Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

டாமன் நமோ விமான நிலையத்தில் நவீன முனையக் கட்டடத்தைப் பிரதமர் திறந்து வைத்தார்

டாமன் நமோ விமான நிலையத்தில் நவீன முனையக் கட்டடத்தைப் பிரதமர் திறந்து வைத்தார்


பிரதமர் திரு நரேந்திர மோடி டாமனில் உள்ள நமோ விமான நிலையத்தில் ஒரு நவீன முனையக் கட்டடத்தைத் திறந்து வைத்தார்.

இந்த யூனியன் பிரதேசத்தின் அதிகரித்து வரும் உள்கட்டமைப்புத் தேவைகளை இந்த புதிய வசதி திறம்பட பூர்த்தி செய்யும் என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார். இந்த முனையக் கட்டடம், இப்பகுதியில் சுற்றுலா, வர்த்தக நடவடிக்கைகள் இரண்டையும் கணிசமாக மேம்படுத்தும் என்று திரு நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

“டாமனின் நமோ விமான நிலையம், இந்த யூனியன் பிரதேசத்தின் வளர்ந்து வரும் உட்கட்டமைப்புத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் ஒரு நவீன முனையக் கட்டடத்தைப் பெறுகிறது. இது சுற்றுலா, வணிக நடவடிக்கைகளை மேம்படுத்தும். இந்த முனையக் கட்டடத்தைத் திறந்து வைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்”

(Release ID : 2269616)

***

TV/PLM/SH