Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ஜம்முவில் பாகல்துல் மின் உற்பத்தி திட்டம் மற்றும் பல்வேறு திட்டப் பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமர் பேசிய உரையின் தமிழாக்கம்

ஜம்முவில் பாகல்துல் மின் உற்பத்தி திட்டம் மற்றும் பல்வேறு திட்டப் பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமர் பேசிய உரையின் தமிழாக்கம்

ஜம்முவில் பாகல்துல் மின் உற்பத்தி திட்டம் மற்றும் பல்வேறு திட்டப் பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமர் பேசிய உரையின் தமிழாக்கம்


என் அன்பான சகோதர, சகோதரிகளே,

இங்கே நிறைய பழைய முகங்கள் உள்ளன. எங்களின் சாம்லால் அவர்களும் இங்கே உள்ளார். இன்று ஜம்முகாஷ்மீர் மாநிலத்திற்கு இன்றியமையாத நாளாகும். இது, இந்த மாநிலத்தில் நான் பங்கேற்கும்  நான்காவது பொது நிகழ்ச்சியாகும். காலை முதல், உயரிய மலைப்பிரதேசமான லேலடாக் முதல் காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதி வரையிலான வளர்ச்சிப் பணிகளை பார்வையிட்டுவிட்டு, தற்போது ஜம்முவின் அடிவாரத்தை வந்தடைந்துள்ளேன். மேற்கண்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்றதன் காரணமாகத்தான், நான் இங்கு சரியான நேரத்திற்கு வர முடியாமல் போனது.  இதற்காக உங்களிடம் மன்னிப்பை கேட்டுக் கொள்கிறேன்.

கிஷ்த்வார் பிராந்தியத்தில் செனாப் ஆற்றின் மீது அமைக்கப்பட உள்ள நீர் மின் சக்தி திட்டம் அல்லது பந்திபோராவில் கிஷண்கங்கா திட்டம், ஜோஜிலா சுரங்கப்பாதை ஆகியவை இந்தியாவின் பிற பகுதிகளை லேவுடன் இணைக்க உள்ளது. இவை அனைத்தும் ஜம்முகாஷ்மீரின் மகிழ்ச்சிக்கான ஒரு புதிய கதவை திறந்துள்ளன. மாநிலத்தின் வழியாக பாயும் ஆறுகள், இந்த பிராந்தியத்தின் வளர்ச்சிக்கு ஊக்கமளிக்கின்றன. நீர் மின்திட்டத்தை நாட்டுக்கு அர்ப்பணித்த அதே வேளையில், மற்றொரு திட்டத்திற்கு அடிக்கல் நாட்டியிருப்பது இன்றைய நாளை தனித்துவமான நாளாகவும், மறக்க முடியாத நாளாகவும் மாற்றி இருக்கின்றன.

சிறிது நேரத்திற்கு முன்பு, ஜம்முவின் உள்கட்டமைப்பு தொடர்பான 4 பெரிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவது மற்றும் நாட்டுக்கு அர்ப்பணிப்பதற்கான வாய்ப்பை நான் பெற்றேன். அதில் 2 திட்டங்கள், தெய்வீகத் தாயான வைஷ்ணவி தேவிக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. தற்போது பாகல் துல் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. தற்போது இம்மாநிலத்தில் ஒருநாளில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தில் மூன்றில் ஒரு பங்குக்கு சமமான மின் உற்பத்தியை இத்திட்டம் செய்ய இருக்கும் உண்மையை அறிவதன் மூலம், மாநிலத்திற்கு இது எவ்வளவு நன்மையாக இருக்கும் என்பதை நீங்கள் புரிந்து கொள்ளலாம்,

