Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ஜார்க்கண்ட் நிலக்கரி சுரங்க விபத்தில் உயிர் இழப்பு – பிரதமர் துயரம்


ஜார்க்கண்ட் நிலக்கரி சுரங்கத்தில் நிகழ்ந்த விபத்தில் ஏற்பட்ட உயிர் இழப்பிற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி ஆழ்ந்த துயரத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட உயிர் இழப்பு எனக்கு மிகுந்த கவலை அளிக்கிறது. சுரங்கத்தில் மாட்டிக் கொண்ட நபர்களுக்கு எனது பிரார்த்தனைகள். நிலைமை குறித்து ஜார்க்கணட் முதல் அமைச்சர் திரு. ரகுபர் தாஸ்-சிடம் பேசினேன்.

நிலைமையை சீராக்க, ஜார்க்கண்ட் அரசுடன் இணைந்து அமைச்சர் திரு. பியூஷ் கோயலும் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். தேசிய பேரிடர் மீட்பு படை தலைமையகம் இந்த மீட்பு மற்றும் நிவாரண பணிகளில் ஈடுபட்டுள்ளது என்று பிரதமர் தெரிவித்துள்ளார்.