பி.எம்.இந்தியா
இஸ்ரேல் பிரதமர் திரு பெஞ்சமின் நெதன்யாகுவுடன் இணைந்து, பிப்ரவரி 25, 2026 அன்று பல்வேறு துறைகளில் சிறப்பான இஸ்ரேலிய கண்டுபிடிப்புகளை வெளிப்படுத்தும் கண்காட்சியை பிரதமர் திரு நரேந்திர மோடி பார்வையிட்டார். இந்த கண்காட்சியில் வேளாண் தொழில்நுட்பம், நீர் தொழில்நுட்பம், பருவநிலை தொழில்நுட்பம், சுகாதார-உயிரி தொழில்நுட்ப, நவீன போக்குவரத்து, செயற்கை நுண்ணறிவு, இணையதள பாதுகாப்பு, குவாண்டம் தொழில்நுட்பம் ஆகியவற்றில் நிபுணத்துவம் பெற்ற முன்னணி நிறுவனங்களும், ஆராய்ச்சி நிறுவனங்களும் தங்களது தொழில்நுட்பங்களை காட்சிப்படுத்தி இருந்தன.
புதுமை தொழில்நுட்பங்களில் ஒத்துழைப்பு என்பது இந்தியா-இஸ்ரேல் இருதரப்பு உறவுகளின் முக்கிய தூணாகும். “இந்தியா-இஸ்ரேல் புதுமை பாலம்” முயற்சியின் மூலம் நவீன கால சவால்களை எதிர்கொள்ளும் வகையில் நவீன தீர்வுகளை உருவாக்க இரு நாடுகளும் இணைந்து செயல்படுகின்றன. இந்த கண்காட்சியை பார்வையிட்ட போது, பிரதமர் திரு நரேந்திர மோடி பல்வேறு நிறுவனங்களின் விஞ்ஞானிகள், தொழில்நுட்ப வல்லுநர்கள், தலைமை செயல் அதிகாரிகள் ஆகியோருடன் கலந்துரையாடினார்.
குவாண்டம் தொழில்நுட்பங்கள் தொடர்பாக இதில் பிரதமருக்கு விரிவாக விளக்கப்பட்டது.
நவீன போக்குவரத்து தொடர்பான ஒரு தொழில்நுட்ப நிறுவனம், சாலை விபத்துகளைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்ட அதன் சென்சார், சிப் தொழில்நுட்பத்தை இந்த கண்காட்சியில் காட்சிப்படுத்தியிருந்தது.
நீர் மேலாண்மை, விவசாயம் ஆகியவை தொடர்பாகவும், நவீன தொழில்நுட்பங்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. காற்றிலிருந்து குடிநீரை உற்பத்தி செய்வதற்கான அதன் தொழில்நுட்பத்தை வாட்டர்ஜென் நிறுவனம் காட்சிப்படுத்தியிருந்தது.
இந்த கண்காட்சியில் தலைமைச் செயல் அதிகாரிகளுடனான தமது கலந்துரையாடலின் போது, இஸ்ரேலை சேர்ந்த நிறுவனங்கள் இந்தியாவுடனான ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான மகத்தான வாய்ப்புகள் உள்ளதாக பிரதமர் குறிப்பிட்டார். இந்தியாவில் முதலீடு செய்வதற்கான வாய்ப்புகளை ஆராயுமாறு பிரதமர் திரு நரேந்திர மோடி அந்த நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2232940®=3&lang=1
***
AD/PLM/RK/RJ
Yesterday in Jerusalem, PM Netanyahu and I visited an exhibition which showcased special innovations from the world of technology. Got a glimpse of pioneering work by Israeli youth in areas such as AI, Quantum, healthcare, cyber security, water resources, agriculture and more.… pic.twitter.com/xNdJxcGKS2
— Narendra Modi (@narendramodi) February 26, 2026
אתמול בירושלים , רוה"מ נתניהו ואני ביקרנו בתערוכה שהציגה מוצרי חדשנות מיוחדים מעולם הטכנולוגיה . קיבלתי הצצה לעבודות חלוציות של ישראלים צעירים בתחומי ה AI, קוונטום, בריאות, ביטחון סייבר, מקורות מים, חקלאות ועוד. עודדתי את החברות הישראליות להשקיע בהודו ולעבוד בשיתוף עם הצעירים… pic.twitter.com/qt1I4of4Z7
— Narendra Modi (@narendramodi) February 26, 2026