பிரதம மந்திரி அபிவிருத்தி திட்டத்தின் கீழ் இத்திட்டம் கட்டமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆயிரம் மெகாவாட் திறன் மின் உற்பத்தி திட்டம் தொடங்கப்படுவதற்கு தயாராகி விட்டது. ரூ. 8,000  கோடி முதலீட்டிலான இத்திட்டம் இப்பகுதியில் வேலை வாய்ப்புக்கான பல்வேறு வாய்ப்புகளை உருவாக்க உள்ளது. இது கிட்டத்தட்ட 2,500 பேருக்கு நேரடி வேலைவாய்ப்பை வழங்கும். கூடுதலாக, காய்கறி உற்பத்தியாளர்கள், பால் வழங்குநர்கள் என எந்தவொரு வேலை செய்யும் மக்களுக்கும், இங்கு வருவாய் ஈட்டுவதற்கான புதிய வாய்ப்பை இத்திட்டம் கொடுக்கப்போகிறது.

நண்பர்களே, நமது அரசாங்கம் நாட்டின் வளர்ச்சிக்கு ஒரு புதிய அணுகுமுறையுடன் செயல்பட்டு வருகிறது, இந்த அணுகுமுறையானது: தனிமைப்படுத்தப்பட்டவைகளை ஒருங்கிணைப்பது. இதன் அர்த்தம், சில காரணங்களால் நாட்டின் சில பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டு, அங்கு வளர்ச்சித் திட்டங்கள் சென்றடைய முடியாமல் இருக்கும் பகுதிகளுக்கு தற்போது முன்னுரிமை வழங்கப்படுவதாகும். இதனால் தான் வடகிழக்கு மற்றும் ஜம்மு காஷ்மீருக்காக நானே நேரடியாக களமிறங்குவதற்கான காரணம். அரசியல் காரணங்களையும் சேர்த்து ஒரு பிரதம மந்திரியாக நான் 12க்கும் மேற்பட்ட முறை ஜம்முகாஷ்மீருக்கு வந்துள்ளேன், இதுபோன்ற வாய்ப்புகள் முன்பு எந்த பிரதம மந்திரிக்கும் கிடைத்ததா, இல்லையா என்பது எனக்கு தெரியவில்லை. முந்தைய நாட்களில், நீங்கள் என்னை கவனித்துக் கொண்டது உண்மைதான். நீங்கள் என்னை வளர்ச்சி அடையச் செய்தீர்கள். இணைப்பு மூலம் வளர்ச்சி என்ற கொள்கை அடிப்படையில்தான் நாங்கள் பணியாற்றி வருகிறோம். சாலைகள் மூலம் இணைக்கப்பட வேண்டும் அல்லது இதயங்கள் இணைக்கப்பட வேண்டும், அதில் எந்தக் கட்டத்திலும் எந்தவொரு வாய்ப்பையும் கைவிட்டு  விடக்கூடாதுஜம்முகாஷ்மீர் மாநிலத்தின் வளர்ச்சிக்காக மேற்கொள்ளப்பட்டு வரும் அத்தைகய ஒவ்வொரு திட்டமும், இம்மாநிலத்தை புதிய இந்தியாவின் நட்சத்திரமாக மாற்றுவதற்கான வலிமை கொண்டவை. இந்தியா என்ற நகையின் கிரீடம், வைரங்கள் பொருத்திய கிரீடமாக இந்தியாவின் வரைபடத்தை கற்பனை செய்து பாருங்கள், அந்த பிரகாசம் நாட்டின் மீதமுள்ள பகுதிகளின் வளர்ச்சிக்கு வழிவகுக்கும்.

