பி.எம்.இந்தியா
ஜப்பான் நாட்டின் தேசியப் பாதுகாப்புத் தலைமைச் செயலகத்தின் தலைமைச் செயலாளர் திரு. ஷிகேரு கிட்டாமுரா, இன்று (25.11.2019) புதுதில்லியில் பிரதமர் திரு. நரேந்திர மோடியைச் சந்தித்தார்.
2019 செப்டம்பர் மாதம் பதவியேற்ற பிறகு இந்தியாவிற்கு முதல்முறையாக வந்துள்ள திரு. கிட்டாமுராவை, பிரதமர் வரவேற்றார். மண்டலத்தில் அமைதி, மேம்பாடு மற்றும் பாதுகாப்பு குறித்து இருநாடுகளுக்கும் இடையே வளர்ந்துவரும் முக்கியத்துவம் வாய்ந்த ஒத்துழைப்பின் அவசியம் குறித்து பிரதமர் வலியுறுத்தினார். திரு.கிட்டாமுரா இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகருடன் நடத்தும் பேச்சுவார்த்தைகள் இருதரப்பு ஒத்துழைப்பின் இந்த முக்கியமான அம்சத்தை வலுப்படுத்த வழிவகுக்கும் என்று பிரதமர் நம்பிக்கை தெரிவித்தார்.
ஜப்பான் பிரதமர் திரு.அபே-யுடன் தமது நெருங்கிய நட்புறவை நினைவுகூர்ந்த பிரதமர், அடுத்த மாதம் இந்தியாவில் நடைபெறவுள்ள இந்தியா-ஜப்பான் ஆண்டு உச்சிமாநாட்டுக்கு அவரை வரவேற்க ஆவலுடன் இருப்பதாகத் தெரிவித்தார்.