப்ராஹிம் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், அவரது பொதுச் சேவை, தலைமைத்துவத்திற்கான சான்றாக இது உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதற்கும் இரு நாட்டு மக்களுக்கான வாய்ப்புகளை விரிவுபடுத்துவதற்கும் மலேசியாவின் அர்ப்பணிப்பை உறுதிப்படுத்தியுள்ளார்.

நைஜீரியா அதிபர் திரு போலா அகமத் தினுபு வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், தொடர்ந்து 3 முறை இந்திய மக்களின் நம்பிக்கையைப் பெற்றுள்ளதாக சுட்டிக்காட்டி அவரது இந்த சாதனைக்காக அவர் வாழ்த்துவதாகக் கூறியுள்ளார். இந்திய நைஜீரியா இடையேயான உறவை வலுப்படுத்துவதில் பிரதமர் மோடியின்  பங்களிப்பை அதிபர் தினுபு சுட்டிக்காட்டியதுடன் அவர் நலமுடனும் ஞானத்துடனும் வெற்றியுடனும் திகழ தாம் வாழ்த்துவதாகத் தெரிவித்துள்ளார்.

மாலத்தீவு அதிபர் டாக்டர் முகமது மொய்சு வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், இந்தியா மாலத்தீவு இடையே பரஸ்பர மரியாதை, இறையாண்மை, பகிரப்பட்ட நலன்கள் அடிப்படையில் இந்தியாவுடனான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த தமது நாடு விரும்புவதாகக் கூறியுள்ளார்.

கென்ய அதிபர் திரு வில்லியம் சமோய் ரூட்டோ வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், அவரது தலைமையின் மீது இந்திய மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையை இது பிரதிபலிப்பதாகத் தெரிவித்துள்ளார். இருநாடுகளும் பயன்பெறும் வகையில் இந்தியாவுடன் தொடர்ந்து ஒத்துழைப்பதற்கான கென்யாவின் அர்ப்பணிப்பை அவர் வெளிப்படுத்தியுள்ளார்.

கொரிய அதிபர் திரு லீ ஜெ மியூங் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், இந்தியாவின் வளர்ச்சியில் பிரதமர் மோடியின் பங்களிப்புக் குறித்து குறிப்பிட்டுள்ளார். கொரியா இந்தியா இடையேயான சிறப்பு உத்திசார்  நட்புறவை மேலும் மேம்படுத்துவதற்கான நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளார்.

இத்தாலி பிரதமர் திருமதி ஜார்ஜியா மெலோனி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், அண்மையில் ரோமில் திரு மோடியுடனான சந்திப்புக் குறித்து நினைவு கூர்ந்துள்ளார். இரு நாட்டு மக்களின் நலனுக்காக இந்தியா இத்தாலி இடையேயான சிறப்பு உத்திசார் நட்புறவை மேம்படுத்துவதற்கான தமது உறுதிப்பாட்டை அவர் வெளிப்படுத்தியுள்ளார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்:https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2271065&reg=3&lang=1  

***

TV/IR/KPG/RJ