சகோதரர்கள் மற்றும் சகோதரிகளே, இப்பணியை நிறைவேற்ற மத்திய அரசு, மாநில அரசாங்கத்துடன் இணைந்து செயல்பட்டு வருகிறது. நாங்கள் திட்டங்களை முன்னெடுத்து வருவதுடன், அவற்றை அமல்படுத்திக்  கொண்டுமிருக்கிறோம். சில நாட்களுக்கு முன்பு, அடிக்கல் நாட்டப்பட்ட வட்ட சாலை, ஜம்மு மற்றும் இப்பகுதியின் போக்குவரத்து நெரிசல் பிரச்னைக்கு ஒரு தீர்வைத் தரக்கூடியதாக இருக்கும். அடுத்த மூன்று ஆண்டுகளில் இந்த திட்டத்தை முடிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும். இந்த வட்ட சாலை தயாரானால், அது ஜம்மு காஷ்மீர் மக்களுக்கும், இங்கு வரும் லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகளுக்கும் பல்வேறு வசதிகளை கொண்டு வரும். நீங்களே பாருங்கள், இந்த 50 கி.மீ. நீள ரிங் ரோடானது, புதிய ஜம்முவையும் உருவாக்கும். இந்த சாலையின் இரு பக்கங்களிலும் புதிய ஜம்மு உருவாகும். எந்த விதமான வளர்ச்சி, எந்த விதமான விரிவாக்கம் இங்கு வரப்போகிறது என்பதை என்னால் தெளிவாக காண முடிகிறது. அதே நேரத்தில் இது ஜம்மு நகரத்திலும், அருகில் உள்ள பகுதிகளிலும் போக்குவரத்து நெரிலைக் குறைக்கும். அதுமட்டுமல்லாமல், இந்த ரிங் ரோடானது பன்சச், ரஜோரி, நவுஷேரா மற்றும் அக்னூர் ஆகிய முக்கியத்துவம் வாய்ந்த மற்றும் எல்லைப் பகுதிகளுக்கு இராணுவ வாகனங்கள் மூலம் பெரும் இயந்திரங்களைக் கொண்டு செல்வதையும் எளிதாக்கும்.

நண்பர்களே, உங்கள் நகரம் ஜம்முவும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்டுள்ளது. போக்குவரத்து முதல் கழிவுநீர் மேலாண்மை தொடர்பான துறைகளுக்கு இங்கு ஸ்மார்ட் அமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளது. இப்பணியில் மாநில அரசு ஈடுபட்டிருக்கிறது. இப் பணிக்கான நிதி ஏற்கனவே மத்திய அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

சகோதரர்களே, சகோதரிகளே, அபிவிருத்திக்காக, எங்கள் முழு கவனமும், 21ம் நூற்றாண்டின் கட்டாய தேவைகளாக இருக்கக் கூடிய உள்கட்டமைப்பின் மீதும், ரயில்வே மீதும், நீர் வழித்தடங்கள் மீதும், இணையவழிகள் அல்லது சாலைகள் போன்ற அனைத்தின் மீதும் உள்ளன.

நாட்டின் 1.25 பில்லியன் மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த வேண்டுமெனில் முதலில் அவர்களின் வாழ்வை எளிதானதாக சௌகரியமானதாக உருவாக்க வேண்டுமென்பதில் இந்த அரசு தெளிவாக உள்ளது. வேறுவிதமாக கூறினால், நீங்கள் அதை ஸ்மார்ட் அமைப்புகள் என்றும் கூறலாம். அப்படிப்பட்ட சிந்தனையின் வெளிப்பாடுதான், பாரத் மாலா திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் உள்ள நெடுஞ்சாலைகள் மிக வேகமாக அபிவிருத்தி செய்யப்பட்டு வருகின்றன.

இந்த திட்டமானது, ஜம்முகாஷ்மீர், மேற்கு இந்தியா மற்றும் வடகிழக்கு பகுதிகளை நாட்டின் நெடுஞ்சாலை நெட்வொர்க்குடன் இணைக்கும். இந்த ஆண்டிற்கான பட்ஜெட்டில், இத்திட்டத்தின் கீழ் 35,000 கிலோ மீட்டர் தூர சாலையை கட்டமைப்பதற்காக ரூ.5,000 கோடிக்கும் மேல் ஒதுக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் ஜம்முகாஷ்மீர் மாநிலத்தில் ரூ.2,700 கோடி செலவிடப்பட உள்ளது.

