Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ஜனவரி 2 மற்றும் 3ஆம் தேதிகளில் கர்நாடக மாநிலத்திற்கு பிரதமர் வருகை


பிரதமர் திரு. நரேந்திர மோடி கர்நாடக மாநிலத்திற்கு 2020ஆம் ஆண்டு ஜனவரி 2 மற்றும் 3ஆம் தேதிகளில் வருகை தரவுள்ளார்.

தும்கூரில் ஸ்ரீ சித்தகங்கா மடத்திற்கு வருகை தரும் அவர், திரு.ஷிவக்குமார் சுவாமிஜி நினைவு அருங்காட்சியகத்திற்கு அடிக்கல் நாட்டுவதைக் குறிக்கும் கல்வெட்டைத் திறந்து வைக்கிறார்.

மடத்தில் வழிபாடு செய்யும் பிரதமர் அங்கு மரக்கன்று ஒன்றையும் நடுகிறார். கர்நாடக முதலமைச்சர் திரு. பி.எஸ்.எடியூரப்பா மற்றும் திரு. சித்தலிங்கேஸ்வர சுவாமி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களும் இந்நிகழ்வில் பங்கேற்கின்றனர்.

மடத்தில் திரளாக கூடியிருப்பவர்களிடையே பிரதமர் உரையாற்றுவார்.