பி.எம்.இந்தியா
பாரத் மாதா கி ஜே!
மேடையில் அமர்ந்துள்ள அனைத்துப் பிரமுகர்களே, எனக்கு வாழ்த்துக்களைப் பொழிவதற்கு பெருந்திரளாக கலந்து கொண்ட எனது அன்பான சகொதர சகொதரிகளே,
எனது அன்பான ஹசாரிபாகின் சகோதர, சகோதரிகளே,
நான் இதற்கு முன்னரும் ஹசாரிபாக் வந்துள்ளேன். ஒவ்வொரு முறையும் நீங்களும் உங்கள் வாழ்த்துக்களை பொழிய அதிக எண்ணிக்கையில் வருகிறீர்கள். ஆனால், ஒவ்வொரு முறையும் முந்தைய பேரணியில் சாதனை முறியடிப்பது எப்பழ என நீங்கள் எனக்குக் கூறுங்கள். இந்தப் பக்கத்தில் நிறைய கூட்டம் இருப்பதால் அதை வைத்து மேடை அமைத்திருப்பதை என்னால் காணமுடிகிறது. ஆனால் மறுபக்கத்தில் இன்னும் அதிகமான மக்கள் உள்ளனர். பெரிய எண்ணிக்கையிலான உங்கள் வருகையும், உங்கள் அன்பும் வாழ்த்துக்களும், உங்களுக்கு அதிக ஆர்வத்துடன் பணியாற்றும் வலிமையை எங்களுக்கு அளிக்கின்றன.
கடந்த நான்கரை ஆண்டுகளாக செய்து வரும் வளர்ச்சிப் பணிகளைத் துரிதப்படுத்துவதற்காக நான் இன்று ஜார்கண்டிற்கு வந்துள்ளேன். மருத்துவக் கல்லூரி கட்டிடம், மருத்துவமனை, பொறியியல் கல்லூரி, நீர் வழங்கல் பிரச்சினையிலிருந்து விடுபடுவதற்கான குழாய்த் திட்டம், நமாமி கங்கா திட்டம் ஆகியவற்றின் அர்ப்பணிப்பு மற்றும் அடிக்கல் நாட்டுதல் மூலம் உள்கட்டமைப்பு வசதிகள் அதிகரிக்கும். இதற்காக உங்களை வாழ்த்துகிறேன். ஸ்மார்ட் ஃபோன்களை வாங்குவதற்கு அரசாங்கத்தின் உதவியைப் பெறும் ஆயிரக்கணக்கான விவசாயிகளையும் நான் வாழ்த்துகிறேன்.
சகோதர, சகோதரிகளே,
இன்று பல்வேறு நீர்ப்பாசனத் திட்டங்கள் இங்கு தொடங்பாட்டுள்ளன. இந்தத் திட்டங்கள் நிறைவடையும்போது, ஹசாரிபாக், ராம்கர், பாலமு, கோடா மற்றும் சிங்பும்-ன் மேற்குப் பகுதிகளில் உள்ள ஆயிரக்கணக்கான ஹெக்டேர் விவசாய நிலங்கள் வசதி பெறும். பல ஆண்டுகளாகப் புறக்கணிக்கப்பட்ட மந்தல் அணை மற்றும் வடக்கு கோயில் திட்டங்களை கடந்தமுறை நான் பாலமு-க்கு பயணம் செய்தபோது தொடங்கி வைத்தேன். இந்தத் திட்டங்கள் அனைத்தும் இங்குள்ள விவசாயிகளின் எதிர்காலத்தை வளமாக்கும்.
நண்பர்களே,
குழந்தைகளின் ஊட்டச்சத்து தொடர்பான (குறிப்பிடத்தக்க) திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் மூலம், குழந்தைகளுக்கு அவர்களின் பள்ளிகளில் பால் பாக்கெட்டுகள் வழங்கப்படும். இது ஏழை மற்றும் பழங்குடி குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாட்டிலிருந்து விடுபட உதவும்.