சகோதரர்கள் மற்றும் சகோதரிகளே, ஜம்முகாஷ்மீர் மாநிலத்திலும் கூட பல்வேறு நெடுஞ்சாலைத் திட்டங்களுக்கான பணிகள் நடந்து வருகின்றன. ஜம்முஸ்ரீநகரையும் மற்றும் நாட்டின் பிற பகுதிகளையும் இணைப்பதற்கு பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள பல திட்டங்கள் ஏற்கனவே முடிக்கப்பட்டுள்ளன. மற்ற திட்டப் பணிகள் அதிவேகத்தில் நடந்து வருகிறது. இன்று, ஜம்முபஞ்ச், உத்தம்பூர்ரம்பன், ரம்பன்பானிஹால், ஸ்ரீநகர்பானிஹால் மற்றும் காஸிகுண்ட்பானிஹால் போன்ற பல நெடுஞ்சாலைத் திட்டப்பணிகள் விரைவாக நடைபெற்று வருகின்றன, இந்த திட்டங்கள் இந்த பிராந்தியத்திற்கான வாழ்வாதாரத்தை நிரூபிக்கப் போகின்றன. கிட்டத்தட்ட, ரூ.15,000 கோடி இச்சாலைகளுக்காக செலவிடப்பட உள்ளது. இதற்கும் மேலாக, பிரதம மந்திரி கிராமப்புற சாலைத் திட்டத்தின் கீழ் கிராமங்களும் இணைக்கப்பட்டு வருகின்றன. கடந்த இரண்டு ஆண்டுகளில், கிட்டத்தட்ட ஒரு லட்சம் கிலோமீட்டர் நீளமான கிராமப்புற சாலைகள் இந்த திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ளன. கடந்த இரண்டு ஆண்டுகளில், ஜம்முகாஷ்மீர் கிராமங்களில் 3500 க்கும் மேற்பட்ட கிலோ மீட்டர் நீளமான கிராமப்புற சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன.

நண்பர்களே, ஜம்முகாஷ்மீரின் வருவாய்க்கு பெரிய ஆதாரமாக இருப்பது சுற்றுலா துறை. குறிப்பாக பாபா பார்பனி (சிவன்), மாதா ராணி தர்பார் (தெய்வீக தாய் வைஷ்ணோ தேவி) போன்ற மத நம்பிக்கைக்குரிய இக்கோயில்களுக்கு லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகை தருகிறார்கள். இங்கு  பக்தியுடன் வரும் பக்தர்களுக்காக வசதிகள் செய்து தருவதற்காக, உள்ளூர் மக்களுக்கு வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தி தருவதற்கும் இந்த அரசாங்கம் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இன்று, ரயில் சேவை கட்ராவில் உள்ள வைஷ்ணவ தேவி ஆலயத்தை வந்தடைந்துள்ளது. பிரதமராக பதவிக்கு வந்தவுடன், உடனடியாக இந்த ரயில் பாதையை அர்ப்பணிப்பதற்கான வாய்ப்பு எனக்கு கிடைத்தது. இந்த ரயில் பாதை, தெய்வீகத் தாயின் பக்தர்களுக்கு பல வசதிகளை அளித்துள்ளது. இதோடு நாங்கள் நிறுத்திக் கொள்ள விரும்பவில்லை, அதன் காரணமாக இரண்டு பெரிய திட்டங்கள் இன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளன. அதில் முதலாவது, தெய்வீகத் தாயின் கோயிலுக்கு வருகை தரும் மற்றொரு வழி, மற்றொன்று கம்பி வட ஊர்தி (ரோப் வே) வழியாக தெய்வீகத் தாயின் சன்னதிக்கு பொருட்களை கொண்டு செல்வதாகும்.

