Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

டாக்டர் பி.ஆர் அம்பேத்கர் நினைவு நாணயத்தை வெளியிட்டார் பிரதமர்

டாக்டர் பி.ஆர் அம்பேத்கரின் 125வது பிறந்த நாள் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக இரண்டு நினைவு நாணயங்களை பிரதமர் திரு. நரேந்திர மோடி புதுதில்லியில் இன்று வெளியிட்டார். பத்து ரூபாய் நாணயமும் 125 ரூபாய் நாணயமும் அவர் நினைவாக வெளியிடப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் பிரதமர் கூறியதாவது

ஒரு சில நபர் மட்டுமே மறைந்து 60 ஆண்டுகளுக்குப் பின்னரும் மக்கள் நினைவில் உள்ளனர். இந்தியா தற்போது சந்தித்துவரும் பிரச்சினைகளுக்கு தீர்வாக டாக்டர் அம்பேத்கரின் எண்ணங்களை நினைவுக்கு கூறும்போது, அவருடைய தொலைநோக்கு பார்வைக்கும் ஒற்றுமைக்கான நடவடிக்கைகளுக்காகவும் நாம் அவரை மரியாதை செலுத்துகிறோம்.

சமூக நீதிக்கான அவருடைய பங்களிப்பு அங்கீகரிக்கப்பட்டுள்ளது. ஆனால், அவருடைய பொருளாதார சிந்தனைகளுக்கான தொலைநோக்கு பார்வை முழுவதாக புரிந்துக் கொள்ளப்படவில்லை. இது பாராட்டப்பட வேண்டும். நம் நாட்டில் டாக்டர் அம்பேத்கரும் இந்திய அரசியல் அமைப்பு சட்டமும் எப்போதும் விவாதிக்கப்பட வேண்டும். இதன் அடிப்படையில் நவம்பர் 26ம் தேதி இந்திய அரசியல் அமைப்பு சட்ட தினம் கடைபிடிக்கப்படுகிறது.

பெண்களுக்கு அதிகாரம் அளித்தல், இந்தியாவின் கூட்டாச்சி அமைப்பு, நிதி, கல்வி ஆகிய துறைகளில் டாக்டர் அம்பேத்கரின் பார்வையை பிரதமர் பாராட்டினார்.

மத்திய அமைச்சர்கள் திரு. அருண் ஜெட்லி மற்றும் திரு. தவர் சந்த் கேலாட் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

***