Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ஜம்மு காஷ்மீர் இளைஞர்களுடன் பிரதமர் சந்திப்பு

ஜம்மு காஷ்மீர் இளைஞர்களுடன் பிரதமர் சந்திப்பு

ஜம்மு காஷ்மீர் இளைஞர்களுடன் பிரதமர் சந்திப்பு

ஜம்மு காஷ்மீர் இளைஞர்களுடன் பிரதமர் சந்திப்பு

ஜம்மு காஷ்மீர் இளைஞர்களுடன் பிரதமர் சந்திப்பு


240க்கும் மேற்பட்ட ஜம்மு காஷ்மீர் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் இன்று பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களை சந்தித்தனர். ஜம்மு காஷ்மீர் மாநில அரசும், மத்திய உள்துறை அமைச்சகமும் இணைந்து செயல்படுத்தி வரும் “வத்தன் கா ஜானோ” என்ற திட்டத்தின் கீழ் அந்த இளைஞர்கள் பிரதமரை சந்தித்தனர். 15 முதல் 24 வயதுகுட்பட்ட இளைஞர்களில் பெரும்பாலானோர், தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள், அனாதை ஆசிரமங்கள், மற்றும் விளிம்புநிலை சமூகத்தைச் சேர்ந்தவர்கள்.

7, ரேஸ் கோர்ஸ் சாலையில் அமைந்துள்ள பிரதமரின் இல்லத்தில், பஞ்சவடியின் வளாகங்களில் பிரதமரை சந்தித்த இளைஞர்கள், பிரதமரோடு அரை மணி நேரத்துக்கும் மேலாக உரையாடினர். அந்த இளைஞர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த பிரதமர், இந்தியாவின் வளர்ச்சிக்கு, குறிப்பாக ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் வளர்ச்சிக்கான தனது திட்டங்கள் குறித்து விளக்கினார். சுற்றுலாத் துறையை வளர்ப்பதற்கு ஏராளமான சாத்தியக் கூறுகளை கொண்டுள்ள ஜம்மு காஷ்மீர் மாநிலம், அம்மாநில மக்களுக்கு வளத்தை கொடுக்கக் கூடியது என்றார். அம்மாநிலம் முழுவதும், டிஜிட்டல் இணைப்பை வழங்க அரசு முயற்சி எடுத்து வருவதாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.

நாடு முழுவதற்கும் தனது வளர்ச்சித் திட்டங்களை விளக்கிய பிரதமர், 2022ம் ஆண்டுக்குள் அனைவருக்கும் வீடு என்பதை சாத்தியப்படுத்த வேண்டும் என்று கூறினார். பிரதமரின் உரையில், அந்த இளைஞர்கள் மகிழ்ச்சியோடு பங்கெடுத்தனர். தில்லியில் ஏற்பட்டுள்ள உட்கட்டமைப்பு வளர்ச்சி போல, ஜம்மு காஷ்மீர் மாநிலமும் வளர வேண்டும் என்று அந்த இளைஞர்கள் தங்கள் விருப்பத்தை தெரிவித்தனர்.

விவாதத்துக்கு பின்னர், பிரதமர் அனைவருக்கும் தேநீர் விருந்து வழங்கினார்.