நண்பர்களே, இப்போது பக்தர்கள் தரகோட்டா வழியாகவும் தெய்வீக தாய் வைஷ்ணவ தேவி கோயிலை வந்தடைய முடியும். இது, கட்ரா மற்றும் அர்த கன்வாரி இடையே பாதயாத்திரையாக வரும் பக்தர்களுக்கு ஒரு மாற்றுப்பாதையாக இருக்கும். மேலும் இது, கூட்ட நெரிசலில் இருந்து பக்தர்களுக்கு விடுதலை பெற்றுத் தரும். இதுமட்டுமின்றி, இந்த பாதையானது ஒன்றரை கிலோ மீட்டர் இணைப்பு சாலை மூலமாக ஏற்கனவே உள்ள பாதசாரிகள் பாதையுடனும் இணைக்கப்பட்டுள்ளதையும் தெரிவித்துக் கொள்கிறேன். எனவே, பக்தர்கள் பாதசாரிகள் பாதை வழியாகவும் கோயிலை சென்றைடயலாம். இது, தெய்வீகத் தாயின் பக்தர்களுக்கு முழுமையான பாதுகாப்பான பத்திரமான பாதையாகும், அங்கு அவர்களுக்கு அனைத்து வசதிகளும் ஏற்படுத்தி தருவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.

நண்பர்களே, இந்த மாற்றுப்பாதையுடன் கூடுதலாக இன்று, தெய்வீகத் தாயின் உறைவிடத்தின் வாசல் கதவுகள் வரை பொருட்களை கொண்டு செல்வதற்கான ரோப் வே திட்டத்தை தொடங்கி வைப்பதற்கான நல்ல வாய்ப்பும் எனக்கு கிடைத்தது. இந்த பொருள் ரோப் வே காரணமாக பொருட்களை கொண்டு செல்லும் பணி மிகவும் எளிதாக மாறும். இந்த தனித்துவமான வசதியை பயன்படுத்தி, ஸ்ரீ மாதா வைஷ்ணவி தேவி கோயில் வாரியம் பக்தர்களுக்கு வழங்கும் உணவுகளை எளிதாக இனி கொண்டு செல்ல முடியும். மேலும், ஆலயத்தைச் சுற்றி உள்ள கழிவுப்பொருட்களை அகற்றுவதில் ஒரு பெரிய உதவியையும் இந்த ரோப் வே வழங்கப் போகிறது. காட்ராவில் இருந்து கோயிலுக்கு சரக்கு பொருட்களை கொண்டு செல்வதுடன், அங்கிருந்து கழிவுப் பொருட்களையும் இந்த ரோப் வே வழியாகவே திருப்பி அனுப்பவும் முடியும்.

நண்பர்களே, ரோப் வே மூலமாக பக்தர்களுக்கு தேவையான இத்தகைய வசதிகளை செய்து தர முடியும். ரூ.60 கோடி செலவில் பைரோன் காடி பவன்விரைவில் கட்டி முடிக்கப்பட உள்ளது. இந்த ரோப் வே ஒரு மணி நேரத்திற்கு 800 நபர்களை அழைத்துச் செல்லும் திறன் கொண்டதாக இருக்கும். இது முதியவர்கள் மற்றும் உடல் ரீதியிலான ஊனமுற்ற பக்தர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும். இந்த ரோப் வே முழுமையான செயல்பாட்டுக்கு வரும் போது, 40-45 நபர்களை வெறும் மூன்று நிமிடத்தில் கோயிலுக்கு கொண்டு செல்லும். டெல்லி மெட்ரோ தடத்தில் உள்ளதைப் போன்று தானியங்கி டிக்கெட் வசதியை இந்த ரோப் வே கொண்டிருக்கும். பக்தர்களுக்கு அதிகமான வசதிகளை வழங்குவதற்காக பணிபுரியும் கோயில் வாரிய  தலைவர் மற்றும் அவரது ஒட்டுமொத்த அணியினருக்கு எனது பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

