பி.எம்.இந்தியா

ஒவ்வொருவரும் தங்களது தனிப்பட்ட அடையாளம் அல்லது தனிப்பட்ட பின்னணியுடன் இங்கு வந்து, பல்வேறு புதிய நண்பர்களுடன் இணைந்து சுமார் ஒரு மாத காலம் ஆகியுள்ளது. எனினும், ஒரு மாத காலத்தில் உங்களுக்குள் உடைக்க முடியாத பந்தத்தை ஏற்படுத்தும் வகையில், சூழ்நிலை உருவாகியுள்ளது. உறவினர் போன்ற பந்தம் ஏற்பட்டுள்ளது. மற்ற மாநிலங்களைச் சேர்ந்த கேடட்களை நீங்கள் சந்திக்கும்போது, அவர்களது தனித்தன்மை மற்றும் வேற்றுமைத்தன்மையை அறிந்து ஆச்சரியமடைவீர்கள். நீங்கள் இந்த இடத்தைவிட்டுச் செல்லும்போது, இந்திய குடிமகன் என்ற முறையில், நாட்டைப் பற்றி அதிக அளவில் அறிந்துகொண்டதைப் போன்றும், நாட்டின் ஒவ்வொரு மூலையைப் பற்றியும் அதிக அளவில் அறிந்துகொண்டதைப் போன்றும், நாட்டிற்குள் உள்ள வேற்றுமையை அதிக அளவில் அறிந்துகொண்டதைப் போன்றும் உணர்வீர்கள். இந்த மதிப்புமிகுந்த கட்டமைப்பு குறித்த விதை, இயற்கையாகவே ஒவ்வொரு தேசிய மாணவர் படை முகாம்களிலும் நமக்குள் விதைக்கப்படுகிறது. நாம் அணிவகுப்பில் கலந்துகொள்கிறோம், சீருடையை அணிவதற்காகவே இங்கு வந்துள்ளோம், ராஜபாதைக்கு தயாராகிறோம் என்பது போன்று தோன்றும். எனினும், இந்த மாபெரும் இந்தியாவை நமக்குள் கொண்டாடத் தொடங்கும்போது; நாடு முழுவதிலும் இருந்து நாம் எவ்வாறு வந்துள்ளோம் என்பது குறித்து நாம் உணர்வதில்லை. இந்தியாவுக்காக ஏதாவது செய்வதற்காக வலுவான உணர்வை நாம் எவ்வாறு உருவாக்குகிறோம் என்பது குறித்து கூட நாம் அறிந்திருப்பதில்லை. ஒவ்வொரு சிறு நடவடிக்கையிலும், நமது நாட்டைப் பற்றியும், அதன் எதிர்காலம், நமது பங்கு, நமது பணிகள் ஆகியவை பற்றி சிந்திக்கும் வகையிலான சுற்றுச்சூழல் நிலவுகிறது. இந்த அனைத்துக்குமான ஊக்கத்தைப் பெற்ற பிறகே, நாம் திரும்பிச் செல்ல உள்ளோம். ராஜபாதையில் நடைபெற்ற அணிவகுப்பில் கலந்துகொண்ட தேசிய மாணவர் படை கேடட்கள், மற்றும் அணிவகுப்பில் கலந்துகொள்ள வாய்ப்பு கிடைக்காதவர்கள் அல்லது ராஜபாதையில் இருந்திருக்க வேண்டியவர்கள், பின்னணியில் பணியாற்றியவர்கள், ஒரு மாத காலமாக கடுமையாக உழைத்தவர்கள் என நீங்கள் எடுத்துவைத்த ஒவ்வொரு அடியையும் வைத்து, 10 நாடுகளிலிருந்தும் வந்திருந்த விருந்தினர்கள், ஒட்டுமொத்த தேசம் மற்றும் உலகம் முழுவதும் வசித்துவரும் இந்தியாவிலிருந்து புலம்பெயர்ந்தவர்கள் என அனைவரும் பெருமைகொள்கின்றனர். நீங்கள் எடுத்துவைக்கும் ஒவ்வொரு அடியையும் வைத்து அவர்கள் பெருமைகொள்கின்றனர். நீங்கள் எடுத்துவைக்கும் அடியின் மூலம், நமது நாடு முன்னோக்கிச் செல்வது போன்று அவர்கள் உணர்கின்றனர். உங்களது முழுமையான வீரத்தை நீங்கள் வெளிப்படுத்தியபோது, நாட்டின் வீரம் உயர்ந்தபட்ச நிலைக்கு சென்றுள்ளதாக ஒவ்வொரு குடிமகனும் உணர்ந்தார்கள். இந்த சுற்றுச்சூழல் இந்த இடத்துடன் அடங்கிவிடக் கூடாது. இதற்குப் பிறகே, உண்மையான சோதனை தொடங்குகிறது.