துப்புரவுப் பணிகளில் ஜார்கண்ட் பாராட்டத்தக்க பணியைச் செய்ததில் நான் மகிழ்ச்சியடைகிறேன். நான்கரை ஆண்டுகளுக்கு துப்புரவு சதவீதம் 20% ஆக இருந்தது. ஆனால், இன்ற ஜார்கண்ட் திறந்தவெளி கழிப்பிடம் அற்ற மாநிலமாக தன்னை அறிவித்துக் கொண்டுள்ளது. ரகுபர் தாஸ் அவர்களுக்கும், அவரின் ஒட்டுமொத்த அலுவல் சார்ந்த அணியிருன்கும் அவரின் நிர்வாகத்தில் உள்ள அனைத்து நிலைத் தொழிலாளர்களுக்கும் எனது வாழ்த்துக்கள். குறுகிய காலத்திற்குள் சுமார் 33 லட்சத்திற்கும் மேற்பட்ட கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன. ஹசாரிபாக் இதில் சிறந்த சாதனையை செய்துள்ளது என்று எனக்கு தெரிவிக்கப்பட்டது. குறைந்த அளவு நேரத்தில் அதிக அளவிலான கழிவறைகள் கட்டப்பட்டுள்ளன. இந்த சாதனைக்காக உங்களுக்கு எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நண்பர்களே,
நாட்டின் வளர்ச்சிக்காகவும், நாட்டின் ஒவ்வொரு துறையின் வளர்ச்சிக்காகவும் நான் தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு, இரவு பகலாக முழு அர்ப்பணிப்புடன் பணியாற்றுகிறேன். உங்களுடைய வாழ்த்துக்கள் எனக்கு இருக்கட்டும். இந்த நம்பிக்கையோடு, என் உரையை நிறைவு செய்கிறேன்.
உங்கள் கைகளை உயர்த்தி என்னோடு உரக்கக் கூறுங்கள்.
பாரத் மாதா கி ஜே!
जो काम किया जा रहा है उसको और गति देने के लिए आया हूं।
— PMO India (@PMOIndia) February 17, 2019
मेडिकल कालेज बिल्डिंग, अस्पताल,
इंजीनिरयिंग कालेज,
पानी की समस्या से मुक्ति दिलाने वाली पाइप-लाइन,
नमामि गंगे के प्रोजेक्ट्स के शिलान्यास और लोकार्पण से यहां मूलभूत सुविधाओं के इंफ्रास्ट्रक्चर को ताकत मिलने वाली है: PM
देवघर में एम्स के बाद आज दुमका, हजारीबाग और पलामू में मेडिकल कालेज का उद्घाटन इन्हीं प्रयासों
— PMO India (@PMOIndia) February 17, 2019
का विस्तार है।
सिर्फ तीन साल पहले की स्थिति ये थी कि झारखंड में 3 मेडिकल कॉलेज थे।
अब आज देखिए, एक ही दिन में 3 मेडिकल कॉलेज खुल रहे हैं: PM
स्कूली शिक्षा हो या फिर उच्च शिक्षा आदिवासी समाज के युवा साथियों को हर प्रकार की सहायता दी जा रही है।
— PMO India (@PMOIndia) February 17, 2019
आचार्य विनोबा भावे विश्व-विद्यालय में सेंटर फॉर ट्राइबल स्टडीज बनने से यहां के समाज और संस्कृति को जानने और आने वाली पीढ़ियों तक समाज के संस्कारों को पहुंचाने में मदद मिलेगी:PM
झारखंड सहित देश के तमाम आदिवासी क्षेत्रों में एकलव्य मॉडल स्कूल खोले जा रहे हैं।
— PMO India (@PMOIndia) February 17, 2019
झारखंड में ऐसे करीब दो दर्जन स्कूल शुरु हो चुके हैं और 70 नए स्कूल खोलने पर काम चल रहा है: PM
झारखंड में बन रहा बिरसा मुंडा संग्रहालय महान स्वतंत्रता सेनानी बिरसा मुंडा की पहचान को समृद्ध करेगा।
— PMO India (@PMOIndia) February 17, 2019
ऐसे संग्राहालय देश के कई राज्यों में बनाए जा रहे हैं, जिसमें केंद्र सरकार मदद दे रही है।
ये म्यूजियम आदिवासी नायकों की याद तो दिलाएंगे ही, साथ में पर्यटन के केंद्र बनेंगे: PM