சகோதரர்களே, சகோதரிகளே, ஜம்முகாஷ்மீரில் உள்கட்டமைப்பு மேம்பாடானது சுற்றுலா துறையின் வளர்ச்சிக்கு வழிவகுக்கும். சுற்றுலாத் துறை வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கு வழிவகுக்கும். இருப்பினும், கல்வி மற்றும் திறன் வளர்ச்சி வேலைவாய்ப்பில் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த மாநிலத்தில் கல்வித்துறையில் பெரிய நிறுவனங்களை அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. ஜம்முவில் ..எம் அல்லது ..டி.யோ கட்டமைக்கப்பட உள்ளது. அந்த நிறுவனங்கள் நிச்சயம் மாநிலத்தின் வளர்ச்சியில் ஒரு மைல்கல்லாக மாறும். கூடுதலாக, நாட்டின் புகழ்பெற்ற பல்கலைக் கழகங்களிலும், கல்லூரிகளிலும் கல்வி பயிலும் ஜம்முகாஷ்மீர் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.

சகோதரர்களே, சகோதரிகளே, பெண்கள் அதிகாரத்திற்கு இந்த  அரசாங்கம் முன்னுரிமை அளித்திருக்கிறது. கடந்த நான்கு ஆண்டுகளில், பெண்களுக்கு நிதி மற்றும் சமூக அதிகாரம் வழங்குவதற்கான பல திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன. நாட்டில் கிட்டத்தட்ட 9.5 கோடி பெண் தொழில்முனைவோர்கள் தங்கள் சிறு தொழில்களுக்கு எந்தவொரு வங்கி உத்தரவாதமும் இல்லாமல் கடன் பெற்றுள்ளனர். அவர்களில் 50 லட்சத்திற்கும் அதிகமான பெண்கள் ஜம்முகாஷ்மீரில் உள்ளனர். மறுபுறம், உஜ்வாலா திட்டத்தின் கீழ் நாட்டின் ஏழை தாய்மார்களுக்கும் சகோதரிகளுக்கும் புகையில்லா சமையலறைகளை வழங்குவதை நோக்கி அரசாங்கம் பணியாற்றி வருகிறது. சுத்தமான சமையலை தரும் இத்திட்டம், கிராமங்களில் இருக்கும் தாய்மார்கள் மற்றும் சகோதரிகள், தலித்துகள், ஒடுக்கப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட மற்றும் எல்லா சமூகத்தையும் சேர்ந்த அனைத்து தாய்மார்களுக்கும் சகோதரிகளுக்கும் பயனுள்ளது. நாட்டில் 4 கோடிக்கும் மேற்பட்ட எல்பிஜி இணைப்புகளை இலவசமாக வழங்கியுள்ள நிலையில், உஜ்வாலா திட்டம் ஜம்முகாஷ்மீர் மாநிலத்தில் 4 லட்சம் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் சமையலறையையும் அடைந்துள்ளது.

நண்பர்களே, தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ், திறந்தவெளியில் மலம் கழிப்பதிலிருந்து நாட்டை முழுமையாக விடுபடச் செய்ய இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. இது வெறும் சுத்தம் தொடர்பானது மட்டுமல்ல, அது பெண்களின் மாண்பு தொடர்பான விஷயமும் ஆகும். ஜம்முகாஷ்மீரின் தாய்மார்களும் சகோதரிகளும் இந்த இயக்கத்தைப் பற்றி எவ்வளவு அறிந்திருக்கிறார்கள் என்பதை நாடும் உலகமும் கண்டிருக்கின்றன. உதம்பூரில் 87 வயது மூதாட்டி ஒருவர் கழிவறை கட்டுவதை நானே நேரடியாக பார்த்தேன். அவர் யாரிடமிருந்தும் எந்த உதவியையும் எதிர்பார்க்கவில்லை. இந்த தூய்மைத் திட்டத்தில் தானும் இணைய வேண்டுமென்ற பேரார்வம் மட்டும் அவரிடம் இருந்தது.

