Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ஜப்பான் பாதுகாப்பு அமைச்சர் திரு ஜென் நகடானி பிரதமருடன் சந்திப்பு


ஜப்பான் பாதுகாப்பு அமைச்சர் திரு ஜென் நகடானி பிரதமர் திரு நரேந்திர மோடியை இன்று சந்தித்தார்.

இந்த மாதம் டாக்காவில் நடைபெற்ற தாக்குதலில் உயிர் இழந்த ஜப்பான் மக்களுக்கு பிரதமர் இரங்கல் தெரிவித்தார். தீவிரவாதத்துக்கு எதிராக இரு நாடுகளும் பல்வேறு ஒத்துழைப்பில் ஈடுபட வேண்டும் என்று பிரதமர் கேட்டுக் கொண்டார்.

இரு நாடுகளுக்கு இடையேயான பாதுகாப்பு ஒத்துழைப்பு திட்டங்கள் குறித்து திரு நகடானி பிரதமரிடம் விரிவுரைத்தார். பிப்ரவரி 2016 – ல் விஷாகபட்டினத்தில் நடைபெற்ற சர்வதேசக் கடற்படைக் கப்பலணி அணிவகுப்பிலும் ஜூன் 2016 – ல் நடைபெற்ற மலபார் அணிவகுப்பிலும் ஜப்பான் பங்கேற்றதைப் பிரதமர் வரவேற்றார்.

கிழக்கு மற்றும் தெற்காசிய மண்டலங்களில் உள்ள வளர்ச்சி நடவடிக்கைகள் குறித்து திரு நகடானி பிரதமரிடம் பேசினார்.

இந்த ஆண்டு ஜப்பானில் நடைபெற உள்ள வருடாந்திர மாநாட்டில் பங்கேற்க தான் ஆர்வமாக உள்ளதாக பிரதமர் கூறினார்.