பி.எம்.இந்தியா
வணக்கம்
ஜப்பான் போன்ற ஒரு நாடும், இலையுதிர் காலத்தின் சூழலும் தங்களது இணக்கமும், உண்மையிலேயே ஒரு அற்புதமான சங்கமமாகும். இந்தியாவில் திங்களன்று காலை ஒன்பது மணி அளவான நேரத்தில், இக்காலை வேளையில் இவ்வளவு அதிகமான எண்ணிக்கையிலான நீங்கள் இங்கு வருகை தந்திருப்பதற்கு எனது மனதின் ஆழத்திலிருந்து அன்பையும், ஆசிகளையும், நன்றியோடு உங்கள் முன் சமர்ப்பிக்கிறேன்.
2016-ஆம் ஆண்டுக்குப் பிறகு இன்று, எனது உறவுக்காரர்களுடனான இந்தச் சந்திப்பு மிகவும் சிறப்பானது. இத்தருணத்தில் எல்.டி.பி.-யின் தலைவராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் பிரதமர் சின்ஷோ அபே-விற்கு இந்தியாவின் சார்பிலும் உங்களது அனைவரின் சார்பிலும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
பிரதமர் சின்ஷோ அபே, இந்திய மக்கள் மீதும், என் மீதும் என்றுமே அன்பும். நேசமும் கொண்டவராவர். எனக்கு வழங்கப்பட்ட சிறப்பான வரவேற்பு, அன்பு மற்றும் நேசத்தின் புதிய பரிமாணத்தை எனக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. பிரதமர் அபே-விற்கும், ஜப்பான் மக்களுக்கும் எனது நன்றியை நான் தெரிவித்துக் கொள்கிறேன்.
உங்கள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த தீபாவளி வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். ஏற்றி வைக்கப்பட்ட இடத்தில் தீபமானது. ஒளியைத் தருவது போன்று, நீங்களும் ஜப்பானிலும், உலகெங்கிலும் ஜப்பானின் பெயருக்கு, ஒளியூட்ட வேண்டும் என்பதே என் விருப்பமாகும்.
நண்பர்களே,
இந்தியாவின் பிரதமராக ஜப்பானுக்கு மூன்றாவது முறையாக வருகை தந்துள்ளேன். நான் எப்போது ஜப்பானுக்கு வந்தாலும் அது ஒரு அன்பான அனுபவமாகவே இருந்துள்ளது. ஏனென்றால் இந்தியாவுக்கும், ஜப்பானுக்கும் இடையேயான உறவுகள் கலாச்சாரம் தொடங்கி நவீன காலம் வரை வேர் கொண்டுள்ளது. இந்து மதமாக இருந்தாலும். பௌத்த மதமாக இருந்தாலும் பங்களிப்போடு கூடியது நமது பாரம்பரியம். இந்த பாரம்பரியத்தின் துளிகள் மக்களிடையே எதிரொலிக்கிறது.
சரஸ்வதி, லட்சுமி, சிவன், கணபதி என்ற தெய்வங்களாக இருந்தாலும், அவற்றுக்கு சமமானவர்களை ஜப்பானிய சமூகத்திலும் காணலாம். சேவை என்ற வார்த்தைக்கான பொருள், ஜப்பான் மொழியிலும், இந்தியிலும் ஒன்றாக உள்ளது. இல்லம் என்பது கோமாகவும், தோரணங்கள் என்பவை இங்கு தோரியாக உள்ளன. புனித மலையான ஆன் டேக்கிற்கு புனித யாத்திரை மேற்கொள்ளும்போது ஜப்பானியர்கள் உடுத்திக் கொள்ளும் வெள்ளை ஆடைகள் மீது தொன்மையான மொழியான சமஸ்கிருதத்தில் சித்தம் என்று எழுதப்படுகிறது. ஜப்பானிய வெள்ளை ஆடையான டெங்யூவை அவர்கள் அணியும் போது அதன் மீது ஓம் என்று எழுதப்படுகிறது.
நண்பர்களே,
இந்தியாவிற்கும், ஜப்பானுக்கும் இடையேயான உறவுகள் இது போன்ற பல கடந்தகால வலிமையான நூல் இழைகளால் பின்னப்பட்டுள்ளன. இந்தியா மற்றும் ஜப்பானின் வரலாற்றை புத்தரும், போசும் இணைக்கின்றனர் என்றால், நவீன இந்தியாவின் நிகழ்காலத்தில் உங்களைப்போன்ற தூதர்கள் அதனை வலுப்படுத்துகின்றனர். அரசாங்கத்திற்கான தூதர் ஒருவர்தான் என்றாலும், நமது நாட்டின் பல்லாயிரக்கணக்கான தூதர்கள் இங்கு உள்ளனர்.