தனது கட்டுப்பாடு மற்றும் ஒற்றுமை மூலம் அனைவராலும் அறியப்பட்டது தேசிய மாணவர் படை. தேசிய மாணவர் படை என்பது வழிமுறை இல்லை. தேசிய மாணவர் படை என்பது ஒரு இயக்கம். தேசிய மாணவர் படை என்பது வெறும் சீருடை அல்லது ஒத்த தன்மை கொண்டது மட்டும் கிடையாது. ஆனால், இது ஒற்றுமை என்ற வார்த்தையின் உண்மையான உணர்வு. எனவே, இந்த உணர்வுடன், இந்த அணிவகுப்பு, இந்த முகாம், இந்த கட்டுப்பாடு, இந்த கடின உழைப்பு ஆகியவை எதை சாதிப்பதை நோக்கமாகக் கொண்டு மேற்கொள்ளப்படுகிறது? இவை அனைத்தையும் செய்வது ஏன்? இவை அனைத்துக்கும் நாட்டில் உள்ள மிகவும் ஏழை மக்களின் பணம் செலவிடப்படுவது ஏன்? இது முதலீடு செய்யப்படுவதன் மூலம், நாட்டில் இதுபோன்ற மையக்கரு, இதுபோன்ற நபர்கள், தீவிர நோக்கத்தின் அடிப்படையில் தொடர்ந்து உருவாக்கப்படுகிறார்கள். இது மற்றவர்களைத் தொடர்ந்து ஊக்குவித்து வருகிறது. இதன்மூலம், நாட்டின் தீர்மானம் தொடர்ந்து அதிகரிக்கும். இதன் காரணமாகவே, இந்த வழியில், வளர்ந்தவர்கள் மூலம், நாட்டையும், மனிதர்களையும் மேம்படுத்த முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. இந்த அனைத்து உணர்வுகளையும் விட்டுவிட்டு, இந்த உணர்வுகளை வாழ்க்கையின் மீதமுள்ள காலத்தில் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்வதற்காக மட்டுமே பயன்படுத்தினால், சிலவற்றை இழந்துவிடுவீர்கள். நாடு சுதந்திரமடைந்ததற்குப் பிறகு, ஆயுதப்படைக்கான விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளை உருவாக்குவதற்கு முன்னதாகவே, நாட்டில் தேசிய மாணவர் படை சட்டம் உருவாக்கப்பட்டது என்பதை நினைத்து நாம் பெருமைகொள்ள வேண்டும். தேசக் கட்டமைப்பு என்பது, நாட்டின் இளம் தலைமுறையினர் மற்றும் நாட்டின் பாதுகாப்புக்கு கொடுக்கும் முக்கியத்துவம் ஆகியவற்றுடன் தொடர்புடையது.
இன்று, தேசிய மாணவர் படை உருவாக்கப்பட்டு, 70 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. 70 ஆண்டுகால பயணத்தில், என்னைப் போன்ற லட்சக்கணக்கான தேசிய மாணவர் படை கேடட்டுகள், தேசப்பற்றின் மகத்துவத்தைப் பெற்று, வாழ்க்கைப் பாதையை வகுத்துள்ளோம்.
