Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தின் எதிர் கட்சி தலைவர்கள் குழு பிரதமருடன் சந்திப்பு


ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தின் எதிர்க் கட்சித் தலைவர்களின் குழுவினர் அம்மாநிலத்தில் நிலவி வரும் சூழ்நிலை குறித்து பிரதமர் திரு. நரேந்திர மோடியை சந்தித்து பேசினர். தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் திரு. உமர் அப்துல்லா, காஷ்மீர் மாநில காங்கிரஸ் தலைவர் திரு. குலாம் அகமது மிர், மக்கள் ஜனநாயக முன்னணிக் கட்சித் தலைவர் திரு. ஹக்கீம் முகமது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் திரு. எம். வை. தரிகாமி, தேசியவாத ஜனநாயகக் கட்சித் தலைவர் திரு. குலாம் ஹசன் மிர் உள்ளிட்ட பல கட்சி தலைவர்கள் இந்த சந்திப்பில் பங்கேற்றனர். இந்த சந்திப்பின் போது நடந்த விவாதங்கள் வெளிப்படையாகவும் சுதந்திரமாகவும் நடைபெற்றன.

அம்மாநிலத்தில் நிலவிவரும் சூழ்நிலை கவலையையும் வருத்தத்தையும் அளிக்கிறது என்று பிரதமர் குறிப்பிட்டார். சமீபத்தில் நடந்த குழப்பத்தில் உயிர் இழந்தவர்களும் நம் நாட்டை சேர்ந்தவர்களே. இறந்தவர்கள் இளைஞர்களாகட்டும், பாதுகாப்பு அதிகாரிகளாகட்டும் அல்லது காவல் துறையினராகட்டும். அவர்களின் இழப்பு நமக்கு பெரும் துயரத்தை அளிக்கிறது. இந்த துயர தருணத்தில் தனது அரசாகட்டும் அல்லது இந்திய மக்களாகட்டும், ஜம்மு காஷ்மீருக்கு துணையாக நிற்போம். மேலும் அனைத்து கட்சிகளும் இதனை ஜம்மு காஷ்மீர் மக்களிடம் கொண்டு சேர்க்குமாறு பிரதமர் பரிந்துரை செய்தார். விரைவில் ஜம்மு காஷ்மீரில் இயல்பு நிலை திரும்ப வேண்டும் என்று முறையிட்ட பிரதமர் அம்மாநில வளர்ச்சிக்கும் மக்களின் வளர்ச்சிக்கும் துணை நிற்க உறுதியோடு இருப்பதாக தெரிவித்தார்.

இந்த சந்திப்பின்போது வழங்கப்பட்ட ஆக்கபூர்வமான பரிந்துரைகளை பாராட்டிய பிரதமர் அம்மாநில மக்களின் நலனுக்காக பணி புரிய தனது அரசு உறுதியோடு இருப்பதை மீண்டும் வலியுறுத்தினார்.

இந்த பிரச்சினை குறித்த விவாதம் அவசியம் என்று வலியுறுத்திய பிரதமர். இந்திய அரசியலமைப்பு சாசனத்திற்குள் இந்த பிரச்சனைக்கான நிரந்தர தீர்வு காணப்பட வேண்டும் என்று பிரதமர் வலியுறுத்தினார். ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் நிலவி வரும் பிரச்சினைக்கு தீர்வு காண அனைத்து கட்சிகளும் ஒன்று சேர்ந்து பணி புரிய வேண்டும் என்று பிரதமர் கேட்டுக்கொண்டார்.

****