இந்திய – ஜப்பான் உறவு, அதன் மக்கள், கலாச்சாரம் மற்றும் இரு நாட்டின் இலக்குகளை இணைக்கும் பாலமாக நீங்கள் இருக்கிறீர்கள். இந்தப் பொறுப்பை தாங்கள் வெற்றிகரமாக ஏற்றிருப்பது எனக்கு மகிழ்ச்சியை தருகிறது.
நண்பர்களே,
பிரதமர் சின்ஷோ அபே-வோடு நான் எப்போது பேசினாலும் இந்திய சமுதாயத்தினரை அவர் பாராட்டுவது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது. தங்களது திறன் மற்றும் கலாச்சாரத்தின் காரணமாக நீங்கள் இங்கு மிகுந்த மரியாதையை சம்பாதித்து இருக்கிறீர்கள்.
யோகாவை ஜப்பானிய வாழ்க்கையின் ஒரு பகுதியாக ஆக்குவதில் நீங்கள் வெற்றிக் கண்டு இருக்கிறீர்கள். இந்திய உணவு வகைகளை இங்கு அறிமுகப்படுத்தியதோடு ஜப்பானிய நண்பர்களோடு சேர்ந்து தீபாவளியையும் கொண்டாடுகிறீர்கள். தற்காப்புக் கலையில் திறன் கொண்ட இந்த நாட்டில் கபடி கலையை புகுத்தியதோடு இங்கு கிரிக்கெட் கலாச்சாரத்தை வளர்ப்பதிலும் ஈடுபட்டுள்ளீர்கள்.
பங்களிப்பு மற்றும் கூடி வாழ்ந்து உள்ளங்களை கொள்ளைக் கொள்ளும், உங்களது மந்திரம் பாராட்டுக்குரியது என்பதோடு ஜப்பானியர்கள் உள்ளங்களிலும் இடம் பிடித்துள்ளீர்கள். இங்குள்ள முப்பதாயிரத்துக்கும் மேற்பட்ட இந்தியர்கள் நமது கலாச்சாரத்தின் பிரதிநிதிகளாக உள்ளீர்கள் என்பது எனக்கு மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது என்று கூறினார்.
நண்பர்களே,
இந்தியாவிற்கு தொடர்ந்து வருகை தாருங்கள், அவ்வாறு வராதவர்கள் பத்திரிகைகள் மற்றும் இணையதளம் வழியாக இந்தியாவில் நடைபெறும் மாற்றங்களைப் பற்றி தெரிந்து கொள்கிறீர்கள். இன்று இந்தியா மாபெரும் மாற்றத்தை கண்டு வருகிறது. இன்று மனித இனத்திற்கு சேவை செய்யும் இந்தியாவின் முயற்சிகளை உலகம் பாராட்டுகிறது. பொதுச்சேவைத் துறையில் ஆற்றப்படும் பணி மற்றும் இந்தியாவில் வகுக்கப்படும் கொள்கைகளுக்காக இந்தியாவிற்கு மதிப்பளிக்கப்படுகிறது.
சமீப காலமாக இந்தியாவின் முயற்சிகளை உலகின் இரண்டு பெரிய அமைப்புகள் பாராட்டி உள்ளன. பசுமையான எதிர்காலத்திற்கான இந்தியாவின் பங்களிப்பு காரணமாக ஐ.நா. சபை “சாம்பியன் ஆஃப் தி எர்த் அவார்டு” என்ற விருதையும், சியோல் அமைதிப் பரிசை வழங்கி, சியோல் அமைதி அறக்கட்டளை இந்தியாவை கவுரவித்திருக்கிறது.
நண்பர்களே,
இவ்விருதுகள் 1.25 பில்லியன் இந்தியர்களின் பிரதிநிதி என்ற முறையில், எனக்கு வழங்கப்பட்டிருக்கலாம். ஆனால், எனது பங்களிப்பு முத்துமாலையில் முத்துக்களை இணைத்து அதனை முன்னெடுத்துச் செல்லும் ஒரு கயிற்றைப் போன்றதுதான்.
நமது நாடு தங்களைப் போன்ற முத்துக்களையும், வைரங்களையும் கொண்டதாகும். இதற்கு ஒரு முகத்தோடுக் கூடிய முயற்சிதான் தேவைப்படுகிறது. இதையே நாம் நான்காண்டுகாலமாக செய்து வருகிறோம். இன்று பொதுமக்கள் மற்றும் அவர்களது பங்களிப்பின் ஒட்டுமொத்த சக்தி உலகத்தால் அங்கீகரிக்கப்படுகிறது.