நண்பர்களே, தேசிய மாணவர் படை மூலம், நாம் குறிக்கோள் உணர்வைப் பெற்றுள்ளோம். தேசிய மாணவர் படை, 70 ஆண்டுகளை நிறைவுசெய்துள்ள நிலையில், தற்போது, நாம் எங்கிருந்து வந்தோம், எங்கே வந்துள்ளோம், நாட்டை எங்கே கொண்டுசெல்ல விரும்புகிறோம் ஆகியவை குறித்து ஆராய வேண்டியது அவசியம். இந்த தேசிய மாணவர் படை எந்த வடிவில் இருக்க வேண்டும்? தேசிய மாணவர் படையில் என்னென்ன புதிய விஷயங்களை சேர்க்க வேண்டும்? அதற்காக நாம் என்ன செய்ய வேண்டும்? தேசிய மாணவர் படை உருவாக்கப்பட்டதன் 75 ஆண்டுகளை நிறைவுசெய்யும்போது, எவ்வாறு இருக்க வேண்டும் என்ற இலக்கை நிறைவேற்றும் வகையில், செயல் திட்டத்தை உருவாக்க வேண்டும் என்று இந்த விவகாரத்தில் தொடர்புடைய நபர்களுக்கு நான் அழைப்பு விடுக்கிறேன். தேசிய மாணவர் படையின் செயல்பாடுகள் மற்றும் தேசிய மாணவர் படை கேடட்டுகளின் பணிகள் மூலம், நாட்டின் ஒவ்வொரு மூலையிலும் புதிய விஷயங்கள் இருக்க வேண்டும், சில மாற்றங்களைக் கொண்டுவர வேண்டும், பெருமைப்படும் வகையிலான உணர்வுகளை ஏற்படுத்த வேண்டும் போன்ற நிலையை எட்டும் வகையில், தேசிய மாணவர் படைக்கான இலக்குகளை நாம் உருவாக்க வேண்டும். இன்று, 70 ஆண்டுகளை நாம் நிறைவுசெய்துள்ளதால், 75 ஆண்டுக்கான இலக்குகளை இந்தத் தீர்மானத்துடன் உருவாக்க வேண்டும்.
நாட்டில் உள்ள எந்தவொரு இளைஞரும் ஊழலை சகித்துக் கொண்டிருப்பார்கள் என்பதை நான் நம்ப மாட்டேன். ஊழலுக்கு எதிரான உணர்வுடனேயே சமூகம் உள்ளது. ஆனால், ஊழலுக்கு எதிரான உணர்வுடன் மட்டுமே நாம் நம்மை ஏன் கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும்? ஊழலுக்கு எதிரான கோபம் மற்றும் வெறுப்பை வெளிப்படுத்திக் கொள்வதோடு மட்டுமே நாம் ஏன் நிறுத்த வேண்டும்? இந்தப் போரை நீண்டகாலத்துக்கு எடுத்துச் செல்ல வேண்டும். இதனை நிறுத்திவிடக் கூடாது. எனது நாட்டின் இளைஞர்களுக்கு எதிர்காலத்தை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டே ஊழல் மற்றும் கறுப்புப்பணத்துக்கு எதிரான போராட்டம் மேற்கொள்ளப்படுகிறது. எனது நாட்டு இளைஞர்களின் எதிர்காலம் பாதுகாக்கப்பட்டால், அது நாட்டின் எதிர்காலத்தை உருவாக்கும்.
ஆனால், இந்த நாட்டின் பிரதமர் என்ற முறையில், இந்திய இளைஞர்களிடம் சிலவற்றை நான் கேட்க விரும்புகிறேன். தேசிய மாணவர் படை கேடட்களிடம் சிலவற்றை கேட்க விரும்புகிறேன். நான் கேட்பதால் நீங்கள் வருத்தமடைய மாட்டீர்கள் என்று எனக்குத் தெரியும். எனது நாட்டின் இளைஞர்கள் என்னைப் பார்த்து வருத்தமடைய மாட்டார்கள். நான் வாக்குகளையோ, அரசியல் நிலையில் முன்னேற்றம் பெறுவதற்கான உதவியையோ கேட்கப் போவதில்லை. உங்களிடம், எனது நாட்டின் இளைஞர்களிடம் நான் உதவி கேட்க விரும்பினால், கரையான் போன்று அரித்துக் கொண்டிருக்கும் இந்த ஊழல் இல்லாத நாட்டை உருவாக்கவே கேட்பேன். உங்களால் என்ன முடியும் என்பதை உணர்ந்து பார்க்கலாம். நீங்கள் முடிவுசெய்ய வேண்டியது என்னவென்றால்: யாருக்கும் லஞ்சம் வழங்க மாட்டோம் அல்லது எந்த வகையிலும் லஞ்சம் வாங்க மாட்டோம் என்று முடிவுசெய்ய வேண்டும். எந்தவொரு நிலையிலும் நீங்கள் இதனை செய்ய வேண்டும். எனினும், இது