ஜி.எஸ்.டி. முறையை அமல்படுத்துவதற்கு வசதியாக, பல்வேறு சரக்கு மற்றும் சேவைகளுக்கான மேல் வரி மற்றும் கூடுதல் வரியை நீக்கும் வகையில், சுங்கம் மற்றும் கலால் சட்டத்தில் திருத்தங்களைக் கொண்டுவர மத்திய அமைச்சரவை ஒப்புதல்
22 Mar, 2017
பிரதமர் திரு.நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இதில், கீழ்க்காணும் பரிந்துரைகளுக்கு அப்போது ஒப்புதல் அளிக்கப்பட்டது.
சுங்கங்கள் சட்டம், 1962-ல் திருத்தங்களைக் கொண்டுவருவது:
சுங்கங்கள் வரி சட்டம், 1975-ல் திருத்தங்களைக் கொண்டுவருவது:
மத்திய கலால் சட்டம், 1944-ல் திருத்தங்களைக் கொண்டுவருவது:
மத்திய கலால் வரி சட்டம், 1985-யை நீக்குவது: மற்றும்
சட்டங்களில் மேல் வரி விதிக்க வகை செய்யும் பிரிவுகளை நீ்க்குவது அல்லது திருத்தம் செய்வது.
மேற்கண்ட பரிந்துரைகளால், கீழ்க்காணும் பலன்கள் கிடைக்கும்:
சுங்கங்கள் சட்டம் 1962-ல் 108ஏ, 108பி பிரிவுகள் சேர்க்கப்படுகின்றன. இது சரக்குகள் இறக்குமதி அல்லது ஏற்றுமதி தொடர்பான தகவல்களை குறிப்பிட்ட நபர்கள் தெரிவிக்க வழிவகை செய்யப்படுகிறது. இதன்மூலம், ஏற்றுமதி மற்றும் இறக்குமதி அளவை குறைவாகவோ, அதிகமாகவோ மதிப்பிடுவதை கண்டறிய முடியும். நிதியை திரும்பப் பெறும் திட்டம் (Drawback Scheme) உள்ளிட்ட ஏற்றுமதி ஊக்குவிப்பு திட்டங்களை தவறாக பயன்படுத்துவதை கண்டறிய முடியும். சுங்கங்கள் சட்டம் மற்றும் பல்வேறு பிற சட்டங்களை மீறுவதைத் தடுக்க முடியும். ஏனெனில், இந்த சட்டங்களை சிறப்பான முறையில் செயல்படுத்த சுங்கத்துறை அதிகாரிகளுக்கு அங்கீகாரம் அளிக்கப்படுகிறது.
ஜி.எஸ்.டி. முறையை அமல்படுத்துவதால், தேவையில்லாத பிரிவுகள் நீக்கப்படுகின்றன. பலமுறை வரிவிதிப்பு குறைகிறது. எனவே, சட்டங்களில் உள்ள தேவையில்லாத பிரிவுகள் நீக்கப்படுகின்றன அல்லது திருத்தப்படுகின்றன.