இன்று இந்தியா சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்பு, உலக அமைதி மற்றும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை குறைப்பதில் முக்கிய பங்காற்றி வருகிறது. மோடினாமிக்ஸ் என்ற பொருளாதார கொள்கையை பாராட்டியதற்கு சியோல் அமைதி பரிசின் நடுவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களது உணர்வுகளை மதிக்கும் அதே நேரத்தில், இந்த பரிசு மோடினாமிக்ஸுக்கு பதிலாக இண்டோனாமிக்ஸுக்கு செய்யப்பட்ட கவுரவமாகும்.
அரசிற்கு தலைமை வகிப்பதால் இந்தியாவின் கலாச்சாரத்திற்கும், பாரம்பரியத்திற்கும் தேவையானதை மட்டுமே நான் செய்கிறேன். ‘உலகமே ஒரு குடும்பம்’ மற்றும் “அனைவருக்கும் மகிழ்ச்சியும் நோயற்ற வாழ்வும்” என்ற தொன்மை வாய்ந்த கோட்பாட்டிற்கு நாம் நம்மை அர்ப்பணித்துக் கொண்டுள்ளோம். இந்தியாவின் கண்கொண்டு உலகம் பார்க்கப்பட வேண்டும் என்பதற்காக மட்டுமே நமது அரசு மாற்றங்களை செய்துள்ளது.
இந்திய தீர்வு மற்றும் சர்வதேச செயல்பாடு என்கின்ற உணர்வோடு நமது அரசு தொடர்ந்து செயலாற்றி வருகிறது. முதலில், இந்தியாவின் பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டு பிறகு அந்த மாதிரியானது உலகின் மற்ற நாடுகளுக்கு முன்பு வைக்கப்படுகிறது.
நண்பர்களே,
ஜன்தன், ஆதார், கைபேசி ஆகிய மூன்றின் மூலமாக இந்தியாவில் உருவாக்கியிருக்கும் வெளிப்படைத்தன்மை உலகில் உள்ள மற்ற வளரும் நாடுகளுக்கும், ஊக்கம் தருகிறது என்பதை அறிந்தால், நீங்கள் பெருமைப்படுவீர்கள். இந்தியாவில் உருவாக்கப்பட்டு வரும் முறைகள் தற்போது ஆராயப்பட்டு வருகின்றன. அது மட்டுமல்லாமல் பீம் செயலி மற்றும் ரூபே அட்டை போன்ற டிஜிட்டல் பரிவர்த்தனைக்கான நமது நவீன ஏற்பாடுகளைப் பற்றி அறிந்து கொள்வதில் மற்ற நாடுகளும் கவனம் செலுத்தி வருகின்றன.
ஜப்பானும், குறைந்த அளவிலான நாணயப் பயன்பாட்டைக் கொண்ட பொருளாதாரத்தை, இலக்காகக் கொண்டு முயற்சிகள் எடுத்து வருவதாக நான் அறிகிறேன். இந்த இலக்கை நோக்கி இந்தியா பெருமளவில் முன்னேறி உள்ளது என்பதை அறிய நீங்கள் மகிழ்ச்சிஅடைவீர்கள். கடந்த நான்காண்டுகாலமாக யு.பி.ஐ., பீம் மற்றும் இதர டிஜிட்டல் களங்களின் மூலமாக டிஜிட்டல் பரிவர்த்தனை 7 மடங்காக அதிகரித்துள்ளது.
அதே நேரத்தில் உள்ளடக்கிய நிதி முறையை இந்தியா அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்கிறது. தபால் அலுவலகங்கள் மூலமாக நிதிச் சேவைகள் கிராமங்களில் உள்ள இல்லங்களை சென்றடைகின்றன. நீங்கள் குழந்தை பருவத்தில் பார்த்த தபால்காரர் தற்போது வங்கியாளர்களாக உருவாகியுள்ளார்.
