Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ஜப்பான் வெளியுறவு அமைச்சர் பிரதமருடன் சந்திப்பு


ஜப்பான் வெளியுறவுத்துறை அமைச்சர் திரு தோஷிமிட்சு மோட்டேகி, இன்று புதுதில்லியில் பிரதமர் திரு நரேந்திர மோடியைச் சந்தித்தார்.

இந்தோபசிபிக் மற்றும் அதற்கு அப்பாலும் அமைதி, நிலைத்தன்மை மற்றும் செழிப்பை மேம்படுத்துவதில் இந்தியஜப்பான் சிறப்பு உத்திசார்ந்த மற்றும் உலகளாவிய கூட்டாண்மையின் முக்கியப் பங்கை, இக்கூட்டத்தின் போது திரு மோடி மீண்டும் உறுதிப்படுத்தினார்.

 

பிராந்தியம் மற்றும் உலகின் பொது நலனுக்காக, இந்தியாவுக்கும் ஜப்பானுக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதன் முக்கியத்துவம் குறித்து இரு தலைவர்களும் விவாதித்தனர்.

இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டதாவது:

ஜப்பான் வெளியுறவுத்துறை அமைச்சர் திரு தோஷிமிட்சு மோட்டேகியை வரவேற்றதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். இந்தோபசிபிக் மற்றும் அதற்கு அப்பாலும் அமைதி, நிலைத்தன்மை மற்றும் செழிப்பை மேம்படுத்துவதில் இந்தியஜப்பான் சிறப்பு உத்திசார்ந்த மற்றும் உலகளாவிய கூட்டாண்மையின் முக்கியப் பங்கை மீண்டும் உறுதிப்படுத்தினோம்.      

@moteging”                   

***

(Release ID: 2265611)

TV/RB/RJ