மட்டும் போதுமானதாக இருக்காது. ஒரு செயல்பாடு, ஒரு இலக்கு இருக்க வேண்டும். இதனை செய்ய ஒவ்வொரு ஆண்டும் 100 குடும்பங்களுக்கு அறிவுரை வழங்க நீங்கள் தீர்மானம் மற்றும் விதியை உருவாக்க வேண்டும். பின்னர் என்ன நடக்கும். நம்பகத்தன்மை இருக்கும்போது, வெளிப்படைத்தன்மை இருக்கும்போது, சூழ்நிலையில் தானாகவே மாற்றம் ஏற்படும். பொருட்களை வாங்குவதற்காக நாம் எங்கு சென்றாலும், எங்கெல்லாம் பணத்தை மாற்றிக் கொள்கிறோமோ, அங்கெல்லாம் ரொக்கமாக செய்யக் கூடாது. நாம் அனைவரும் மொபைல் போனை பயன்படுத்துவோராக இருக்க வேண்டும். பீம் செயலியை பதிவிறக்கம் செய்து, ஒவ்வொரு முறை பொருட்களை வாங்கும்போதும், பீம் செயலி மூலம் மேற்கொள்கிறோமா? நீங்கள் செல்லும் கடை அல்லது வணிக வளாகங்களில், பொருட்களை வாங்கும்போது, அதற்கு பீம் செயலியை பயன்படுத்துமாறு வலியுறுத்துகிறீர்களா அல்லது இல்லையா? நீங்கள் கட்டாயம் செய்ய வேண்டும். தயவுசெய்து இதுபோன்ற செயல்களை மேற்கொள்ளும் பழக்கத்தை உருவாக்கிக் கொள்ளுங்கள். இதுபோன்ற வெளிப்படைத்தன்மையை உங்களால் காண முடியும். நம்பகத்தன்மையை உருவாக்குவது மிகவும் எளிதாக மாறும். ஊழல் இல்லாத இந்தியாவை உருவாக்க இதுபோன்ற வலிமையான நடவடிக்கைகளை நம்மால் மேற்கொள்ள முடியும். எனது இளைஞர்களின் உதவி இல்லாமல், இதனை செய்ய முடியாது. இந்த முயற்சியை எனது தேசிய மாணவர் படை கேடட்கள், இலக்கு அடிப்படையில் மேற்கொண்டால், இந்த நாட்டை ஊழல் பாதைக்கு அழைத்துச் செல்ல யாருக்கும் தைரியம் வராது. உயர் பதவிக்கு அதிக அளவில் ஊழல் செய்யும் நபர்கள் வந்தாலும் கூட, நேர்மையான பாதையைப் பின்பற்ற வேண்டிய கட்டாயத்துக்கு அவர் தள்ளப்படுவார்.
ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகள் குறித்து அதிக அளவில் விவாதம் நடத்தப்பட்டபோதிலும், பலம்வாய்ந்த நபர்கள் மீது எந்த நடவடிக்கையையும் எடுக்க முடியவில்லை என்று சில நேரங்களில் அதிருப்தி நிலவுகிறது. இன்று, ஊழல் செய்ததால், குறைந்தபட்சம் மூன்று முதலமைச்சர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ள காலகட்டத்தை நீங்கள் கடந்துள்ளீர்கள். கடவுள் இல்லை என்று யாரால் கூற முடியும்? கோயில்களில் நீதி கிடையாது என்று யாரால் கூற முடியும்? இன்று அவர்களை யாராலும் பாதுகாக்க முடியாது. இதன் காரணமாகவே, தேசிய மாணவர் படை கேடட்கள் முன்னிலையில் இதனை கூற விரும்புகிறேன். இவர்கள் மூலமாக, நாடு முழுவதும் உள்ள தேசிய மாணவர் படை கேடட்களுக்கு கூறுகிறேன். அதாவது, நாட்டு நலப்பணித் திட்ட இளைஞர்களாக இருந்தாலும் அல்லது நேரு இளைஞர் மையத்தின் இளைஞர்களாக இருந்தாலும், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளின் மாணவர்களாக இருந்தாலும், அல்லது நாட்டுக்காக வாழ்ந்துவரும் மற்றும் உயிர்துறக்கும் இளைஞர்களாக இருந்தாலும், உங்களின் உதவியை நாடுகிறேன். முன்னோக்கி வந்து, இந்தப் போராட்டத்தில் ஒரு படை வீரராக என்னுடன் சேருங்கள். ஒன்றாக இணைந்து பணியாற்றுவதற்கு முன்வாருங்கள். இந்த கரையானை நாட்டிலிருந்து நாம் அகற்றிவிட்டால், நாட்டில் உள்ள ஏழை மக்களின் உரிமைகளை வழங்கும் போராட்டத்தில் வெற்றிபெற முடியும்.