நண்பர்களே,
டிஜிட்டல் உள்கட்டமைப்புத் துறையில் இந்தியா முன் எப்போதும் இல்லாத வளர்ச்சியைக் கண்டுள்ளது. இந்தியாவில் இன்று இணையதள இணைப்பு கிராமங்களை சென்றடைந்துள்ளது என்பதோடு ஒரு பில்லியன் கைபேசிகள் செயல்பாட்டில் உள்ளன. சில நேரங்களில் இந்தியாவின் மக்கள் தொகையைவிட அதிகமாக கைபேசிகள் இருக்கின்றன என்று கூறப்படுகிறது. இந்தியாவில் ஒன் ஜி.பி. டேட்டா ஒரு சிறு குளிர்பானத்தை விட குறைந்த விலையிலானது. இன்று இந்த சேவைகள் மக்களை சென்றடைவதற்கு இந்த விலை குறைந்த டேட்டா ஒரு கருவியாக உள்ளது.
அதே நேரத்தில் இந்தியாவில் தயாரிப்போம் என்பது சர்வதேச அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது. இன்று நாம் இந்தியாவிற்காக சிறந்த பொருட்களை தயாரிப்பதோடு உலகிற்கும் தயாரித்து வருகிறோம். மின்னணு மற்றும் மோட்டார் வாகன தயாரிப்புத் துறையில் இந்தியா ஒரு உலகளாவிய மையமாக மாறியுள்ளது. கைபேசித் தயாரிப்பிலும், நாம் முதலிடத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறோம்.
நண்பர்களே,
கடந்த நான்கு வருடங்களாக வர்த்தகத்திற்காக நாட்டில் உருவாக்கப்பட்டிருக்கும் சூழலே, இந்தியாவில் தயாரிப்போம் என்பதன் வெற்றிக்குக் காரணமாகும். வர்த்தகம் செய்வதற்கான சுமுகமான சூழலின் தரவரிசையில் நாம் நாற்பது புள்ளிகள் முன்னேறியுள்ளோம். சர்வதேச போட்டி தரவரிசையில், நாம் ஐந்து புள்ளிகள் முன்னேறியுள்ளோம். அதே நேரத்தில், புதுமையை பொறுத்தவரை உலகின் முன்னணி நாடுகளின் பட்டியலில் நாம் இணைந்துள்ளோம். தொடக்கநிலை நிறுவனங்களுக்கான சூழலில், இந்தியா இரண்டாவது இடத்தைப் பெறுவதற்கு இதுவே காரணமாகும்.
நண்பர்களே,
இந்தியாவில் எந்த புதுமையான முயற்சி செயல்படுத்தப்பட்டாலும், எது போன்ற தீர்வுகள் உருவானாலும் அவை குறைந்த விலையிலானவை என்பதோடு தரம் வாய்ந்தவையாகவும் இருக்கின்றன. இந்தியாவின் விண்வெளித் திட்டம் இதற்கான பெரிய எடுத்துக்காட்டாகும். பல நாடுகள் மற்றும் தனியார் நிறுவனங்களின் செயற்கைக் கோள்களை இந்தியா குறைந்த செலவில் விண்ணில் செலுத்துகிறது. சென்ற வருடம் நூற்றுக்கும் மேற்பட்ட செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்தி நமது அறிவியலாளர்கள் முன் எப்போதும் இல்லாத சாதனை படைத்துள்ளனர்.
குறைந்த நிதியோடு சந்திரயான் மற்றும் மங்கள்யானை விண்ணில் செலுத்திய நாம் 2022-ம் ஆண்டில் ககன்யானை செலுத்த தயாராக இருக்கின்றோம். ககன்யான் முழுவதுமாக இந்தியாவில் தயாரிக்கப்பட்டதாக இருக்கும் என்பதோடு விண்ணிற்கு செல்பவரும் இந்தியராகவே இருப்பர்.
நண்பர்களே,
மண் முதல் விண் வரை இன்று இந்தியாவில் பல மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. இந்த மாற்றங்களின் காரணமாக இன்று உலகிலேயே இந்தியா மிக வேகமாக வளர்ந்து வரும் ஒரு பொருளாதாரமாக இருக்கிறது. இந்த மாற்றங்களின் காரணமாக அடுத்த பத்தாண்டுகளில் உலகின் வளர்ச்சியை இந்தியா நிர்ணயிக்கும் என்று உலகின் அனைத்து முகமைகளும் தெரிவித்துள்ளன. இந்தியாவின் இந்த வளர்ச்சியில், ஜப்பானும், தாங்களும் பெரும் பங்காற்றவிருக்கிறீர்கள்.
புல்லட் ரயில் முதல் நவீன நகரங்கள் வரை நவீன இந்தியாவின் எந்த புதிய உள்கட்டமைப்பு பணி என்றாலும் ஜப்பானுக்கு அதில் ஒரு பங்களிப்பு உள்ளது. இந்தியாவின் மனித சக்தி, இந்திய இளைஞர்களின் சக்தி ஆகியவை ஜப்பானின் திறனிலிருந்து பயன் பெறுகின்றன.