நண்பர்களே, இத்தகைய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டால், பலமடங்கு தைரியமும் நம்பிக்கையும் அதிகரிக்கும். சில இடங்களில், ஐந்து வயதிற்குட்பட்ட பெண்கள் இந்த இயக்கத்தில் சேர்கின்றனர், மற்றும் சில இடங்களில் 87 வயதான முதிய தாய்மார்கள் இந்த இயக்கத்தில் சேர்கின்றனர். தூய்மை மற்றும் கௌரவத்திற்கான உணர்வின் ஆழம் இந்த உண்மையிலிருந்து மட்டுமே பெற முடியும். மேலும், கிராமப்புற தூய்மையானது 80 சதவிகிதம் தாண்டிவிட்டதும் இதன் காரணத்தினால்தான். இந்த திட்டத்தின் கீழ், ஜம்முகாஷ்மீரில் 8.5 லட்சம் வீடுகளில் கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன.

நண்பர்களே, பெண்களின் திறன் மேம்பாட்டை உயர்த்துவதில் கவனம் செலுத்தாத வரை, அவர்களுக்கான நிதி மற்றும் சமூக மேம்பாடு முழுமை அடையாததாகவே இருக்கும். ஜம்முகாஷ்மீர் பெண்களின் திறன் மேம்பாட்டுக்கான பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டதற்கான காரணமும் இதுவே. தோராயமாக 5,000 பெண்களுக்கு கைத்தொழில்கள், தையல் மற்றும் வேளாண்மை தொடர்பான பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன.

சகோதரர்களே, சகோதரிகளே, நான் இங்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் வந்த போது, அரசாங்கத்தால் மேற்கொள்ளப்படும் திட்டங்களை நீங்கள் அதிகளவில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என இங்குள்ள இளைஞர்களிடம் நான் ஒரு வேண்டுகோள் விடுத்திருந்தேன். இன்று, இங்குள்ள இளைஞர்கள் அதிகளவில் அரசின் திட்டங்களை பயன்படுத்தி வருகின்றனர் என்பதை தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். பிரதம மந்திரி ஜன் தன் யோஜனா  திட்டத்தின் கீழ், இம்மாநிலத்தில் 20 லட்சத்திற்கும் அதிகமானோர் தங்கள் வங்கிக் கணக்குகளை  தொடங்கி உள்ளனர். சுமார் 8,00 கோடி ரூபாய் இந்த கணக்குகளில் டெபாசிட் செய்யப்பட்டிருக்கிறது; நான் ஜம்முகாஷ்மீர் பற்றி மட்டுமே பேசுகிறேன். 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரசு சார்பற்ற நிறுவனங்களில் பணிபுரியும் எனது சகோதர மற்றும் சகோதரி ஊழியர்கள், பணியாளர்கள் அவர்களுக்காகவே வடிவமைக்கப்பட்ட அடல் ஓய்வூதிய திட்டத்தில் இணைந்துள்ளனர். அரசால் நடத்தப்படும் மிகக்குறைந்த பிரீமியம் தொகை கொண்ட இந்த இரண்டு திட்டங்களிலும் இம்மாநிலத்தில் 9 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் இணைந்துள்ளனர். இத்திட்டத்தின் கீழ் ஏற்கனவே, சுமார் ரூ.3 கோடி காப்பீடு தொகை பயனாளர்களுக்கு வழங்கப்பட்டு விட்டது.

நண்பர்களே, இந்த பகுதியில் உள்ள இளைஞர்கள் எப்போதும் ஆயுத படையில் சேர முன்வருபவர்கள். பாரம்பரியத்தின் படி, இம்மாநிலத்தின் இளைஞர்கள் ஆயுதப் படையில் சேர்வதற்கு நிறைய வழிகள் செய்து தரப்பட்டுள்ளன. சிறப்பு ஆட்சேர்ப்பு முகாம்கள் மூலமாக 20,000 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் இராணுவ, மத்திய ஆயுதப் படை, போலீஸ் படை மற்றும் இந்திய ரிசர்வ் பட்டாலியன்களில் பணி அமர்த்தப்பட்டுள்ளனர்.

நன்றி.

*****