இந்தக் கொடுமைகளை அழித்துவிட்டால், இது, நாட்டில் உள்ள ஏழை மக்களுக்கு பெருமளவில் பயனளிக்கும். பணத்தை உரிய முறையில் செலவிட்டால், ஏழைக் குடும்பங்களுக்கு ஏற்றுக் கொள்ளக் கூடிய மருந்து கிடைக்கும். பணத்தை உரிய முறையில் செலவிட்டால், ஏழை மக்களின் குழந்தைகளுக்கு சிறந்த பள்ளிகள், சிறந்த ஆசிரியர்களை வழங்குவதற்கான வசதிகளை உருவாக்கும். பணத்தை உரிய முறையில் செலவிட்டால், கிராமங்களுக்கு சாலைகளை அமைக்க முடியும். பணத்தை உரிய முறையில் பயன்படுத்தினால், ஒடுக்கப்பட்ட, புறக்கணிக்கப்பட்ட மற்றும் நாட்டின் தனிப்பட்ட மக்களுக்கு சில வசதிகளை செய்துகொடுப்பதற்கான வாய்ப்பு உருவாக்கப்படும்.
எனது நாட்டின் அன்புக்குரிய இளைஞர்களே, இதன் காரணமாக, ஆதார் குறித்த விவாதங்களை இந்த நாட்களில் நீங்கள் கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள். உலகில் தற்போதுள்ள தொழில்நுட்பத்தை அறிந்துகொண்டிருக்கும் நபர்கள் மற்றும் மாறிக் கொண்டிருக்கும் காலம் குறித்து அறிந்தவர்களுக்கு இந்தத் தரவுகள், வரும் நாட்களில் உலகில் மிகவும் சக்திவாய்ந்த விஷயமாக இருக்கும் என்பது தெரியும். நாட்டில் தரவுகளை சக்திவாய்ந்ததாக கருதும் நாள், வெகுதொலைவில் இல்லை. டிஜிட்டல் உலகம் மற்றும் தரவுகளைக் கொண்ட உலகத்தில், இந்தியா பெருமைகொள்வதற்கு மிகப்பெரும் காரணமாக ஆதார் இருக்கும்.
தற்போது ஆதார் மூலம், பலன்கள் ஏழை மக்கள் மற்றும் சாதாரண மக்களுக்கு சென்றுசேர்கிறது. ஆனால், இதற்கு முன்னதாக தவறானவர்களின் கைகளுக்கு சென்றுவந்தது; இதுவும் கூட ஊழலின் ஒரு வழிமுறைதான். அரசு அலுவலகங்களில் உள்ள ஆவணங்களில், பிறக்காத குழந்தை, பெரியவர்களாக வளர்ந்து, திருமணம் செய்துகொண்டு, விதவையாக மாறுகிறார்கள், அவருக்கு அரசு கஜானாவிலிருந்து விதவைகளுக்கான ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. இதுபோன்ற செயல்பாடுகள் இருந்துவந்தது. ஆனால் தற்போது, ஆதார் மூலம், உரிய பயனாளிகளை அடையாளம் காண முடிகிறது. நேரடி மானியத் திட்டம் மூலம், தங்களது உரிமைகளை அவர்கள் பெறத் தொடங்கியுள்ளனர். எனது நாட்டின் இளைஞர்களே, இது சில திட்டங்களில் மட்டும் அமல்படுத்தப்பட்டுள்ளது. தற்போது 100 சதவீதம் அடையவில்லை. இது வெறும் தொடக்கம்தான். இருந்தாலும், தவறானவர்களின் கைகளுக்கு சென்றுகொண்டிருந்த சுமார் ரூ.60,000 கோடி சேமிக்கப்பட்டுள்ளது. இந்த அனைத்தையுமே செய்ய முடியும். எனவே, குறைந்த ரொக்கம் மற்றும் பொருட்களை வாங்குதல் மற்றும் விற்பனைக்கு பீம் செயலியை பயன்படுத்துதல் என்ற மந்திரத்தின் மூலம், ரொக்கமற்ற சமூகத்தை உருவாக்கும் நோக்கில் எனது இளைஞர்கள் பயணிக்க வேண்டும். கட்டணம் செலுத்துவதாக இருந்தாலும் கூட, அதனை பீம் செயலி மூலம் செலுத்த வேண்டும். இதனைத் தொடர்ந்து, நாட்டில் எப்படிப்பட்ட மாற்றங்கள் ஏற்படுகிறது என்பதைப் பார்க்கலாம்.