நண்பர்களே,
நவீன இந்தியாவை உருவாக்குவதில் அனைவரும் பங்களிப்பை வழங்க வேண்டும் என்று நான் அழைப்பு விடுக்கிறேன். முதலீட்டிற்கு உகந்ததான வாய்ப்புகள் மற்றும் புதுமையோடு தங்களது வேர்களோடு தொடர்பு கொள்வதற்கு இன்று ஒரு முக்கியமான தருணமாகும்.
ஜப்பானில் வாழும் இந்தியர்கள் தங்களது நண்பர்களோடு நாட்டின் வளர்ச்சிக்கு பங்களித்துள்ளீர்கள். சுவாமி விவேகானந்தாஜி, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், மற்றும் ஜப்பானிலிருந்து செயல்பட்ட இந்திய சுதந்திர இயக்கம் ஆகியவை வழங்கிய ஆதரவு கோடிக்கணக்கான இந்தியர்களின் உள்ளங்களில் என்றும் பதிந்துள்ளது.
எதிர்காலத்தில் நமது உறவுகள் மேலும் வலுப்பெறவும், பங்களிப்பு மேலும் உறுதி பெறவும் நாம் தொடர்ந்து முயற்சிகள் மேற்கொள்ள வேண்டியுள்ளது.
இன்று இந்த மேடையிலிருந்து அடுத்த வருடம் நடைபெறும் பிரவசி பாரதிய திவஸ் மற்றும் ஜனவரி மாதம் நடைபெறும் அர்த்கும்ப விழாவிற்கும் வருமாறு உங்களுக்கு அழைப்பு விடுக்கிறேன். பிரதமர் அபே-வை மிகவும் கவர்ந்த கங்கா ஆரத்தி நடைபெறும் வாரணாசியில் இவ்வருடத்தின் பிரவசி பாரதிய திவஸ் நடைபெற உள்ளது. வாரணாசிக்கு தங்களை நான் வரச்சொல்வதற்குக் காரணம் – நான் அந்த நாடாளுமன்றத் தொகுதியின் உறுப்பினர் என்பதால் தாங்கள் அனைவரும் எனது விருந்தினர்களாக இருப்பீர்கள் என்பதாகும்.
இரண்டு நாட்களுக்கு பிறகு இந்தியா உலக வரைப்படத்தில் மற்றுமோர் புதிய அடையாளத்தை உருவாக்க இருக்கிறது.
ஒவ்வொரு வருடமும் அக்டோபர் மாதம் 31-ம் தேதி சர்தார் வல்லபாய் படேலின் பிறந்த நாள் கொண்டாடப்படுகிறது. ஆனால் இந்த வருடம் இந்த நிகழ்வு அவரது பிறப்பிடமான குஜராத்தைப் போன்று உலகத்தின் கவனத்தையும் ஈர்க்கவிருக்கிறது. அமெரிக்காவில் உள்ள சுதந்திர தேவியின் சிலையைவிட உயரமானதும், உலகின் மிக உயரமான சிலையுமான சர்தார் சாஹப் சிலை அதாவது ஒற்றுமைச் சிலை திறந்து வைக்கப்படவிருக்கிறது. அவரது சிறப்பைப் போன்றே அது உயரமானது. உலகின் மிக உயரமான சிலை இந்தியாவில்தான் இருக்கிறது என்று கூறி ஒவ்வொரு இந்தியனும் பெருமைப்படலாம். அக்டோபர் 31-ம் தேதி இந்தச் சிலை திறக்கப்படவிருக்கிறது. நீங்களும் உங்களது ஜப்பானிய நண்பர்களும், இந்தியாவிற்கு வருகை தரும் போது சர்தார் வல்லபாய் படேலின் சிலை உங்களுக்கு மிகுந்த ஊக்கமளிக்கும்.
முடிவாக உங்கள் அனைவருக்கும் எனது தீபாவளி நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
இந்தக் காலை வேளையில் அதிக எண்ணிக்கையில் இங்கு கூடியிருக்கும் உங்களுக்கு மீண்டும் எனது இதயபூர்வமான நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
***
Had a delightful interaction with the Indian community in Japan.
— Narendra Modi (@narendramodi) October 29, 2018
The accomplishments of our diaspora make us very proud.
Talked at length about the rich history, robust present and strong future of India-Japan relations. https://t.co/9jdURuB6Il pic.twitter.com/BLiYLMepPq