எனது இளம் நண்பர்களே, நீங்கள் வாழ்க்கையில் நல்ல அனுபவத்தைப் பெற்றுள்ளீர்கள். நாட்டின் அனைத்து மூலைகளையும் சேர்ந்தவர்களுடன் வாழ்ந்து, மிகவும் குறுகிய காலத்தில், நாட்டைப் பற்றிய அனுபவத்தைப் பெறும் வாய்ப்பை நீங்கள் பெற்றுள்ளீர்கள். இந்தியாவை புதிதாக தொட்டுப் பார்த்ததைப் போன்ற உணர்வை நீங்கள் பெற்றுள்ளீர்கள். இந்த புதிய உத்வேகம், புதிய தீர்மானம், புதிய விருப்பம் ஆகியவற்றின் மூலம், நாம் அனைவரும் ஒருங்கிணைந்து, புதிய இந்தியாவை உருவாக்கும் தீர்மானத்தின்படி முன்னோக்கிச் செல்வோம். நாட்டை நாம் முன்னோக்கி கொண்டுசெல்ல வேண்டும். நாடு சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் நிறைவடையும் 2022-ம் ஆண்டில், நமது சுதந்திரப் போராட்ட வீரர்களின் கனவை நிறைவேற்றும் பலத்துடன் புதிய இந்தியாவை நாம் உருவாக்க வேண்டும்.
உங்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துகள்.
நன்றி.
***
Every youngster came here with their own personality and identity but I am sure the last month would have led to the formation of new friendships and learning of new things from others: PM @narendramodi https://t.co/2HpoKDlNub
— PMO India (@PMOIndia) January 28, 2018
NCC camps teach every youngster about the different cultures of India. It motivates every youngster to do something good for the nation: PM @narendramodi https://t.co/2HpoKDlNub
— PMO India (@PMOIndia) January 28, 2018
This spirit that has been learnt in NCC camps has to remain with you for life: PM @narendramodi at the NCC parade https://t.co/2HpoKDlNub
— PMO India (@PMOIndia) January 28, 2018
NCC is not about uniform or uniformity, it is about unity. Through NCC we nurture teams that work in mission mode and inspire others: PM @narendramodi
— PMO India (@PMOIndia) January 28, 2018
NCC completes 7 glorious decades. It has given a sense of mission to several people. Today we celebrate what we have achieved and also think about how we can make the NCC experience even more effective in the years to come: PM @narendramodi https://t.co/2HpoKDlNub
— PMO India (@PMOIndia) January 28, 2018
I urge all stakeholders to think about the plan of action of the next 5 years, when NCC turns 75: PM @narendramodi https://t.co/2HpoKDlNub
— PMO India (@PMOIndia) January 28, 2018
The youth of India refuses to accept corruption. The fight against corruption and black money will not stop. This is a fight for the future of India's youth: PM @narendramodi
— PMO India (@PMOIndia) January 28, 2018
My young friends, I am here to ask for something. No, I am not here for seeking votes or politics. My appeal is- please further digital transactions through (the BHIM App). Please also get others on that platform. This is a step towards transparency and accountability: PM
— PMO India (@PMOIndia) January 28, 2018
Once the youth of India decide something, everything is possible: PM @narendramodi
— PMO India (@PMOIndia) January 28, 2018
Earlier people believed that nothing happens to the rich and powerful. But, things are different today. People who served as Chief Ministers are in jail for their corruption: PM @narendramodi https://t.co/2HpoKDlNub
— PMO India (@PMOIndia) January 28, 2018
These days you keep hearing about Aadhaar. I want to say Aadhaar has added great strength to India's development. What would earlier get into wrong hands is now going to the intended beneficiaries: PM @narendramodi
— PMO India (@PMOIndia) January 28, 2018